Nov 17, 2009

ஏழாவது அறிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அவளுடைய சரீரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.

பார்ப்பவர்கள் கண்களுக்கு அவள் தெரியவில்லை.

ஒரு சில வினாடிகளுக்கு முன்பு பார்த்தவளை இப்போது காணவில்லை.

அரங்கதிலிருந்த அனைவரும் அரங்கம் அதிர கைதட்டினார்கள். ஒருவருக்கொருவர் ஒருவிதமான சந்தோசத்தில் பார்த்துக்கொண்டனர். ஆச்சரியத்தில் சிலபேர் வாய் மூடாமல் திறந்தே இருந்தன.

பலபேர்களுக்கு நடப்பது நிஜமா இல்லை கனவா என்றே தோன்றியது.

நானும் அந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.

நான் இதுவரை இவையெல்லாம் மூட நம்பிக்கை என்றே சொல்லிவந்தேன், மற்றவர்கள் சொல்லும்போதோ அவற்றை கேலிசெய்து  முற்றிலுமாக மறுத்தவன் நான். இவை நடக்காது நடக்கவே நடக்காது என்று இறுமாப்புடன் அலைந்தவன்,  கடவுள் மேல் நம்பிக்கையிம் கிடையாது வாழ்க்கையில் எதிர்பார்ப்பும் இல்லாமல் அதனால் விதிமேல் பழி சொல்லாமல் இருந்தவன. இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து எனது பலநாள் கொள்கைகளையும்  கேள்விக்கு உள்ளாக்கியது. நேற்று வரை பகுத்தறிவாளன்  என்று என்னை அழைந்தவர்கள், இதை கேள்வி பட்டால் என்ன கூறுவார்கள். இதை எப்படி பகுத்தறிய முடியும்??? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள் ஓட நடந்து கொண்டிருந்தவகைளை பார்த்து கொண்டேருந்தேன்.
சே, இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்க கூடாது. ஒருபக்கம் மனது கூறினாலும் நடந்தவை நன்மைக்கே என்று சமாதனப்படுத்தி கொண்டேன்.

அவளை சந்தித்ததுதான் மிகப்பெரிய தவறு.

சந்தித்த நினைப்பு வந்தது........

எனது வீட்டிற்கு போகும் போதுதான் அவளை பார்த்தேன், நல்ல அழகியாக இருந்தாள்,  ரோட்டில் செல்பவர்கள் அதிகமானோர் அவளைதான் பார்த்துகொண்டு சென்றனர்.  ஏதோ சேல்ஸ் கேர்ள் போல்,  ஒரு வித்தியாசமான் உடை உடுத்திருந்தால்.  அதே உடையில் மேலும் சில பேர்கள் நின்றார்கள். சரி என்னதான் பேசுகிறாள் என்று பார்க்கலாம் என கூட்டத்தின் உள் சென்றேன்.

அதிகமா  பேசிகிறவர்களுக்கு குரல் மாறிடுமே அப்படி இருந்தது அவளின் குரல், ஒருமாதிரி ரஃப்பா, இவ்வளவு அழகான பொண்ணுக்கு இப்படி ஒரு வாய்ஸா? கொடுமை...

என்னதான் பேசுகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

"இறப்பு என்றால் என்ன? மரணம் என்பது நமது உடல் அழிவதுதான்,  உடலுக்குதான் மரணம், உள்ளத்திற்கு அல்ல, நமது ஆத்மா என்றும் அழியாதது மரணம்  என்று நாம் நினைப்பது,  மற்றவர்களின் கண்களுக்கு  தோன்றாய் இருப்பதைதான்.  மற்றவர்களின் கண்களுக்கு ஒரு பிம்பத்தை நமது உடல் என்று  காமித்து  வைத்துள்ளோம்,  அது அழிவதுதான் மரணம் என்று எண்ணப்படுகிறது.  நமக்கு ஆறறிவு இருப்பது தெரியும் தொடுதல், சுவையறிதல், நுகர்தல்,  பார்வை, கேட்பது, பகுத்தறிவு இவைதான் காலம் காலமாக மனிதனுக்கு இருக்கும் அறிவுகள் என்று நாம் நினைப்பது. நாம் நினைப்பது போல் நமக்கு ஆறறிவு மட்டும் இல்லை, அதாவது பகுத்தறிவு கடைசி அறிவு கிடையாது, அதற்கு மேலும் ஏழாவது அறிவு உள்ளது.  பகுத்தறிவு மனிதனுக்கு கடைசி  என்று சொன்னால்தான் மேலும் இதனை பற்றி தேடமாட்டான்.  நமது அறிவால் பல அற்புதங்களை செய்யலாம். சிறந்த பயிற்சி எடுத்து  கொண்டால் நினைத்த நேரத்தில் இந்த உடலை தேவையற்றதாக ஆக்கிவிடலாம்.

நமது எண்ணங்களே ஆன்மா வாழ்ந்து வருகிறது. ஆன்மா என்பது அழியாது மட்டும் அல்ல,  என்றென்றும் நமது எண்ணங்களாக தோன்றுவவையே.

நாங்கள் இங்கு வந்ததுக்கு காரணமே ஏழாவது அறிவை உங்களுக்கு நிரூபிக்கதான். மனிதன் ஏதோதோ கண்டுபுடிக்கிறான், ஆனால் அவனுள் உள் ஒளிந்திருக்கும் சக்தியை மட்டும் உணராதவனாக இருக்கிறான். தூர தொலையில் இருக்கும் இருவர் பேசிக் கொள்ள செல்போன் தேவை இல்லை, மனிதனின் ஏழாவது அறிவை பயன்படுத்தி ஆழ்சக்தி மூலம் பேசிக்கொள்வது மட்டும் அல்ல நினைத்த நேரத்திலே அவர்களிடம் பார்த்தும் கொள்ளலாம். இப்படி பல பல நன்மைகளை உள்ளது.

இதை பற்றி விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறோம். 

அறிந்து கொள்ளுங்கள் ஏழாவது அறிவு"


 
அவ பேச பேச எனக்கு சிரிப்பு சிரிப்பாதான் வந்தது.  ஏழாவது அறிவாம் எட்டவது அறிவாம்... கேக்குறவன் கேணையனா இருந்தா என்ன வேன்னா சொல்லுவாங்க... சிரிச்சுகிட்டே நகர்தேன்... மனசுக்குள் ஒரு சின்ன ஆசை அப்படி என்னத்தான் சொல்லுவாங்க செய்வாங்க, போய்தான் பாக்கலாமே...

அவர்கள் அட்ரஸ் வாங்கி கொண்டு, அடுத்த நாள் குறிப்பிட்ட அரங்கத்திற்கு சென்றேன். மிக அதிகமானோர் வந்திருந்தனர். எனக்கு கடைசியில் நிற்பதற்கே இடம் கிடைத்தது.

அவளும் மேடையில் இருந்தாள்.

ஒரு பெரியவர் மிகவும் சன்னமாக உரையாற்றி கொண்டிருந்தார். கூட்டம் அமைதியாக இருந்ததினால் தெளிவாக கேட்டது.

"நமது மனத்தின் சக்தியை உங்கள் முன்பு நாங்கள் காட்ட போகிறோம், இதற்காக பலநாட்கள் முயற்சி செய்து இவற்றை கண்டுகொண்டுள்ளோம், இவை அழிய கூடாது, மக்களுக்கு போய் சேரவேண்டும். அதனால் இதை இலவசமாக விருப்பமுள்ள மக்களுக்கு போதிக்கிறோம்.




நாம் நினைத்த அடைய பல வழிகளை உபயோக படுத்துகிறோம், உதாரனம் கதவை அடைக்க, நமது எண்ணத்தின மூலம் அதனை செயல் படுத்தலாம்.  ஒரு மிருகத்தை கூட நமது சக்தியின் மூலம் கட்டு படுத்தலாம்.

நமது எண்ணம் மிகவும் சக்திவாய்ந்தது.

இப்போதுதான் விஞ்ஞானம் எண்ணம்தான் மிகவும் வேகமானது என்றும் கண்டுபிடித்துள்ளனர். நமது நாட்டில் இதை முன்பே கண்டு பிடித்திருந்தார்கள்.  எண்ணம்தான் எங்கும் விரைவாக போக கூடியது. அந்த எண்ணமே சக்தியாக ஏழாவது அறிவாக மாற்றம் அடையும்.

முதலில், இவள் (அப்பெண்ணை நோக்கி) அவள் விருப்பபட்ட இடத்திற்கு செல்லபோகிறாள், அவள் போக விரும்பிய இடம் மும்பை, CST ரயில் நிலையம் ஆகும். அவள் இங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைவாள் மும்பை, CSTயில் இங்கிருப்பவர்களின் நண்பர்கள் இருந்தால் அவளை அங்கு சரிபார்க்க சொல்லவும். இவள் ஏழாவது அறிவை உபயோகபடுத்தி தனது உடல் முதற்கொண்டு மாற்ற வல்லமை படைத்தவளாயிற்றாள்."


அவர் கூறியவுடன், அப்பெண் சம்மானமிட்டு அமர்ந்தாள்,  மேஜிக் செய்பவர்கள் ஏதாவது டப்பாவில் அடைத்து செய்வார்கள் அப்படி இல்லாமல் வெளிப்படையான இடத்திலே அமர்ந்தாள்... சிறிது நேரத்திலே மறைய ஆரம்பித்தாள்......


டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........


நல்ல தூக்கம், மணி 8 ஆயிடிச்சா? இப்படிலாம் கனவு வருமா?


பிரஸ் செய்துவிட்டு டீ குடிக்க போனேன்.


தினகரன் போஸ்டரில் கனவில் வந்த பெரியவர் போட்டோ


"பெண்ணை கொலை செய்த குற்றதிற்காக ஏழாவது அறிவு என்ற ஆன்மிக மையம் நடத்தி வந்த பெரியவர் கைது"

0 comments :