Nov 21, 2009

இந்தியா எப்ப முன்னேற?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியா நன்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எப்பவும் வளர்ந்துகொண்டிருக்கும் போலவே எண்ணத்தோணுகிறது. டக்க்குன்னு கோவபட்டு நீ ஒரு தேச துரோகின்னு நினைச்சுறாதீங்க... எனக்கு இந்தியா நல்ல முன்னேறனும், வல்லரசு ஆகுதோ இல்லையோ நல்லரசு ஆகி பசி பட்டினி இல்லாம மக்கள் வாழனும் அப்படீங்கிற ஆசைதான்.

 
பின்ன எதுக்கு இப்படி ஒரு பதிவுக்கு தலைப்பு?

 
மக்கள் எவ்வளவுதான் விரும்புனாலும் சில அரசாங்க ஊழியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளால் நமது விருப்பம் தள்ளி கொண்டேபோகிறது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெரியும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு விசயங்களிலும் அலட்சியமாக இருப்பதை. அவர்கள் ஊழியர்கள் என்று சொல்வதை கூட வெறுக்கிறார்கள் அவர்களை  அதிகாரிகள் என்று கூப்பிட வேண்டுமாம், ஏன் என்றால் எல்லாரையும் அதிகாரம் செய்ய அரசாங்கதால் நியமிக்கபட்டவர்கள் என்று நினைப்பு.

 
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரேசன்கார்டில் மாற்றம் செய்வதற்காக அங்கு உள்ள ஊழியர் சில நாட்கள் அலையவிட்டனர். ரேசன்கார்டில் மாற்றம் செய்து வாங்குவதற்குள் சே ரேசன்கார்டே வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
 
இப்போது பாஸ்போர்ட் முடிந்து விட்டது என்று, ஆன்லைனில் அப்ளை செய்து  அவர்களும் 20/11/2009 10 மணிக்கு என்று நேரம் ஒதுக்கியதால், பரவாயில்லை நாடு முன்னேறிக்கொண்டுதான் வருது போல என்று சந்தோசமடைந்து, பந்தாவா 9:55 பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றேன்.

ஊரில் உள்ள பலபேரு அங்குதான் இருப்பார்கள் போல, அவ்வளவு ஒரு கூட்டம். சரி நமக்குதானே டைம் போட்டு செட்யூல் போட்டு கொடுத்திருக்கார்கள்தானே ஈஸியா உள்ள போயிடலாம்னு நினைச்சு, பெரிரிரிரிய வருசையை கடந்து ஒரு செக்யூரிட்டியிடம் கேட்டா, அவர்தான் அந்த பாஸ்போர்ட் ஆபிசை தாங்கி நிற்பவர் அப்படி ஒரு எரிச்சலான பார்வை... "ந்தா, எல்லாருக்கும் 10 மணிதான் டைம், நீ அங்கே போயி நில்லு" அப்படின்னு ஒரு பெரிய வருசையை காட்டினார். வரிசையா பார்த்து அதிர்ந்து போய் நின்றேன். அந்த வரிசையில் கூட்டமும் கொஞ்சமாத்தான் இருந்தது, சரி எப்படியும் ஒரு 60 நிமிடத்தில் வரிசை முடிந்துவிடும், பாஸ்போர்க்கு அப்ளிகேசன் கொடுத்துடலாம்ன்னு நம்பி நின்றேன். அப்பதான் தெரிந்தது அது அப்ளிகேசனு கொடுப்பதற்கு உண்டான கூட்டம் இல்லை, எந்த வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவாங்களாம் அதற்கு உண்டான வரிசைதான் அது. இந்த கொடுமையா யாராவது அனுபவித்துள்ளீர்களா.

எந்த வருசையில் நிற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு வருசை.

அதுமுடிய 1 மணிநேரம் ஆச்சு. ஒருவழியா ஸ்டிக்கர் ஒட்டியாச்சு அவர்கள் சொன்ன வேறு ஒரு கியுவில் போய் நின்றேன். அங்கும் சரியான கூட்டம் இருந்துச்சு, எனக்கு முன்னாடி வயசான ஒரு அம்மா நின்று கொண்டிருந்தார்கள், பாவம் அவர்களால் நிற்க கூட முடியவில்லை,  பாஸ்போர்ட் ஆபிஸில் எப்படி விண்ணப்பம்  பூர்த்தி செய்வது போன்ற விபரங்கள் எழுதி போட்டிருந்தனர், அதில் ஒன்றுதான் வயதானவர்களுக்கு 2 மாடியில் அப்ளிகேசன் வாங்கபடும்ன்னு போட்டிருந்தது. இதை அந்த வயதான அம்மாவிடம் சொன்னேன். நீங்க "ஏம்மா கியுவில் நிக்கிறீங்க, 2 மாடிக்கு போங்க அங்க வாங்கிகிருவாங்க" அப்படீன்னு, பாவம் அவர்களும் ஏறமுடியாமல் 2 மாடிக்கு ஏறி கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்துட்டாங்க,  அங்கு கொடுக்க முடியாதாம் இங்குதான் கொடுக்கவேண்டுமாம். எனக்கே என்னவே போல ஆயிடுச்சு. என்னாலதானே நடக்க முடியாம மேல் போய்விட்டு வந்துவிட்டார்கள் என்று.

பெரிய கொடுமை என்னவென்றால், மிக அதிகமான கூட்டத்திற்கு,  எல்லாவற்றையும் செக்செய்யும் ஊழியர்கள் 3 பேரே இருந்தனர்.

கூட்டம் அப்படியே நகர்ந்து நகககககககர்ந்து போயிடுச்சு.

அங்கே இருந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு கடுகடுப்பு, எல்லரிடமும் எரிச்சலான வார்த்தைகள்தான். யாரா இருந்தாலும் ஆங்கிலத்தில்தான் பதில், ஆனால் அவர்களுக்குள் தமிழில் பேசிக்கொள்கிறார்கள், என்னமோ இந்தியாவை அவர்கள்தான் காத்துகொண்டிருப்பது போல்.

நான் எனது அப்ளிகேசன் ஃபார்ம் மற்றும் அனைத்து சர்டிபிகேட் எல்லவற்றையும் கொடுத்தவுடன், "Your photos are not good, take photos for passport" இது சொன்னவுடன் நெக்ஸ்ட் அப்படின்னுட்டாரு, நான் உடனே வெறுத்துபோயி வெளியே வந்துட்டேன்.

எப்ப மறுபடி போட்டா எடுத்து மறுபடி லீவு போட்டு அப்ளை செய்ய...

இதுதான் எனது கோபம்.

  • இப்படி செய்தால் ஏஜெண்டிடம் ஏன் அதிக பணம் எடுத்து அல்லது ஏதாவது திருட்டுதனம் செய்து பாஸ்போர்ட் வாங்க மாட்டார்கள்?
  • வயதானவர்கள், கர்பிணிப் பெண்கள் வந்தால் அவர்களுக்கு ஏன் தனி இடம் ஒதுக்க கூடாது?
  • 90% பேர் வேலைக்கு போகிறவர்கள்தான், வரவேண்டும் என்றாலே விடுப்பு எடுத்துதான் வரவேண்டும். சனி, ஞாயறு நாட்களிலும் செயல்பட்டால் என்ன?
  •  ஆன்லைன் அப்ளிகேசன் எதற்கு? அப்ளை செய்பவர்களுக்கு சரியான நேரத்தை குறிப்பிட்டால் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்.
  • அங்கிருப்பவர்கள் உட்கார இடம் இல்லை, கியுவில் நின்றுகொண்டே வரவேண்டியதிற்கிறது, ரயில் முன்பதிவு நிலையங்களில் உள்ளதுபோல் சேர் போட்டால் என்ன?
  • 10 பேர் பார்க்கவேண்டிய வேலையை 3 பேர் பார்த்தால் எல்லருக்கும் வெறுப்புதான் வரும், ஏன் அதிக பேர்களை வேலைக்கு அமர்த்த கூடாது? 

7 comments :

துளசி கோபால் said...

அடப்பாவிகளா...... இந்தியா முன்னேறுதுன்னு கொஞ்சம் கொஞ்சம் இருந்த நம்பிக்கையை இந்த அரசு 'அதிகாரிகள்' வெட்டிவிட்டுருவாங்களோ(-:

மனம் வெறுத்துதான் போகுது இவுங்களுடைய அட் + ஊழியத்தைப் பார்த்தால்(-:

இராகவன் நைஜிரியா said...

கொடுமைங்க...

நீங்க சொல்லியிருப்பது ஒரு சாம்பிள்தாங்க..

கிட்ட தட்ட எல்லா அலுவலகமும் இப்படித்தான் இருக்கு..

தாசில்தார் ஆபிஸ், சப்-ரிஜிஸ்டிரார் ஆபிஸ் போனீங்கன்னா, இன்னும் மோசமா இருக்கும்.

Kevin Matthews said...

சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் என் மனைவி பாஸ்போர்டில் என் பெயரை சேர்ப்பதற்காக மனைவியை உள்ளே அனுப்பி விட்டு சும்மா படிகளில் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் திரும்பி பார்த்தால் எனக்கு பின்னால் ஐந்தாறு பேர் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். எனக்கு பின்னால் நின்றவரிடம் ஏன் இங்கு நிற்குரீர்கள் என்று கேட்டேன். வரிசையில் நிற்பதாக சொண்ணார். அடபாவிகளா வரிசை இங்கில்லை. மேலே போங்கள் என்று அனுப்பிவைத்தேன்.

tamiluthayam said...

இனி ஆயிரம் வருஷம் ஆனாலும் இந்தியா வளர்ந்த நாடாக போவதில்லை. வல்லரசு நாடாகவும் போவதில்லை. உடம்பு நிறைய வியாதிய வைச்சுகிட்டு ஆரோக்கியசாமின்னு பெயர் வைச்சா மட்டும் பயில்வான் ஆக முடியுமா

Barari said...

NEENGA ORU POLAIKKA THRIYAATHA ALU ANTHA SECUIRITY IDAM ORU 50 THALLI IRUNTHAAL VARISAIYIL MUTHAL ALAKA AKI IRUKKALAM ANTHA PHOTO ASAMIYIDAM 200 KODUTHTHU IRUNTHAAL UNGAL OHOTOVO ALLATHU EVAN PHOTO KODUTHTHAALUM OTTI KODUPPAN.ITHUTHAAN INDIA.KADAMAIYAI MEERUVATHARKKU THAAN KAIKOOLI ENBATHU POI KADAMAIYAI SEIVATHARRKU KAIKOOLI KODUKKA VENDUM .

Anonymous said...

உடம்பு நிறைய வியாதிய வைச்சுகிட்டு ஆரோக்கியசாமின்னு பெயர் வைச்சா மட்டும் பயில்வான் ஆக முடியுமா

:)

அன்புடன் மலிக்கா said...

கனவுகாணுகிறோம் முன்னேறிவிடுமென்று..
கனவாகவே ஆகாமலிருந்தால் சரியே??????