Dec 6, 2010
Nov 29, 2010
கண்டிப்பாக செய்ய வேண்டிய சாலைவிதி
நான் பார்த்த வரை, சென்னையின் மற்றும் அனைத்து மாநகரங்களின் போக்குவரத்துக்கு மிக தேவையான ஒன்று, மஞ்சள் பெட்டி பகுதி (Yellow Box System) கொண்டுவருவதாகும். இது எதற்கு என்றால் நான்கு ரோடு சந்திக்கும் பகுதி என்றால் நேராக செல்பர்கள் குறுக்காக செல்பவர்களுக்கு தோதாக நிற்க வேண்டும், அதாவது மஞ்சள் ஒளிந்தவுடன் நிற்க ஆரபித்து, சிவப்பு ஒளிரும் போது நின்றுவிட வேண்டும் அதுதான் முறை, ஆனால் என்ன நடக்கிறது என்றால் ஒருவர் சீக்கிறமாக சென்றுவிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் செல்லும் வழியை அடைத்து கொள்வார்கள்.
Aug 15, 2010
கண்தானம் - ஒரு அருமையான குறும்படம்
நான் சமிபத்தில் கண்தானத்தை பற்றிய ஒரு குறும்படத்தை பார்க்க நேர்ந்தது எனது நண்பர் ஜஸ்டின் இயக்கியுள்ளார். அனைவரும் இதை பார்க்க வேண்டும் என்பதற்ககவே இப்பதிவு.
http://www.youtube.com/watch?v=QJhoYxjEXRs
"கறுப்பு வெள்ளை" என்பதை கலர்புல்லாக காமித்து ஆரம்பம்பமே மிகவும் அசத்தலாக ஆரம்பித்துள்ளார், ஹாஸ்பிட்டலில் அஹமது என்பவர் படுத்திருப்பது போல ஆரம்பிக்கின்றது இப்படம். அஹமது என்பவரை கேமரா காமிக்க வில்லை, அதே நேரத்தில் மற்றவர்கள் கூப்பிடுவதை வைத்து படுத்திருப்பவர் அஹமதுதான் என்று தீர்மானிக்கலாம். அஹமதுவை தனது அப்பா, சகோதரன், உறவுகாரர்கள் மற்ற நண்பர்கள் கூப்பிடும்போது படத்தின் நிறம் ஒரு வேறு பட்ட நிறத்தில் இருக்கிறது... அனைவரையும் நிழல்படமாகவே காமித்துள்ளார். யார் யாரோ கூப்பிட்டும் பார்க்காத அஹமது தனது அண்ணன் மகள் வந்து கூப்பிடவுடன் கண்திறக்கிறார், அதாவது முதன் முதலில் கண் திறக்கிறார், அனைத்தும் கலருக்கு மாறுகின்றன.
தானம் செய்தவரின் போட்டோவுடன் அவரின் கண் இல்லாமல் விரிகிறது அடுத்த ஷாட், தானம் செய்தவர் பெயர் "முத்து குமார்" ஒரு போட்டோகிராபர், கலரை எப்படியெல்லாம் அவரின் கண்களால் பார்க்கிறார் என்று வருகிறது. ஒரு ஆக்சிடன்ட் மூலம் இறந்துவிட்ட "முத்து குமார்" உள்ள கண்ணை எடுத்துதான் அஹமதுக்கு பொருத்துகிறார்கள். பார்வை கிடைத்வுடன் தனது அப்பா, சகோதரன், உறவினர், நண்பர்கள் யாரையும் பார்க்காத அஹமது தனது அண்ணன் மகளை மட்டும் பார்கிறார்.
35 வருடங்களாய் தன் கூட இருந்த சொந்த பந்தம் எதுவும் உதவ வில்லை, நண்பர்கள் உதவவில்லை என்கிற ஆதங்கமான பேச்சாக அஹமதுவின் குரல் ஒலிக்கிறது.
அவன் இறந்தாலும்
என்னுடன் இருக்கிறார்...
அவனின் கண்ணை கொடுத்துவிட்டு...
நானும் வாழ்வேன்
அவன் கண்ணை
இன்னொருவனுக்கு கொடுத்துவிட்டு...
என்ற கவிதையுடன் முடிவடைகிறது.

எனக்கு பிடித்தமான படம், without "I" cant be vision
உங்களாலும் மற்றவர்களுக்கு ஒளி ஏற்ற முடியும்
http://www.sankaranethralaya.org/eye-donation-faq.html
http://www.aravind.org
Aug 13, 2010
சாவு கண்டிப்பா உண்டு உங்க வீட்டில்

Today is Friday and 13th, Say GOD SAVE ME & forward this to 10 people else death will definitely occur in your family. No stupid comedy please send back this sms.

வர வர மொபயிலில் SMS தொல்லை அதிகமாய் விட்டது, எல்லாத்துக்கும் SMS அனுப்ப ஆரம்புச்சுட்டாங்க. வீடு லோன் இப்ப அதிகமா வருது... எப்படி இதெல்லாம் தடை செய்றதுன்னு தெரியலை, மெயிலில் இருப்பதுபோல் ஸ்பாம் இருந்தால் நல்லாருக்கும் :)
சரி நார்மலான SMS வந்தா உடனே அழித்திடலாம், ஆனால் எனது நண்பருக்கு வந்தது போல் இருந்தால். எதுக்கு இப்படி கிருக்கு ஆட்கள் இருக்க வேண்டும்? "இதை செய் இல்லாட்டா சாவு கண்டிப்பா உண்டு" என்ன ஒரு பயமுறுத்தல், இவர்களை போலீஸில் ரிப்போர்ட் செய்ய யாராவது வழி சொல்லுங்களேன் பிளீஸ்.
விதி சரிதானா?
வேறு ஒரு தளத்தில் இதை பார்த்தேன், பிடித்திருந்தது... அதான் பகிறலாமே என்று...
முதலிலே சொல்லிவிடுகிறேன், கடவுள் மேல் எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது, ஓரிறை கொள்கை கொண்டுள்ளேன். என்னுடைய கடவுள் நம்பிக்கையவும் இதோடு தொடர்புபடுத்தாதீர்கள்.
சரி விதி ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
விதி சரிதானா?
மிகவும் குழப்பதிற்கூறியது.
அனைவராலும் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு காரணத்தினால் விதியின் மேல் பாரத்தை போட்டுள்ளுனர்.
அனைத்து மதத்தினரும் விதியை ஏற்றுக்கொண்டுள்ளனர்… அதாவது மத நூல்கள் கூறியதில் ஏதாவது ஆராய்ந்து கேள்வி கேட்டோம் ஏன்றால், உடனடியாக விதியைதான் காரணம் காட்டுவார்கள். இது மட்டுமல்ல, நம்மால் ஏற்றூக்கொள்ள முடியாத, புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று நடக்கும் போதும் விதிதான் பழியை ஏற்றுக்கொள்கிறது.
பாவம் விதி, பாவப்பட்டு பாரம் சுமக்கின்றது.
நமக்கு அறியாத நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு விசயங்கள் உலகத்தில் நடந்து கொண்டுள்ளன… அனைத்துக்கும் விதியை காரணம் காட்டமுடியுமா?
விதியின் படிதான் அனைத்தும் நடக்கின்றனவா?
விதி ஏற்றுக்கொள்ளும் அனைத்து மதவாதிகளும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், ஆதாவது, விதி கடவுள் நம்பிக்கையை தகர்த்துவிடும்.
விதியின் படி எது நடக்க இருந்த்தோ, அதுதான் நடந்த்து.
இப்போது நான் விதியை நம்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம், நான் எழுதும் இந்த பதிவும் முன்பே நான் இவ்வாறு எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்ட்தாருக்கும். ஆதாவது, விதியை நான் தூற்றி எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்டது.உலகத்தில் நடக்கும் விசயங்கள், முன்பே தீர்மானிக்கப்பட்டது, நாம் செய்யும் நன்மையும் தீமையும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை. இதன் மூலம், நன்மை செய்பவர்களே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது அடிபட்டு போகின்றது இல்லயா? விதியை நம்பும் பொழுது, இவற்றையும் நம்ப வேண்டயதுள்ளது.
நன்மை செய்யும் ஒருவர் சொர்கத்திற்கு செல்வார் என்பதும், தீமை செய்யும் ஒருவர் நரகத்திற்கு செல்வார் என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபடுகிறது. கடவுள் ஒருவர் செய்த நன்மை தீமையை பொருத்து தீர்ப்பளிப்பார், ஆனால் விதியின் படி ஒருவர் எங்கு செல்ல போகிறார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன்படி கடவுளுக்கே தீர்ப்புக்கே ஒரு கேள்விக்குறி? கடவுள் ஏன் நரகத்திற்கு செல்பவர்களை படைக்க வேண்டும்? இன்னார்தான் சொர்கத்திற்கு செல்பவர்கள் என்று எவ்வாறு முடிவெடுக்க படுகிறது. விதியின் படி ஏன் நரகம் செல்பவர்கள் தீமைகளால் ஆழ்படுகின்றனர். விதியை நம்பினால் இவற்றையும் நம்ப வேண்டியதுள்ளது.
இதை படிக்கும் போது மிகவும் குழப்பமாக தோன்றலாம், ஆனால்.... உண்மையாகவே உள்ளது, பொதுவாக எல்லா மதத்திலும் எல்லாம் உன் விதிபடிதான் நடக்கும் என்பார்கள் அல்லது கோள்களின் படி நடக்கும் என்பார்கள் எப்படியோ நமது வாழ்க்கையை வேறு சில விசயங்கள்தான் தீர்மானிக்கின்றன, ஆனாலும் அதை நம்ப(லாம்???) கூடாது.
கஷ்டகாலம் படுச்சவுடனே தலை சுத்த ஆரம்புச்சுடுச்சு :(
மத நம்பிக்கையின் படி, நல்லது செய்தால் சொர்க்கமும்/முக்தியும்; கெட்டது செய்தால் நரகமும்/மீண்டும் பிறப்பு கிடைக்கும் இல்லையா? இப்போது ஒருவர் ஏதோ நல்லது செய்கிறார் என்றால் அவர் ஏற்கனவே நல்லது செய்வார் என்று தீர்மானிக்க பட்டுள்ளது இல்லையா, அதே போல் ஒருவர் ஒருவரை கொலை செய்து விட்டார் என்றால் அதாவது தப்பு செய்துவிட்டார் என்றால் ஏற்கனவே இது தீர்மானிக்க பட்டதாகத்த்னே அர்த்தம் அதாவது இன்னார் இன்னாரால் கொலை செய்யபடுவார் என்று, அப்படி கொலை செய்பவருக்கு தீமையிம் செய்யப்பட்டவர் வேறு ஒன்றையும் அடைவார்கள் விதி/கோள்கள் படி. சோ கொலை செய்தவர் தண்டனைக்கு உள்ளாகிறார் அதாவது நரகத்திற்கோ மீண்டும் மனித பிறப்போ எடுக்கிறார், அப்படி என்றால் இன்னார்தான் இப்படிதான் என்று ஏற்கனவே தீர்மானிக்கபட்டுள்ளது இல்லையா?
இதை நினைத்தாலே மிகவும் குழப்பமாக உள்ளது, தயவு செய்து இதை பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் மிகவும் நன்று.
Aug 9, 2010
இந்தியா 2020

சமிபத்தில் டீ குடிப்பதற்காக சென்றிருந்த போது அங்கு இருந்த நான்கு பேர், எப்படியும் இந்தியா 2020ல் வல்லரசு ஆகிடும் என்கிற நிலையில் பேசிக் கொண்டிருந்தனர், நாமதான் சும்மா இருக்க மாட்டோமே, உடனே நான் ஆமா வல்லரசுன்னா என்ன என்றேன்? அங்கு இருந்த யாருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை, வல்லரசுன்னா வல்லருசுதான் அமெரிக்கா போல என்றார்கள்.. அதாவது மற்ற நாடுகளை கட்டுபடுத்த கூடிய அதிகாரமா? அல்லது எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கின்ற அதிகாரமா என்றேன்? அப்படி இல்லை, ஆனாலும் அப்படிதான் என்ற மலுப்பலுடன் பதில் சொன்னார்கள், உடனே இப்ப இந்தியன்தான் உலக அளவில் பணக்காரனாக இருக்கின்றான், இந்தியாவில்தான் அனைத்து செல்வாக்கும் இருக்கு, எந்த நாட்டின் மீது ராக்கெட் ஏவுகிற சக்தி நமக்கிருக்கும் இப்படி சொல்லி கொன்டே போனார்கள், உடனே நான் உலக அளவில் பணக்காரனாக இருக்கிற மும்பையில்தான் உலக அளவில் பிச்சைக்காரனாக இருப்பவனும் இருக்கின்றான் என்றேன்... என் மீது கோபம் போல் உடனே எழுந்து சென்று விட்டார்கள்.
எனக்கு தோன்றியதெல்லாம், வல்லரசு வல்லரசு என்கிறார்களே அப்படின்னா என்ன??? ரோட்டோரங்களின் படுத்து உறங்குபவர்கள் அதிகதிகம் உள்ள நாடு நமது நாடு. சமிப இரவில் நான் பார்க்க நேர்ந்தது, ஒரு ஏதோ ஒரு வண்டி (குப்பை அள்ளும்) அதன் உள்ளே இரு குழந்தைகள் உறங்கினார்கள் அந்த வண்டி கொசு வலையால் போர்த்த பட்டிருந்தது, வெளியில் அந்த குழந்தைகளின் அப்பவும் அம்மாவும் கொசு கடிக்க கடிக்க தூங்க முயற்சி செய்தார்கள்... உடனே நான் அவரிடம் ஏன் உங்களிக்கு வீடு இல்லையா ஏன் இங்கு தூங்கிறீர்கள் என்றேன்? அவர் எதுவும் பேசவில்லை, அவர் மனைவிக்கு யார் மீது கோபமே உடனே "எங்களுக்கு இதான் வீடு, எங்க வேன்னா தூங்குவோம், யார் யாருக்கு வீடு கட்டி கொடுக்கிறாங்க எங்களுக்கும் ஒரு வீடு இந்த அரசாங்கம் தருதா, ஏன் நீ உங்க வீட்டுக்கு கூட்டிக்கு போயேன்" என்றார்கள்.
இவர்களை போல் பல பேர் வீதிகளில் வாழ்கின்றனர்... என்ன ஒரு கொடுமை அல்லவா? சில வயதானவர்களை பார்த்தால் மிகவும் மனது வலிக்கும், அதுவும் பசிக்காக கை ஏந்தும் மனிதர்களை கண்டாலோ, அப்படி ஒரு கஷ்டமா இருக்கும், அவர்களை கடக்கும் போதெல்லாம் அப்படியே மனது வலிக்கும், ஒரு குற்ற உணர்சியாவே இருக்கும், ஏதும் செய்ய முடியவில்லையே என்கிற வருத்தமான மனநிலையில் இருப்பேன்.
இந்த மக்களின் நிலமையை மாற்றிவிட்டு இந்தியா சொல்லி கொள்ளட்டும் வல்லரசு என்று... நமது நாட்டில்தான் ஏழை கடைசிவரை ஏழையாகவே இருக்கிறான், பணம் இருப்பவனிடம் பணம் சேர்ந்து கொண்டே போகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் முறை அல்லவா? கல்வியில் சமத்துவம் வேண்டும் என்பதற்காகத்தான் யூனிபார்ம் என்கிற முறையை கொண்டு வந்தார்கள், ஆனால் பணம் இருப்பவனுக்கு ஒரு சமத்துவம் மற்றவர்களுக்கு ஒரு சமத்துவம் என்று ஆகிவிட்டது நமது நாட்டில், இப்படி ஆரம்ப நிலையிலே பல்வேறு வேறுபாடுகள்... சில நாடுகளில்(வல்லரசு என்று சொல்லி கொள்ளும்) ஒரு மாணவனின் படிப்பு செலவு அனைத்தையும் அரசாங்கமே எடுத்து நடத்தும், ஆனால் இங்கு?
நீதி எல்லாருக்கும் பொது, சட்டம் கண்டிப்பா கடமையை செய்யும் என்பார்கள், ஆனால் அந்த சட்டம் பணம் இருந்தால் வாயை மூடி கொண்டுவிடும் உதாரணம் எல்லாம் தேவை இல்லை, நீதிபதியே கொள்ளை அடிக்கிற நாடு நம்நாடு, குஜராத் கலவரத்தில் காரணகர்த்தாவ இருக்கிற ஒருவரே இன்னும் முதலமைச்சராக இருக்கிறார், சிபிஐ அவர் மந்திரி சபையில் இருக்கும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து அதை இங்கு நடத்தலாமா வேறு மாநிலங்களுக்கு மாத்தலாமா என்று முதலமைச்சராக்காக நீதியை மாற்றுகிறார்கள்.
தமிழ்நாடு அரசாங்கம் சில பேர்களுக்கு இலவச வீடு கட்டி தறுகிறது, கொடுமை என்னன்னா ஏற்கனவே அவர்களுக்கு வீடு இருக்கிறது, ஏன் இந்த ரோட்டு ஓரத்தில் இருப்பவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது ரோட்டு ஓரத்தில் இருப்பவர்கள் என்னத்த ஆடி பாடி மகிழ்விக்க போறாங்க என்கிற மனநிலையா? அதானே டான்ஸ் ஆடியும் புகழ்ந்து பேசினால்தானே இலவச வீடு கிடைக்கும்...
பல கிராமங்களில் இன்று வரை மின்சாரமே கிடையாது அப்படியே இருந்தாலும் அதிக பட்சம் மிக குறைந்த அளவே அங்கு இருக்கும், நகரத்திற்கு ஒரு முறையும் கிராமங்களுக்கும் ஒரு முறையும் பின்பற்றும் நாடுதானே நமது.
அன்னிய நாடு எது சொன்னாலும் தலை ஆட்டி அதன்படி செயல் படும் அரசியல் வாதிகளை கொண்ட நாடு நமது, போபால் விசவாய்வு தாக்கி இறந்தவர்களுக்கு இன்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை, இதெல்லான் வேண்டாம் என்று தனது தேவைக்காக போராடும் மக்களை மாவோயிஸ்ட்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டு கொல்லும் நாடுதானே நமது?
நமது நாடு முன்னேறினால் மிகவும் சந்தோசமே, ஆனால் எல்லாருக்கும் வாழ்வு சந்தோசமா இருக்கனும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து கிடைக்கனும், அத்யாவசிய தேவைகளான நீர், வீடு, மின்சாரம் இவைகளை கொடுத்து விட்டு சொல்லி கொள்ளட்டும் வல்லரசு என்று.

Aug 6, 2010
இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்
Jul 27, 2010
பூமியின் கதை

லோடு ஆவதற்கு நேரம் ஆகலாம், பொறுமை பிளீஸ்...
Jun 16, 2010
ரயில்வேயில் நடக்கும் கொள்ளை
நடுத்தரவர்க்கம் மட்டுமல்லாது அனைவரும் விரும்பி பயணம் செய்வதும், விரும்பவதும் ரயிலில்தான், ஏனென்றால் அதனின் வேகமும், அனைத்து வசதிகளும்... பயணம் செய்து கொண்டிருக்கும் இப்படி கிடைக்கும் வசதிகள்தான் அனைவரையும் ரயிலை மிகவும் விரும்ப வைக்கின்றன... மிக முக்கியமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலையில் உயராமல் இருக்கும் ரயில் கட்டணத்தின் விலைதான் நடுத்தரவர்க்கம் மற்றும் ஏழை மக்கள் மிக விரும்ப ஒரு காரணம் ஆகும்!

சமிபகாலமாக, ரயிலில் பயணம் செய்வது கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, அதுவும் மிகவும் கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, ஜெனரல் கம்பார்ட்மெண்ட் எனப்படும் பொதுப்பெட்டி ஒரு ரயிலில் 4 தான் அதிக பட்சமாக இருக்கிறது, அந்த 4 பெட்டிகளிலும் அதிகபட்சமாக 300 நபர்கள் முதல் 350 நபர்கள் வரை இருக்கலாம், ஆனால் இப்போது என்ன நடக்கிறது ஒரு பெட்டியிலே 400 நபர்கள் வரை இருக்கிறார்கள்... இதெல்லாம் சாதாரன நாட்களில்தான் ஏதாவது திருவிழா நேரம் என்றால் தொலைந்தோம்... படியில் தொங்குவதற்கு கூட இடம் இருக்காது, அவ்வளவு கூட்டமாக இருக்கும்.

இரண்டாம் படுக்கை வசதி என்பது 3 மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் மட்டுமே நன்றாய் படுத்து கொண்டு போகலாம், இல்லையென்றால் கொடுமைதான். புக்கிங் ஏஜெண்ட் எப்பொழுது நியமித்தார்களோ, அப்போது ரிசர்வரேசன் என்பது அதிக பணம் கொடுப்பவர்களுக்கு என்பதாகிவிட்டது... ஒரு வாரத்தில் எங்காவது பயணம் போகவேண்டியது இருந்து, ரயில் போய் ரிசர்வ் செய்து விடுங்கள் பார்ப்போம், கண்டிப்பா கிடைக்காது, அதே நேரத்தில் ஏதாவது ஒரு ரயில் புக்கிங் ஏஜெண்ட் பார்த்து கூட 200 அல்லது அதனின் கூடவோ கொடுத்தால் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்வது உறுதி. எப்படி அவர்களுக்கு இதனை கொடுக்க முடிகிறது, எல்லாம் ரயில்வேயில் தவறுகள்தான்... ரிசர்வ் செய்யும் ஒருவர், ஒரே நேரத்தில் 6 பேர்களை ரிசர்வ் செய்யலாம், ஆனால் ஒருவர் மட்டும் ஐடி கார்ட் காமித்தால் போதும், புக்கிங் ஏஜெண்ட் ஏதாவது பெயரிலும் வயசிலும் டிக்கட்டை புக் செய்து விட்டு மற்றவர்களுக்கு வழி இல்லாமல் செய்து விடுகிறார்கள்.
உங்களுக்கு மிகவும் அவசரமாய் போக வேண்டுமா???
தட்கல் கூட கிடைக்க வில்லையா???
புக்கிங் ஏஜெண்ட் கூட உதவ வில்லையா???
கவலை வேண்டாம், சாதாரன டிக்கட் எடுத்து கொண்டு ரிசர்வ் கம்பார்ட்மண்டில் ஏறி டிடியை (டிக்கட் பரிசோதிப்பர்வரை) கொஞ்சம் கவனித்தால் போதும்... எப்படிதான் இவர்களுக்கு மட்டும் சீட் இருக்குமோ? பணம் தின்னும் கழுகாக மாறி வருகிறார்கள். ஒரு சிலபேர் நல்லவர்களாய் இருக்கலாம், ஆனால் மிக அதிகமானோர் கவனிப்புக்கு மயங்குறவர்களே... பொதுவாக RAC 1 என்று இருந்த்தால் ஏதாவது ஒரு டிக்கட் கேன்சல் ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும், அதுதான் நியாயமும்.. ஆனால் TTE அப்ப்டி செய்வதில்லை, பணம் இருக்கா, கண்டிப்பா சீட் கிடைக்கும், இல்லையா சீட்ல இருக்கும் முனை கூட கிடைக்காது.
இப்படி பட்ட கொள்ளைகள் ரயில்வேயில் நடந்து வருகிறது... யாரும் இதற்கு எதிராக எந்த விதமான ஆக்சனும் எடுக்கவில்லை.
பல நாடுகளில் வேலையை செய்ய வேண்டாம் என்றால்தான் லஞ்சம்
ஆனால், இந்தியாவில்தான் வேலையை செய்ய லஞ்சம்.இந்தியன் படத்தில் வரும் வசனம்
Jun 9, 2010
என்ன உலகம் இது???
Jun 6, 2010
புகையில்லா சென்னை

மாநகரங்களில் வசிப்பவர்கள் இழக்கவேண்டிய ஒன்று ஆரோக்கியம், ஆமாம் சென்னையில் ஆரோக்கியத்தை இழந்துதான் பணத்தை(?) சேர்த்துக் கொண்டிருக்கிறோம். சிகரட் மட்டும் மட்டும் புகை விடுது என்பவர்கள்...

பஸ்கள், லாரிகள் வெளியுடும் கரும்புகை


சென்னையில் ஓடும் கார், ஆட்டோக்களின் புகை

இண்டஸ்ட்ரீஸ் வெளியிடும் புகை

பண்டிகையின் போது வெளியும் புகை
இப்படி புகையோ புகை, கண்டிப்பா இவை எல்லாம் நமக்கு பகைதான், ஆனால் எதிர்ப்பவர்கள் ஒன்றை மட்டுமே ஏன் எதிர்க்க வேண்டும்? புகையில்லா சென்னை என்பது, எங்கும் புகை இல்லாமல் இருப்பதை குறிக்கும் அல்லவா? சிகரட்டில் வெளிப்படும் புகை ஒன்றும் ஓசன் படலத்தை ஓட்டை போடுவதில்லை, புகைப்பவர்களின் இதயத்தில் ஓட்டை போடுவதோடு சரி, ஆனால், மேற்கண்ட வழிகளில் வெளிப்படும் புகை ஓசன் படலத்தை அல்லவா ஓட்டை போடுகிறது, இதனால் என்ன பிரச்சனை என்பவர்கள் வருங்கால சந்ததிக்காக நாம் சேர்த்து வைப்பது கொடிய நோய் நொடிகள்தான், போராடுபவர்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் மிகவும் நன்றாய் இருக்கும்!
நமது நாட்டில் அரசாங்காத்தின் பல்வேறு தூண்கள் பேருக்காகவே இருக்கின்றன... அதில் ஒன்றுதான், "மாசு கட்டுபாட்டு வாரியம்"... இதன் செயல்பாடுகளை யாராவது எடுத்து சொன்னால் தேவலை, பேருதான் "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஆனால் செயல்பாடுகளோ "மாசு கட்டுபடுத்தா வாரியம், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டில் நமது நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா? 123வது இடம். அவ்வளவு சுகாதாரமாக நமது நாட்டை வைத்துள்ளோம். "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஒழுங்காகவே செயல்பட்டு இப்படி புகை வெளியும் பஸ், காரு, ஆட்டோ போன்றவற்றை தடை செய்து, கொடுரமாக புகை வெளியிடும் இண்டஸ்ட்ரீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.
கடைசியா இரண்டு தகவல்
- சிக்ரட் குடிப்க்கும் ஆண்களுக்க் ஆண்மை குறைவு ஏற்படுமாம், பெண்களாய் இருந்தால் பெண் தன்மையே பரிபோகுமாம்.
- சிக்ரட் குடிப்பவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் அது குழந்தையின் உயிரை கூட பரித்து விடுமாம்,சமிபத்தில் வந்த தந்தியில் இருந்த தகவல்.