"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும், பெற்றோருக்காவும், உறவினருக்காவும், அனாதைகளுக்காவும், ஏழைகளுக்காவும், நாடோடிகளுக்காவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன்"
குர் ஆன் (2: 215)







நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.







ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

Jan 4, 2010

கொண்டாடின தப்பா?

புது வருடம் ஆரம்பம் எப்படி போச்சு? நல்லா சந்தோசமா கொண்டாடிருப்பீங்க... நானும் அப்படிதான். :) ஒரே ஜாலிதான்.
 
எல்லா வருசம் போல, இந்த வருசமும் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்.
 
புது வருடத்தை கொண்டாட கூடாதுன்னு சில கூட்டம்... எல்லா மதத்திலிருந்தும் சொல்ல ஆரம்புச்சுட்டாங்க.
 
 

 
ஏன் கொண்டாட கூடாதுன்னு கேட்டா பதில் இல்லை, ஆனா கொண்டா கூடாது...
 
இப்போதய கலண்டர் படி நாம் ஆங்கில முறையை பின்பற்றுகிறோம்... அரசு எழுதுகிற டாக்குமெண்ட்ஸ், பொது நிறுவனங்கள் வெளியிடும் ஏதாவது டாக்குமெண்ட்ஸ் போன்றவற்றில் இடம் பெறுவது ஆங்கில தேதியே... எங்காவது வேறு முறையில் எழுதுகிறார்களா? பின்பற்றும் அனைத்தையும் ஒரு மாதிரி வைத்துகொண்டு... அந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்கினால் மட்டும் கொண்டாடாதேன்னு சொல்லிறதுக்கு ஒரு கூட்டம்... ஏதாவது சொல்லி மக்களை பிரிக்கனும் அதுதான் நோக்கம்.
 
உஸ்ஸ்ஸ்... சந்தோசமா எழுத வந்தேன், மக்களின் சில பேர்களை நினைத்தாலே சந்தோசம் சந்தோசமில்லாம போய்டுது...
 
நல்லா கொண்டாடுவோம்!
இப்பதிவு தடவை படிக்கபட்டுள்ளது



Share

3 பின்னூட்டம்:

கோவி.கண்ணன் said...

//இப்போதய கலண்டர் படி நாம் ஆங்கில முறையை பின்பற்றுகிறோம்... அரசு எழுதுகிற டாக்குமெண்ட்ஸ், பொது நிறுவனங்கள் வெளியிடும் ஏதாவது டாக்குமெண்ட்ஸ் போன்றவற்றில் இடம் பெறுவது ஆங்கில தேதியே... எங்காவது வேறு முறையில் எழுதுகிறார்களா?//

அனைவருடைய பிறந்த நாளும், அனைத்து ஆவணங்களும் ஆங்கில நாள்கணக்கில் தானே இருக்கிறது.

நான் ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடுவேன் !

ஹேப்பி நியூ இயர் !
:)

கிளியனூர் இஸ்மத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

..:: Mãstän ::.. said...

<<<
அனைவருடைய பிறந்த நாளும், அனைத்து ஆவணங்களும் ஆங்கில நாள்கணக்கில் தானே இருக்கிறது.

நான் ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடுவேன் !

ஹேப்பி நியூ இயர் !
:)
>>>

ஆமாம் நன்றாய் கொண்டாடுவோம் :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் கோவிஜி.

<<<
கிளியனூர் இஸ்மத் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
>>
Happy new year Ismath