Jan 25, 2010

தமிழன் இளிச்சவாயனா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வர வர தமிழன் இங்க வேலையே செய்ய முடியாது போல இருக்குது, இப்பவே ஹிந்திக்காரன் சென்னையில எல்லா இடத்திலையும் வந்துட்டான், சென்னையில தமிழ்நாடு வகை சாப்பாடு போயி ஹிந்தி டைப்பு சாப்பாடு வந்துடுச்சு, தமிழ்படங்கள் அதிகமா வெளிட்டது போக நிறையவே ஹிந்திபடங்களா வர ஆரம்புச்சுடுச்சு... இங்க பிழைக்க வந்தவன் எல்லாம் இங்க உரிமை கொண்டாட ஆரம்புச்சுட்டான். இப்பவே பல பகுதிகளுக்கு தமிழன் வீடோ நிலமோ வாங்க முடியாத நிலமை, சென்னையில சில இடங்கள் இருக்கு மார்வாடியை தவிர யாரும் அங்கு குடி போக முடியாது, தமிழ்நாட்டுடைய மொழியா ஹிந்தியை ஆக்கிடுவாங்க போல இருக்கு... இப்ப வரைக்கும் லங்காவுல தமிழனை அடிக்கிறானுக, மலேசியாவுல அடிக்கிறானுக, அப்ப அப்ப மகராஷ்ட்ராவுலயும் கர்நாடகத்திலயும் அடிப்பானுக. நாம எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கனும் அது போதாதுன்னு இங்க வேற வந்து அடிக்கிறானுக... நாமதான் எல்லாதையும் பொருத்துகிட்டு போகிட்டு இருக்கிறோம்... இந்தியாவவது மயிராவது??? எல்லாம் வேஸ்ட்... இப்படி தமிழன் அடிவாங்கிறத செண்ட்ரல் கவர்மண்ட்ல இருந்து எவனாவது கேட்டுறானா??? ஹிந்து பேசுறவனுல்லாம் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, PM குரல் கொடுக்குறார்,    இங்க அரசியல் நடத்துறவனுக எல்லாம் தே... பசங்க, ஆரம்பிக்கம்போது அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம்னு சொல்வானுக ஆனா எல்லாரும் வேஸ்ட்... தமிழன் நல்லா இருக்கனும்னா தனிநாடு வேனும், இல்ல மகராஷ்ட்ராவுல ராஜ்தாக்ரே செய்யிறது போல நாமளும் செய்யனும்... இப்படி ரயிலில் ஒருவர் பொதுவாக பேசிக்கொண்டுவந்தார்...


அவர் சொல்ல வந்தது எனக்கு புரிந்ததுதான், கருத்தை கேட்க கேட்க மனது ஏதோ கொதிக்க ஆரம்பித்தது, அவர் நிறுத்தவே இல்லை, அதிகமாக பேசினார், நியாமாத்தான் இருந்தது... ஆனாலும் மனது கேட்கவேவில்லை, ஏனோ கருத்தை ஒப்பு கொள்ள மறுக்கிறது மனது...


நானே என்னுள் இரண்டாக மாறி சண்டையிட்டு கொள்கிறேன்...
ஆமா, அவர் சொல்வது சரிதான். தமிழன் ஏமாளிதான், எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கதான் செய்வான், கேட்பதற்கு நாதி இல்லாமல் போயிடுச்சுதான்... போற இடத்துல அடிவாங்குறாண்டா, சொந்த இடத்திலும் அப்படிதான்.இதுக்குலாம் ஒரு விடிவு வரனும்னா மத்தவன் நம்ம இடத்துல நுழைய விடாம தடுக்கனும், அப்பதான் முடியும்... ஒவ்வொரு மொழிக்காரனும் தமிழ்நாட்டை ஆக்கிறமச்சுகிட்டோ போறான், இப்படியே போச்சுன்னா தமிழ்நாட்டிலயும் தமிழனை அகதி ஆக்கிடுவாங்க போல, ஒரு வெறி ஆட்டம் ஆடினாத்தா நமக்கு உள்ள உரிமை நமக்கு கிடைக்கும்... 


இரண்டாவதாக...
இந்தியா என்பது அகண்ற நாடு யாரு வேண்டும் என்றாலும் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம், வாழலாம், சம்பாரிக்கலாம்... இப்படி இந்தியர் அனைவருக்கும் சம உரிமைகளை நாடு வழங்கி உள்ளது, இப்படி இருக்கும் போது நீ இங்கு வராதே.. நீ ஹிந்திக்காரன் இப்படி சொல்லுறது கொஞ்சம் ஓவரா படுது. ஏன் தமிழர் வேறு பகுதிகளுக்கு போயி வாழலையா? தமிழ்நாட தவிர பல இடத்துல தமிழர்கள் நல்லாதானே வசிக்கிறாங்க, யாருக்கு இப்ப என்ன ஆச்சு, சில இடத்துல சில சம்பவங்கள் நடக்கிறது என்பதற்காக நாமும் மிருமமா மாறிடலாமா??? என்ன உரிமை? அவனுக்கும் இந்தியாவுல உரிமை இருக்கதானே செய்யுது, தமிழ்நாடு ஒன்னும் தனிநாடு இல்லையே... இப்படியே என்னோட யோசனை போச்சு... அவ்வளவு சீக்கிறத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியுமா என்ன? இது ஒருவருடைய சிந்தனையா இல்லாமல் பலபேருடைய கருத்தாதான்  எண்ணவேண்டியதுள்ளது, அதிகமானோர் மனதில் பூட்டி வைத்துள்ளனர், இப்படி சிலபேர்தான் வெளிட்டு விடுகின்றனர்,,, இந்திவுக்குள்ளே நடக்கும் இந்த இனவெறியை எப்படி தடுப்பது??? ஒன்று பட்ட இந்தியாவை இந்த வெறி பாதிக்குமே... இப்போதுதானே இந்தியாவே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆகின்றது, இவர்கள் சிந்தனை இப்படி இருந்தது என்றால்... யாருடைய குற்றம், அவர் சொன்னதில் ஒன்று கூட தவறு இல்லை, ஆனால் தமிழரும் பல்வேரு இடங்களில் சென்று வசிக்கின்றனர் அவர்களை பற்றி இவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்... இப்பேர்பட்ட தீ அதிகமாகமல் தடுக்கவேண்டும், இந்தியர் அனைவரும் சகோதர்கள் என்ற சிந்தனைக்கு இவர்களை கொண்டு வரவேண்டும்... 

8 comments :

தமிழ்த்தொண்டன் said...

அய்யா,

முதலில் தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்பதை வடநாட்டான்களுக்கு தெரிவியுங்கள்,
இதுவரை எண்ணூறுக்கும் மேலான தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்ப படையினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள், அதைப் பற்றி எந்த இந்தியனும் கவலை கொள்ளவில்லை,
வடநாட்டுப் நாளிதழ்களில் தமிழ் மீனவன் கொல்லபட்டான் என்று தான் வருமே தவிர இந்திய மீனவன் கொல்லபட்டான் என்று வராது. இது தான் யதார்த்தமான உண்மை.

கோவி.கண்ணன் said...

//இந்தியர் அனைவரும் சகோதர்கள் என்ற சிந்தனைக்கு இவர்களை கொண்டு வரவேண்டும்... //

இப்படி அதீத உணர்ச்சி வசப்படுகிறவன் தமிழனாகத்தான் இருக்கிறான். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் இந்தியில் பெரிய நடிகர் ஆக முடியல, நாம என்னதான் சகோதரன் என்றாலும் அவிங்க நாமம் போட்டுவிடுவாங்க. நாம நா(ர்)மலாகவே இருப்போம்
:)

தமிழ் உதயம் said...

தமிழகத்தில் தமிழன் வெறும் நுகர்வோராக மாறும் அவலம். படிப்படியாக அவனது தொழில் சுரண்டப்பட்டு கொண்டு வருகிறது. அடுத்து வளங்கள். திருமாவளவன் ஈழத்தில் சிங்கள மயம் என்று புலம்புகிறார். தமிழகம் வடவர்கள் மயமாவது அவர் கண்ணுக்கு தெரியாதது வேதனையே

அரைகிறுக்கன் said...

மன்னிக்க வேண்டும் நண்பரே நீங்களே சொல்லுகிறீர்களே நம்ம ஊரிலேயே வந்து நம்மை அடிமைப்படுத்துகிறார்கள் என்று. மட்டுமல் நம்ம ஆட்கள் எங்கெல்லாம் சம உரிமையுடன் வாழ்கிறார்கள் சொல்லுங்கள் மகாராஷ்டிரத்தில் நாமது தமிழ் பள்ளிகள் அரசின் உதவி நிறுத்தப்பட்டதால் மூடப்பட்டு வருவது தெரியுமா. எங்கெங்கு தமிழன் போனாலும் அடிமைப் பட்டு சுகம் காண ஒரு கூட்டம் இருப்பதாலேயே இப்படி

ஹுஸைனம்மா said...

இந்தியாவுக்குள் அடித்துக் கொள்ளும் நம் எல்லாராலும் வெளிநாடுகளில் மட்டும் எப்படி ஒற்றுமையாக இன, மொழி, மத பேதமின்றி இருக்க முடிகிறது என்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

கபிலன் said...

நிறைய சமயங்களில் இந்த மாதிரி யோசனைகள் வருவதுண்டு.

ஒரு சில சமயங்களில் இப்படியும் தோன்றுவது உண்டு. தமிழன் மட்டும் எங்க போனாலும் ஏன் அடி வாங்குறான் ?மலையாளிகள் உலகம் முழுவதும் இருக்காங்க, சீனர்கள் உலகம் முழுவதும் இருக்காங்க....அவங்க யாருக்கும் இந்த நிலைமை இல்லையே....நம்மல மட்டும் ஏன் அடிக்குறாங்க...? நம்ம அப்படி என்ன வித்யாசமா நடந்துக்குறோம் ? தான் உண்டு தான் சோறு உண்டு என்று நாம் நினைப்பதில்லையோ....இதையும் மீறி நம்முடைய இலட்சியங்கள், இலக்குகள் அரசாங்கங்களுக்கு பீதி கொடுக்கும் வகையில் இருக்குதோன்னு ஒரு சந்தேகம் வருது.....

அதாவது இவனை உள்ள விட்டால், நம்ம பிழைப்பு போயிடும் என்று மற்றவர்களை நினைக்க வைக்கிறது என்றே தோன்றுகிறது.

Anonymous said...

//தமிழன் ஏமாளிதான்//

No not at all.Instead tamils who speak divisive dirty dravidian politics are the swines who brought disrepute to tamils and TN.It is these dirty dravidian tamils who should be castrated.

Alagappan said...

நாம் அனைவரும் சிந்திப்போம் சாதிப்போம். தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.