Sep 3, 2009

ராஜசேகர ரெட்டியை பார்த்த அனுபவம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒரு சிறந்த முதலமைச்சரை இழந்துள்ளோம்...

மிகவும் வருத்தமாக இருக்குறது.

இந்தியா டுடே வார இதழ் நடத்திய கருத்துகணிப்பில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக தேர்வாகிருக்கிறார். மிகவும் எமையானவர் கூட. நான் அவரை மிகவும் பக்கத்தில் இருந்து பாத்துருக்கிறேன். பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு தடவை நிஜாமபாத் சென்றிருந்த போது,  ஒரு பொது கூட்டம் நடந்தது, நானும் சென்றிருந்தேன். அப்போதுதான் நான் அவரை பார்த்தேன். அவர் பேச ஆரம்பித்தவுடன் அவ்வளவு நேரமும் சப்தமிட்டு கொண்டிருந்த கூட்டம் அப்படியே அமைதியாகி விட்டது. மிகவும் அழகாக, உணர்ச்சி பொங்க பேசினார், ஒரு ஆவலால் கூட்டத்திற்கு சென்ற நான் அவரின் பேச்சு தூண்டுதலால் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் செல்ல ஆரம்பித்தேன். ஒரு முழுமையான உரையாக அதுவும் ஒரு அரசியல்வாதியின் பேச்சாக நான் YSR பேச்சைத்தான் கேட்டேன், அதுவும் மிகவும் விரும்பி. அப்போது நடந்த ஒரு சம்பவம்,  ராஜசேகர ரெட்டி தனது உரையை  முடித்து கொண்டார், என் அருகில் நின்றிருந்த ஒருவர் அவரிடம் ஏதே பேச வேண்டுமோ அல்லது ஏதே மனு கொடுக்க வேண்டுமோ போல;  YSR மிக அருகில் செல்ல முயற்சிக்கிறார்... எவ்வளவே முயற்ச்சித்தார். போலிஸ் ஆட்கள் அவரை தடுத்து விட்டனர். ஒரே சோக மயமாக நின்று கொண்டிருந்தார். பாவம் என்ன கொடுமையோ என்ன கஷ்டமோ... கீழ் இறங்கிய YSR அவரை கூப்பிடுமாரு  ஒரு போலிஸ்காரரிடம் சொல்லியவுடன் அவரும் YSR பக்கதில் சென்றார்... எனக்கு என்ன ஆச்சிரியம் என்றால் அவர் அவ்வளவு கூட்டத்திலும் எப்படி அந்நபரை கவனித்தார் என்பதுதான்.   அப்போதிருந்து எனக்கு YSR  மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது













யாரையும் யாருடனும் ஒப்பிட கூடாது, இருந்தாலும் மனசி கேட்கலை... சந்திரபாபு நாயுடு நகரங்களை மட்டும் கவனித்தார் ஆனால் YSR நகரம் கிராமம் இரண்டயும் சரியாகவே கவனித்து வந்தார். இப்ப ஒரு முறை பதவிக்கு வருவதே மிக கஷ்டம், ஒரு முறை 5 வருடம் சிறப்பக ஆட்சி செய்து விட்டு, மீண்டும் வருவது என்பது Y ராஜசேகர ரெட்டிகாரின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த ஒரு நற்சான்றிதழ். ஆன கொடுமை ஆந்திரா மக்களுக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது... ஆந்திராவில் ஹெலிகாப்டர் மரணம் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பாலயோகி, நடிகை செளவுந்தர்யா இப்போது ராஜசேகர ரெட்டி.. மரணமே மிகவும் கொடுமையான ஒன்று, நாம் பக்கதில் இருந்து பார்த்தவர்களின் மரணம் கொடுமையிலும் கொடுமையா இருக்கும்.



ராஜசேகர ரெட்டிகாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவரின் இழப்பு இடுகட்ட முடியாதது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆந்திரா மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.



வாழ்வதற்காக வருடங்களை எண்ணாதீர்கள். வாழ்ந்த காலத்தில் ஏழை மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை உங்களுக்கு நீங்களே அடிக்கடி கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் முக்கியம்.

--ராஜசேகர ரெட்டி

13 comments :

Robin said...

//சந்திரபாபு நாயுடு நகரங்களை மட்டும் கவனித்தார் ஆனால் YSR நகரம் கிராமம் இரண்டயும் சரியாகவே கவனித்து வந்தார்.// உண்மை.

Sanjai Gandhi said...

நல்ல தகவல்.. உங்கள் பதிவுக்கும் துக்கத்தைப் பகிர்ந்துக் கொள்வதற்கும் காங்கிரஸ்காரனாக நன்றிகள் மஸ்தான்.

வெண்காட்டான் said...

pathivu sari. india today is a useless newsweek. it publish useless stuff like how many nite club in citis and rate the cities by the number of nite clubs in it. dont take that as an example.

தமிழ்மகன் said...

நல்ல மனிதர் நம்மை விட்டு சென்றாலும் அவர் செய்த பல நல்ல பணிகள் என்றும் நம்முடன் இருக்கும்.

Unknown said...

வருகைக்கு நன்றி ராபின்
வருகைக்கு நன்றி சஞ்சய் காந்தி
வருகைக்கு நன்றி வெண்காட்டான் (நான் சொல்ல வந்தது YSR சிறந்த முதலமைச்சரா தேர்வாகிருக்கிறார் என்பதையே...)
வருகைக்கு நன்றி தமிழ்மகன்

Muruganandan M.K. said...

அவரது மறைவில் மனம் வருந்துகிறேன். அனுபவப் பகிர்வு மனத்தைத் தொட்டது

Unknown said...

வருகைக்கு நன்றி முருகானந்தன் சார். மரணம் எவ்வளவு கொடியது :(

சரவணகுமரன் said...

வருந்ததக்க நிகழ்வு... :-((

geethappriyan said...

ராஜசேகர ரெட்டிகாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

அருமை நண்பர் மஸ்தான் நல்ல எழுத்து உஙளுக்கு
சிறு எழுத்து பிழை மட்டும் களைந்து வெளியிடவும்
ஒட்டு போட்டாச்சு

Unknown said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன்
வருகைக்கு நன்றி கார்த்திக்கேயன் (எழுத்து பிழை இல்லாமல் இருக்க முயற்சி செய்கிறேன், ஆமா எங்கே ஒட்டு போட்டீங்க?)

ஹைதராபாத்தில் நடந்த இறுதி சடங்கில் மிக அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலமாகவே அவர் மீது மக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையாகி உள்ளது.

பிராத்திப்போம்.

geethappriyan said...

மஸ்தான் நான் தமிழ்மணத்தில் ஒட்டு போட்டேன்.
உங்கள் வலையில் தமிலிஷ் பட்டை இல்லையே?ஏன்?

george ananth said...

sad

Unknown said...

சரவணகுமரன், முடிந்தவரை பட்டைகளை இனைந்து விட்டேன். நன்றி.

வருகைக்கு நன்றி ஜார்ஜ்