Sep 7, 2009

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தாங்களின் சேவைகளை பெற்று பலனடைந்து கொண்டுருக்கும் பல்லாயிரம் பேர்களில் நானும் ஒருவன். முகமறியா நண்பர்களை தொடர்பு கொள்ளவும், பல விசயங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் தாங்கள் ஆற்றிவரும் சேவை மிகப் பெரியது.

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

நான் அடிக்கடி தமிழ்மணத்தில் கவனிக்கும் ஒரு விசயம் "மறுமொழிகள்" பகுதி. நான் மட்டும் அல்ல தமிழ்மணத்தில் இளைப்பாரும் பலபேர்கள் 'ம' திரட்டியல் திரட்டபடும் "மறுமொழிகள்" பகுதியை பார்த்துதான் மேலும் பின்னூட்டம் இடப்படும் பதிவாளர் பதிவை அதன் மொத்த பின்னூட்டம் எண்ணிக்கை பொருத்தே அதனின் வாசகர் விரும்பிபடிக்கும் பகுதி / சூடான இடுகைகள்  என்று நம்ப படுகிறது... அதாவது நம்பவைக்க்கப்படுகிறது.

'ம' திரட்டி மிகவும் சிறந்த ஒன்று.

ஒரு பர பரப்பான பதிவை அதாவது அதிக எண்ணிக்கையில் பின்னூட்டம் வாங்கிய சூடான இடுகைகள் பதிவை திறந்து பார்தோம் என்றால், ஒன்று அப்பதிவின் உரிமையாளர் அதிகமாக எல்லோருக்கும் பதில் அளிந்துருப்பார் அல்லது சில நபர்களே திரும்ப திரும்ப அப்பதிவில் பங்கு பெற்று அப்பதிவின் பின்னூட்ட எண்ணிக்கையை உயர்த்த பாடுபட்டிருப்பார்.

நான் அனைத்து பதிவுகளையும் அவ்வாறு கூறவில்லை... சில பதிவுகள் அவ்வாறு உள்ளன...

எனது எண்ணப்படி,  இதை ஆலோசனை என்றே வைத்துக்கொள்ளலாம்

  1. ஒரு பதிவில் பின்னூட்டம் ஒரு வாசகரால் இடப்பட்டால், தமிழ்மணம் அவரின் பின்னூட்டத்தை எண்ணிக்கையில் சேர்த்துகொள்ளலாம், அப்பதிவில் மீண்டும் அவரால் பின்னூட்டம் இடப்பட்டால் தமிழ்மணம் அவரின் பின்னூட்டத்தை சேர்க்காமல் விட்டு விட வேண்டும்.
  2. பதிவின் உரிமையாளர் இடப்படும் பின்னூட்டம் தமிழ்மணம் கணக்கில் சேர்க்காமல் விட்டுவிடலாம்.
  3. அனானியாக பின்னூட்டம் இடுபவரின் IP எண்னை பொருத்து தமிழ்மணம் அவரை சேர்க்கலாம்/நீங்கிவிடலாம்.

அதாவது ஒரு பதிவில் ஒருவர் எவ்வளவு முறை பின்னூட்டம் இட்டாலும் ஒரு முறை மட்டும் (unique) பின்னூட்டம் இட்டவராக கருதப்படவேண்டும்.


நன்றி மற்றும் நட்புடன். 
மஸ்தான் ஒலி

7 comments :

geethappriyan said...

பதிவு எழுதினீர்களே அதை தமிழ்மணத்தில் சேர்த்தீர்களா?
சேர்த்து ஒட்டும் போட்டாச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல கோரிக்கை; வழிமொழிகிறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டும் போட்டாச்சு,

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டங்கள் இற்றைப்படுவது சூடான பதிவை காட்ட மட்டும் அல்ல. அப்பதிவில் நடக்கும் விவாதங்களை இற்றைப்படுத்தவே அது முக்கியமாக உதவுகிறது.

நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் பல முன்முடிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

வருகைக்கும் பதிவை தமிழ்மணத்தில் சேர்த்ததுக்கவும் நன்றி கார்த்திக்
வருகைக்கு நன்றி சுரேஸ்
வருகைக்கு நன்றி டோண்டு சார்

அதிக பின்னூட்டம் இடப்படுவது எல்லாம் எப்படி சிறந்த பதிவாக ஆகமுடியும்? அவை சூடான பதிவு மட்டும்தான்.

எனது இப்பதிவின் நோக்கமே சிறந்த பதிவை தேர்வு செய்வதற்குதான்.

Vijay said...

/
அதாவது ஒரு பதிவில் ஒருவர் எவ்வளவு முறை பின்னூட்டம் இட்டாலும் ஒரு முறை மட்டும் (unique) பின்னூட்டம் இட்டவராக கருதப்படவேண்டும்.
/

வழிமொழிகிறேன்

Unknown said...

வருகைக்கு நன்றி விஜய்