Sep 17, 2009

மழலைச் சொல் கேளாதவர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இப்பதிவு நான் எழதுவதற்கு காரணமே எனது நண்பன்தான்.


அவனேடு நான் சொன்னவைதான் இங்கு உங்களுடனும் பகிர்ந்துகொள்ளனும்னு தோனுச்சு அதான் "மழலைச் சொல் கேளாதவர்", அப்படி என்ன அட்வைஸ் மழையா பொழியப்போறான்னு நென்ச்சு டெர்ரர் ஆகாதீங்க தெரிச்சு ஓடாதீங்க


பதிப்பின் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சமாவது கெஸ் பண்ணீருப்பீங்க...


அவசரப்படாதீங்க! பொறுமை பொறுமை... :)


நீங்க நினைக்கிறது கிடையாது.. இது டோட்டல் வேற..


நான் பேசப் போறது வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களை பற்றிதான்.


எனது நண்பன் துபாய்ல குப்பை கொட்டுகிட்டு இருக்கான், கொஞ்சம் வருசமாத்தான் அங்க போய் குப்பயை கொட்டுறான்... ஊருக்கு வந்தா அதிக பட்சம் ஒரு மாசம்தான் அதுக்கு மேல ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டான், இருந்தா ஆப்பு அடுச்சுருவாங்க...


போன வருசம்தான் அவனுக்கு கல்யாணம் ஆச்சு, அதுக்கும் தலைவர் வந்து இருந்தது 30 நாள்தான், சமிபத்தில் அவனுக்கு குழந்தை பிறந்தது... அவன் குழந்தைய பாக்க வருவான்னு பார்த்தால், வரவே இல்லை, கூப்பிட்டு கேட்டான் "வேலை பிசிடா இப்ப வர முடியாது",  இந்த எழவு பதிலத்தான் எப்பவும் சொல்லுவான்.

ம்ம்ம்ம்ம்ம்ம்...

பெத்த புள்ளைய பாக்கம கூட அப்படி என்ன வேலை,  ரெண்டு நாளைக்கு ஊருக்கு வந்துட்டு போய்ட்டாத்தான் என்ன,  உலகத்தில் எவ்வளவே பேர் என்னனெமே செஞ்சும் குழந்தை பாக்கியம் இல்லாம இருக்காங்க, இவனுக்கு இறை அருளால் சீக்கிறமா கிடைச்சுடுச்சி, இவன் இப்படி இருக்கானே இப்படியே மனசுக்குள்ள வருந்தினேன்.  நான் போயி குழந்தையே பார்த்தேன், அப்படியே பூப்போல... கடவுள் அற்புதமானவன்... எவ்வளவு அழகாக படைத்திருக்கிறான். குழந்தைகளை ரசிக்காதவன் மனிதனே இல்லை.

இல்லையா?




இவன் உண்மைதான் சொல்கிறானா, இல்லையான்னு உளவு பாக்கனும்னு,  துபாய்ல இருக்குற என்னோட வேற ஒரு நண்பன்கிட்ட இதப்பத்தி சொல்லி நல்ல விசாரிச்சு சொன்னேன், அவன் சொன்னது "இவனுக்கு இப்ப லீவு கிடையாதாம்!" .

எனக்கு தோனியதெல்லாம், இப்படியெல்லாமா இருக்கனும். ஏன் நம்ம நாட்டில் வேலை  தேடிக்கொண்டு இங்கே குடும்பத்துடன் வசித்தால்தான் என்ன? மிகவும் பாவம் தனது குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள். :( ஏதாவது ஒரு துக்கம்னா உடனடியா வர முடியாமல், சந்தோசம்னா யாருடனே சேர்ந்து கொண்டாடிக்கொண்டு...  சே

பணம்தான் வாழ்க்கையா?

ஒரு சில விசயங்களை கடந்து விட்டால் என்ன முயற்சி செய்தலும், கோடி கோடியா பணத்தை திரும்ப கொட்டினாலும் திரும்ப பெற முடியாது.

ஆயிரம்தான் இருந்தாலும், கல்யாணம் ஆவதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தாலும். கல்யாணத்திற்கு பிறகு கண்டிப்பாக தனது துனைவியருடன் தான் இருக்கனும். ஒரு சந்தோசம்னா பகிர்ந்து கொள்ள துக்கம்னா கூட பங்கெடுக்க இணை எப்போதும் வேண்டும்.  தன்னுடைய குழந்தை வளருவதை பக்கதில் இருந்து அனு அனுவாக ரசிக்க வேண்டும்.

வள்ளுவர் கூட
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலை சொல் கேளாதவர்.


அதாவது,  குழல் இசைதான் சிறந்தது, யாழ் இசைதான் சிறந்ததுன்னு சொல்வார்களாம் சிலர், அவர்கள் யாரென்றால் தனது மழலை பேச்சை கேக்காதவர்களாம்.

7 comments :

கோவி.கண்ணன் said...

//ஆயிரம்தான் இருந்தாலும், கல்யாணம் ஆவதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தாலும். கல்யாணத்திற்கு பிறகு கண்டிப்பாக தனது துனைவியருடன் தான் இருக்கனும். ஒரு சந்தோசம்னா பகிர்ந்து கொள்ள துக்கம்னா கூட பங்கெடுக்க இணை எப்போதும் வேண்டும். தன்னுடைய குழந்தை வளருவதை பக்கதில் இருந்து அனு அனுவாக ரசிக்க வேண்டும். //

பொருளியலும் வாழ்க்கைக்கு முக்கியம் தானே. கொண்டுவந்தால் தானே கணவன். எல்லாம் கிடைத்திருக்க அப்பன் பாட்டன் சம்பாதித்து வைத்திருந்தால் தான் முடியும், நடுத்தர மற்றும் ஏழை வர்கத்திற்கு அந்த கொடுப்பினை குறைவுதான்.

இளமையில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது போல் இளமையில் முடிந்த அளவுக்கு பொருளீட்ட வேண்டும் என்கிற சுமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இந்தியா தன்னிரைவு அடைந்திருந்தால் நாம் வெளிநாடு செல்லத் தேவை இருக்காது. தனிமனிதனின் குறைபாடு என்பதைவிட ஒரு நாட்டின் குறைபாடாக இதனைப் பார்க்கலாம்.

இன்னும் கொடுமை எத்தனையோ பெண்கள் கணவன் குழந்தைகளை தாய்நாட்டில் விட்டுவிட்டு பணிப்பெண்ணாக வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு மனக் கஷ்டத்தைவிட பாலியல் ரீதியான தொந்தரவுகளும் அதிகம். ஆண்களுக்கு அந்த அளவுக்கு சிக்கல் இல்லை மஸ்தான்

SurveySan said...

kovikku repeatu.

Robin said...

//ஒரு சில விசயங்களை கடந்து விட்டால் என்ன முயற்சி செய்தலும், கோடி கோடியா பணத்தை திரும்ப கொட்டினாலும் திரும்ப பெற முடியாது.// - உண்மைதான்.

அ. நம்பி said...

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இனிய குடும்ப வாழ்க்கைக்குப் பணம் முக்கியம் என்பதை மறுக்க முடியுமா?

உள்ளூரில் பணம் தேட வழி இல்லையெனில் வெளியூர்; உள்நாட்டில் வழி இல்லையெனில் வெளிநாடு. வேறு என்ன செய்வது?

பணத் தட்டுப்பாடு ஏற்பட்டால் குடும்ப வாழ்க்கையில் கசப்பு ஏற்படாதா?

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங்(கு) எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். - ஒளவையார்

இதனையும் படித்துப் பாருங்கள்:

http://valamai.blogspot.com/2009/09/blog-post_16.html

Anonymous said...

தங்களுடைய வலை பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி

அன்புடன் மலிக்கா said...

நல்ல தகவல்

தாங்களைப்பற்றியில் நீங்கள் சொல்லியிருக்கும் விசயம் நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டியது, அண்டைவீட்டுக்காரன் பசியோடு இருக்க தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன்[சாப்பிடுபவன் உண்மையான [மனிதன்]மூஃமீன் அல்ல, தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

mohamedali jinnah said...

காலம் கடந்து கலங்குவோர் அதிகம். ஒன்றினை அடைய என்ன செய்வது என்பர்!