Nov 5, 2009

ஆஆஆஆ.... எனக்கு பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிடித்தவர் பிடிக்காதவர்...


யாருக்கு யாரை பிடிக்கும்... எப்ப பிடிக்கும்? ஏன் பிடிக்கும்?

யாருதான் இதை ஆரம்பித்தார்களோ.. உஸ்ஸ்ஸ்ஸ்... எந்த திரட்டிய பாத்தாலும் இதுதான் இருக்கு... இதில் இருந்து தெரியுது யாருக்கும் எழுதுறதுக்கு எதுவும் இல்லைனு... தப்பா நினைச்சுக்காதீங்க... எவ்வளவோ இருக்க எழுத... ஒருத்தரை பிடிக்காததை பற்றிதானா எழுதனும்?



எனக்கு பிடித்த எழுத்தாளர்களிடம் கூட இந்த பதிவு இருந்ததை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

நல்ல வேளை வினவு இப்படி பதிவு போடலை. :)

பிரபலமானவர்களை பிடிக்கலை என்று சொல்லி பிரபலமாகலாம் என்பது என்ன விதமான செயல்பாடு என்பது தெரியவில்லை.

பிடித்தவர்களை மட்டும் சொல்வது போல் அமைந்திருந்தால்... அது ஒகே.

ஏ ஆர் ரஹ்மானை பிடிக்காததற்கு அவர் விளம்பரபடத்தில் நடிப்பதை சொல்லிருந்தார்கள். AIDS நோயாளிகளுக்காகவும் லாபநோக்கமற்ற செய்திகளுக்காவும் அவர் விளம்பரபடத்தில் நடிக்கிறாரே... இளையராஜாவையும் விரும்புங்கள் அதே நேரத்தில் ஏ ஆர் ரஹ்மானை முதல் ஹாரிஸ் ஜெயராஜ் வரை வெறுக்காமல்.

நீங்க பிடிக்கலைன்னு ஒருத்தரை சொன்னா அது அவர் மேல் தெரிந்தே தெரியாமலோ கொஞ்சம் வெறுப்பு விதைப்பதற்கு சமம்.

பொதுவா, ஒருத்தருக்கு ஒருவர் பிடித்தவர் பிடிக்காதவர் என்று எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கின்றனர்? இன்று பிடிக்கும் ஒருவர் நாளைக்கே பிடிக்காமலும் போகலாம், பிடிக்காதவர் பிடிக்கவும் செய்யலாம்.... காலத்தில் அனைத்தும் மாற்றத்திற்கு உரியதுதான்... பிடிக்காதவர் என்று எழுத்துமூலமாக பதிவு செய்யும் போது, அது என்றென்றும் தங்கிவிடவும் அவரின் எண்ணமாகவும் இருக்கும்.

உலகத்தில் பிடித்தவர் பிடிக்காதவர், பிடித்தவை பிடிக்கதவை என்று எதுவுமே இல்லை. நாம் சார்திருப்பவர்களாலும் நம்மை சார்திருப்பவர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனக்கு ஒருத்தரை பிடிக்க காரணமே, அவரின் சில செயல்பாடுகள் என்னை கவர்ந்ததாலும் மேலும் அவரை பற்றிய மற்றவர்களின் எண்ணங்கள் அவரின் மேல் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாலும் அவரை எனக்கு பிடிக்க காரணமாய் அமைகின்றது.  இதே காரணம்தான் பிடிக்காததற்கும்...

மாற்றம் என்பது நம்மை சார்ந்து அனைத்தும் மாறிக்கொண்டிருப்பதுதான். மாறாமல் எதுவும் இல்லை, வாழ்கிற வாழ்க்கையில் அனைவரையிம் விரும்பி அனைவராலும் விரும்ப் படுகிறவர்களாக வாழ்வோம். 


2 comments :

பீர் | Peer said...

அன்பின் மஸ்தான்,

பிடித்தவர் பிடிக்காதவர் குறியீடுகள் தற்காலிகமானது. உதாரணமாக, எனக்குபிடித்த அரசியல்வாதி நாளை சமூகவிரோத நடவடிக்கை செய்யும் போது எனக்கு அவரை பிடிக்காமல் போகலாம்.

பிடிக்காதவரை சொல்வதால் என்ன தவறு? அதை துறையில் பிடித்தவரையும் சொல்கிறார்களே.

நமீதாவை பிடிக்கவில்லை என்று சொல்வதால் நான் எப்படி பிரபலமாவேன்?

இளையராஜாவை பிடிக்கும், ரஹ்மானை பிடிக்காது என்று சொல்வதில் அவர்களுடைய இசை மட்டும் பொதிந்தில்லை என்பதை புரிந்து கொள்க. கலாநிதி மாறனை எனக்கு பிடிக்கும் என்பதால் சன், கே டிவி பிடிக்கும் என்று பொருள் அல்ல.

பிடிக்காதவர் மேல் வெறுப்பு விதைப்பதால் என்ன தவறு. உண்மையில் அவர் தவறானவர் என்றால் திருந்த வாய்ப்புள்ளதே.

//எனக்கு ஒருத்தரை பிடிக்க காரணமே, அவரின் சில செயல்பாடுகள் என்னை கவர்ந்ததாலும் மேலும் அவரை பற்றிய மற்றவர்களின் எண்ணங்கள் அவரின் மேல் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாலும் அவரை எனக்கு பிடிக்க காரணமாய் அமைகின்றது. இதே காரணம்தான் பிடிக்காததற்கும்... //

மிகச்சரி.. இதை வெளியே சொல்வதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

Sajid said...

ஹலோ பீர்,
இது எல்லோரும் அறிந்ததே. நமக்கு பிடித்தவரை மற்றவர்க்கு பிடிக்கவில்லையென்றால்,யாருக்குத்தான் கோபம் வராது?