Dec 28, 2009

அதிகபட்ச தண்டனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சமிபத்தில் நாளிதள்களில் வந்த செய்திகள்.


  • கள்ளநோட் மாற்றிய கும்பல் பிடிபட்டது
  • சீனாவில் இருந்து போலி மருந்து

முதலில் உள்ளது நமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க கூடியது. இரண்டாவது உள்ளது மக்களின் உடல் நலத்தை சிதைக்க கூடியது. இரண்டுமே மிகக்கொடியதுதான். 

கள்ளநோட்டு மாற்றுபவர்கள் அடிக்கடி பிடிபடுவதும், அவர்களை பற்றிய செய்திகள் நாளிதள்களில் வெளியிடப்படுவதும் நடந்து கொண்டே உள்ளன, பிடிபடுபவர்கள் என்ன் ஆகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு பதில் எப்போதும் போல் வெறுமையாகவே உள்ளது... பிடிபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும், மேலும் இதனின் வேர் எங்குள்ளது என்று கண்டுபிடித்து வேரோடு அழிக்கவேண்டும். ஒவ்வொரு தடவை பிடிபடுபவர்களை போட்டோ எடுத்து நாளிதளில் போடுவதும், வேறு ஒரு பரபரப்பான செய்தி வந்தவுடன் அதை மறப்பது என்று இல்லாமல் அதனின் ஃபாலேஅப் செய்தியை வெளியிட்டு, நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களை வேரோடு சாய்க்கவேண்டும். 
இதையிம் விட மிகவும் கொடியவர்கள் போலி மருந்து இறக்குமதி செய்பவர்கள். மனசாட்சியை பணத்திற்காக அடமான வைத்து செயல்படுவர்கள். சீனாவில் இறக்குமதி செய்யபடும் அதிகாகமான பொருட்கள் நமது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை, இதை மருத்துவர்களே ஒப்புகொண்டுள்ளுனர், நமது நாட்டில் விற்கபடும் மிக அதிகமான பொருட்களின் இடத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடும் பொருட்கள் பிடித்துள்ளன, எங்கு நோக்கினும் "Made in China" என்ற முத்திரையுடன் பொருட்கள் உள்ளன. 

இப்படி மக்களை அழிப்பது போதாது, இந்திய மக்கள் அதிகமானோர் நோயளிகள் அவர்கள் அதிகம் நாடுவது மருந்துகளைதான், அதை போலியாக தயாரித்து மொத்தமாக இந்திய மக்களை ஒழித்து விடலாம் என்று சீனா என்னுகிறது போல, ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், வளர்ந்துவிட்டால் ஏதாவது ஒன்றுதான் வல்லரசாக இருக்க முடியும், இப்போதே இந்திய மக்களை ஏதாவது விதத்தில் அழித்துவிட்டால் அல்லது நோய்வாய் படுத்திவிட்டால் சீனாவிற்கு எதிரிகளே இருக்கபோவதில்லை, ஆதலால் கூட இப்படி செய்யலாம். 

நமது நாட்டு அரசியல்வாதிகள் இதை கண்டும் எதை பற்றியும் கவலைபடாமல் இருப்பது, சீனாவை கண்டு அஞ்சுகிறார்களா அல்லது வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. 

எந்த பத்திரிக்கையிம் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவில்லை, அவர்களை சொல்லியும் குற்றமில்லை, சகீலா காதல்தான் அவர்களுக்கு முக்கியம். அல்லது செக்ஸ் புகார்ல எந்த சாமியாருடா சிக்குவான், அந்தரங்க படத்தை வெளியிடலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.

போலி மருந்துக்கு சீனாவும், போலி நோட்டுக்கு பாகிஸ்தானும்தான் காரணம் என்றாலும் நமது ஆட்களில் உள்ள ஆடுகளால்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றது, பிடிபடும் ஆட்களும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் அப்போதுதான்  மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். 

5 comments :

கோவி.கண்ணன் said...

//போலி மருந்துக்கு சீனாவும், போலி நோட்டுக்கு பாகிஸ்தானும்தான் காரணம் என்றாலும் நமது ஆட்களில் உள்ள ஆடுகளால்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றது, பிடிபடும் ஆட்களும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். //

நீ வாழ பிறரைக் கெடுக்காதே என்கிற மனசாட்சி இருந்தால் இந்த செயல்கள் நடைபெறாது. கஷ்டம் தான் ! சர்வைவல் ஆப் பிட்டஸ்ட் என்பதில் கொள்ளை அடித்து பணம் சேர்ப்பதும், அடுத்தவர் உயிரை பணயம் வைப்பதும் உண்டு போல.

:(

Anonymous said...

time waste

91001103021 said...

இதுகெல்லாம் பார்க்க அரசியல் வியாதிகலுக்கு எங்கே நேரம்? சீட்ட புடிச்சமா சில்லரைய சேத்தமானு போய்டுவானுக .

vijay said...

இதுகெல்லாம் பார்க்க அரசியல் வியாதிகலுக்கு எங்கே நேரம்? சீட்ட புடிச்சமா சில்லரைய சேத்தமானு போய்டுவானுக .

true

Anonymous said...

makkal payathudanum matrm arasialvathigal suyanalthudanum irukkum varai nam ithai patri pessi payan illai