Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Mar 26, 2010

சென்னை வேஸ்ட் கிங் -- இன்னுமா உலகம் நம்புது

ஒவ்வொரு தடவையும், இப்ப ஜெயிச்சுருவாங்க இந்தா ஜெயிச்சுகிட்டு இருக்காங்காங்க அப்படீன்னு நம்பி ஏமாந்து போறதுதான் எனக்கு பொழப்பா இருக்கு... 



ஏன்தான் சென்னை சூப்பர் கிங் இப்படி ஆயிடுச்சோ... முதல் IPL பைனல் வரை வந்தாங்க.. இரண்டாவது IPL செமி பைனல்வரை... இப்ப அவ்வளவுதான் சங்குதான்... ஆனாலும் சூப்பரான முன்னேற்றம்... எல்லாருக்கும் ஏறுமுகம் இருக்கும், ஆனா நம்ம சென்னை சூப்பர் கிங்குக்கோ சூப்பரான இறங்குமுகம்... :)

ஓரளவுக்கு பேட்டிங் இருக்குன்னு நம்பலாம்... மத்தபடி பவுலிங், பீல்டீங்... சே நினைக்க  நினைக்கவே அப்படியே பிபி ஏறுது... நேத்து பீல்டீங்கிற பேர்ல இவங்க செஞ்ச விசயம்... பந்து கைல பட்டு போனாலும் அப்படியே விட்டுடு வேடிக்கை பாத்துக்கிட்டு பொணம் மாதிரி நிக்கிறாங்க... பவுலிங் போட்டா எப்படிதான் புல்டாஸா போடுவாங்களோ அதுலாம் சென்னை சூப்பர் கிங் கிட்டதான் கத்துக்கனும்.... 

இதற்கு சென்னை சூப்பர் கிங் என்று பெயர் இருப்பதற்கு பதிலா சென்னை வேஸ்ட் கிங் அப்படின்னு பேரை மாத்திடலாம், அப்படி ஒரு கேவலமான ஆட்டம்... டோனியை வச்சுக்கிட்டு இந்தியா அணி எப்படிதான் டி20 விளையாட போகுதோ... ம்ம்ம்ம்... வர வர எரிச்சலா இருக்கு... ஆரம்பத்துல சென்னை ஆதரித்த என்னுடைய நண்பர்களாம் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சு போயிட்டாங்க... நாந்தான் சரி எப்படி ஜெயிச்சுருவாங்க... டோனிக்கு காயம் பட்டுருச்சு பாவம்... இப்படி நானே என்னை சமாதானம் செய்து கொண்ட நேரங்கள் அதிகம்... அட எல்லாரும் சென்னை சூப்பர் கிங் வெறுத்துட்டா ஆதரிக்க யாருமே இல்லைன்னே நான் இருந்தேன்... ஆனா,இன்னும் தொடர்ந்தா கேவலம்னு வேற ஒரு நல்ல டீம தேடுறேன்... இப்பவுலாம் பெங்களூர் டீம் நல்லா விளையாடுது... என்னமோ தெரியலை கர்நாடகா அப்படீன்னாலே ஒரு மாதிரியா இருக்கு... பேசாமா நம்ம சச்சின் இருக்குற பக்கமா சாஞ்சுடபோறேன் :) ஆயிரம்தான் இருந்தாலும் சச்சின் மாதிரிவருமா...


இந்த தடவை மும்பை இந்தியன் தான் ஜெயிக்குது என்ன பெட்???

Jan 25, 2010

தமிழன் இளிச்சவாயனா?

வர வர தமிழன் இங்க வேலையே செய்ய முடியாது போல இருக்குது, இப்பவே ஹிந்திக்காரன் சென்னையில எல்லா இடத்திலையும் வந்துட்டான், சென்னையில தமிழ்நாடு வகை சாப்பாடு போயி ஹிந்தி டைப்பு சாப்பாடு வந்துடுச்சு, தமிழ்படங்கள் அதிகமா வெளிட்டது போக நிறையவே ஹிந்திபடங்களா வர ஆரம்புச்சுடுச்சு... இங்க பிழைக்க வந்தவன் எல்லாம் இங்க உரிமை கொண்டாட ஆரம்புச்சுட்டான். இப்பவே பல பகுதிகளுக்கு தமிழன் வீடோ நிலமோ வாங்க முடியாத நிலமை, சென்னையில சில இடங்கள் இருக்கு மார்வாடியை தவிர யாரும் அங்கு குடி போக முடியாது, தமிழ்நாட்டுடைய மொழியா ஹிந்தியை ஆக்கிடுவாங்க போல இருக்கு... இப்ப வரைக்கும் லங்காவுல தமிழனை அடிக்கிறானுக, மலேசியாவுல அடிக்கிறானுக, அப்ப அப்ப மகராஷ்ட்ராவுலயும் கர்நாடகத்திலயும் அடிப்பானுக. நாம எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கனும் அது போதாதுன்னு இங்க வேற வந்து அடிக்கிறானுக... நாமதான் எல்லாதையும் பொருத்துகிட்டு போகிட்டு இருக்கிறோம்... இந்தியாவவது மயிராவது??? எல்லாம் வேஸ்ட்... இப்படி தமிழன் அடிவாங்கிறத செண்ட்ரல் கவர்மண்ட்ல இருந்து எவனாவது கேட்டுறானா??? ஹிந்து பேசுறவனுல்லாம் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, PM குரல் கொடுக்குறார்,    இங்க அரசியல் நடத்துறவனுக எல்லாம் தே... பசங்க, ஆரம்பிக்கம்போது அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம்னு சொல்வானுக ஆனா எல்லாரும் வேஸ்ட்... தமிழன் நல்லா இருக்கனும்னா தனிநாடு வேனும், இல்ல மகராஷ்ட்ராவுல ராஜ்தாக்ரே செய்யிறது போல நாமளும் செய்யனும்... 







இப்படி ரயிலில் ஒருவர் பொதுவாக பேசிக்கொண்டுவந்தார்...


அவர் சொல்ல வந்தது எனக்கு புரிந்ததுதான், கருத்தை கேட்க கேட்க மனது ஏதோ கொதிக்க ஆரம்பித்தது, அவர் நிறுத்தவே இல்லை, அதிகமாக பேசினார், நியாமாத்தான் இருந்தது... ஆனாலும் மனது கேட்கவேவில்லை, ஏனோ கருத்தை ஒப்பு கொள்ள மறுக்கிறது மனது...


நானே என்னுள் இரண்டாக மாறி சண்டையிட்டு கொள்கிறேன்...
ஆமா, அவர் சொல்வது சரிதான். தமிழன் ஏமாளிதான், எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கதான் செய்வான், கேட்பதற்கு நாதி இல்லாமல் போயிடுச்சுதான்... போற இடத்துல அடிவாங்குறாண்டா, சொந்த இடத்திலும் அப்படிதான்.இதுக்குலாம் ஒரு விடிவு வரனும்னா மத்தவன் நம்ம இடத்துல நுழைய விடாம தடுக்கனும், அப்பதான் முடியும்... ஒவ்வொரு மொழிக்காரனும் தமிழ்நாட்டை ஆக்கிறமச்சுகிட்டோ போறான், இப்படியே போச்சுன்னா தமிழ்நாட்டிலயும் தமிழனை அகதி ஆக்கிடுவாங்க போல, ஒரு வெறி ஆட்டம் ஆடினாத்தா நமக்கு உள்ள உரிமை நமக்கு கிடைக்கும்... 


இரண்டாவதாக...
இந்தியா என்பது அகண்ற நாடு யாரு வேண்டும் என்றாலும் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம், வாழலாம், சம்பாரிக்கலாம்... இப்படி இந்தியர் அனைவருக்கும் சம உரிமைகளை நாடு வழங்கி உள்ளது, இப்படி இருக்கும் போது நீ இங்கு வராதே.. நீ ஹிந்திக்காரன் இப்படி சொல்லுறது கொஞ்சம் ஓவரா படுது. ஏன் தமிழர் வேறு பகுதிகளுக்கு போயி வாழலையா? தமிழ்நாட தவிர பல இடத்துல தமிழர்கள் நல்லாதானே வசிக்கிறாங்க, யாருக்கு இப்ப என்ன ஆச்சு, சில இடத்துல சில சம்பவங்கள் நடக்கிறது என்பதற்காக நாமும் மிருமமா மாறிடலாமா??? என்ன உரிமை? அவனுக்கும் இந்தியாவுல உரிமை இருக்கதானே செய்யுது, தமிழ்நாடு ஒன்னும் தனிநாடு இல்லையே... 







இப்படியே என்னோட யோசனை போச்சு... அவ்வளவு சீக்கிறத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியுமா என்ன? இது ஒருவருடைய சிந்தனையா இல்லாமல் பலபேருடைய கருத்தாதான்  எண்ணவேண்டியதுள்ளது, அதிகமானோர் மனதில் பூட்டி வைத்துள்ளனர், இப்படி சிலபேர்தான் வெளிட்டு விடுகின்றனர்,,, இந்திவுக்குள்ளே நடக்கும் இந்த இனவெறியை எப்படி தடுப்பது??? ஒன்று பட்ட இந்தியாவை இந்த வெறி பாதிக்குமே... இப்போதுதானே இந்தியாவே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆகின்றது, இவர்கள் சிந்தனை இப்படி இருந்தது என்றால்... யாருடைய குற்றம், அவர் சொன்னதில் ஒன்று கூட தவறு இல்லை, ஆனால் தமிழரும் பல்வேரு இடங்களில் சென்று வசிக்கின்றனர் அவர்களை பற்றி இவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்... இப்பேர்பட்ட தீ அதிகமாகமல் தடுக்கவேண்டும், இந்தியர் அனைவரும் சகோதர்கள் என்ற சிந்தனைக்கு இவர்களை கொண்டு வரவேண்டும்... 

Dec 30, 2009

வெளிவந்துகொண்டிருப்பது பூனைக்குட்டியா ஓநாயா?

இப்போதுதான் அதிக அதிக பூனைக்குட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது... மிகவும் பக்கத்தில் பார்க்காமல் விட்டதினால் தெரியவருகிறது அது பூனைக்குட்டி இல்லை, ஓநாய் என்று. இவ்வளவு நாள் அடிமனதில் தேக்கிவைத்திருந்தவை இப்போதுதான் வெளிவருகின்றன. அது கூட அதிகம் பழகிவருக்கே அது தெரியவில்லை பூனைக்குட்டியா அல்லது வேறு எதுவுமா என்று... ஓநாய் எதற்கு வரும், இரத்தம் தேடிதான் ஓநாய் வரும். இரத்த்தை பார்க்காமலும் இறந்த மனித உடலை பார்க்காமலும் கண்டிப்பாக ஓநாய் செல்லாது.




விதைப்பது விஷம் என்றே தெரியாமல் சிலபேர்,
நட்பை அசிங்கபடுத்தியிம்,
உறவை கொச்சைபடுத்தியும்..
இதுதானா அவர்கள் விருப்பம்?
அசிங்கத்தை பார்த்து விட்டால்
சிங்கத்தை எதிபார்க்கும் கூட்டம்...
இதுதான் இறுதி,
இதுதான் முடிவு என்றும் சிலபேர்...
அய்யோ பாவம்...
கொடுப்பதுதான் கிடைக்கும் அறியாதவர்களா அவர்கள்?
பரவட்ட்டும் தீ...!


இதற்கு மேலும் இதை பற்றி எழுத விரும்பவில்லை, புரியவேண்டியவர்களுக்கு புரிந்தாலும் சரி தொலைந்தாலும் சரி, நான் ஒரு பிரபல எழுத்தாளன் இல்லை பிரபல எழுத்தாளர்கள் படிப்பதற்கு, ஒரு சராசரியின் உள்ள கூக்குரல்தான் இது.

தீ பரவ வேண்டுமா அல்லது அனைக்க வேண்டுமா.

Nov 21, 2009

இந்தியா எப்ப முன்னேற?

இந்தியா நன்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எப்பவும் வளர்ந்துகொண்டிருக்கும் போலவே எண்ணத்தோணுகிறது. டக்க்குன்னு கோவபட்டு நீ ஒரு தேச துரோகின்னு நினைச்சுறாதீங்க... எனக்கு இந்தியா நல்ல முன்னேறனும், வல்லரசு ஆகுதோ இல்லையோ நல்லரசு ஆகி பசி பட்டினி இல்லாம மக்கள் வாழனும் அப்படீங்கிற ஆசைதான்.

 
பின்ன எதுக்கு இப்படி ஒரு பதிவுக்கு தலைப்பு?

 
மக்கள் எவ்வளவுதான் விரும்புனாலும் சில அரசாங்க ஊழியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளால் நமது விருப்பம் தள்ளி கொண்டேபோகிறது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெரியும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு விசயங்களிலும் அலட்சியமாக இருப்பதை. அவர்கள் ஊழியர்கள் என்று சொல்வதை கூட வெறுக்கிறார்கள் அவர்களை  அதிகாரிகள் என்று கூப்பிட வேண்டுமாம், ஏன் என்றால் எல்லாரையும் அதிகாரம் செய்ய அரசாங்கதால் நியமிக்கபட்டவர்கள் என்று நினைப்பு.

 
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரேசன்கார்டில் மாற்றம் செய்வதற்காக அங்கு உள்ள ஊழியர் சில நாட்கள் அலையவிட்டனர். ரேசன்கார்டில் மாற்றம் செய்து வாங்குவதற்குள் சே ரேசன்கார்டே வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
 
இப்போது பாஸ்போர்ட் முடிந்து விட்டது என்று, ஆன்லைனில் அப்ளை செய்து  அவர்களும் 20/11/2009 10 மணிக்கு என்று நேரம் ஒதுக்கியதால், பரவாயில்லை நாடு முன்னேறிக்கொண்டுதான் வருது போல என்று சந்தோசமடைந்து, பந்தாவா 9:55 பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றேன்.

ஊரில் உள்ள பலபேரு அங்குதான் இருப்பார்கள் போல, அவ்வளவு ஒரு கூட்டம். சரி நமக்குதானே டைம் போட்டு செட்யூல் போட்டு கொடுத்திருக்கார்கள்தானே ஈஸியா உள்ள போயிடலாம்னு நினைச்சு, பெரிரிரிரிய வருசையை கடந்து ஒரு செக்யூரிட்டியிடம் கேட்டா, அவர்தான் அந்த பாஸ்போர்ட் ஆபிசை தாங்கி நிற்பவர் அப்படி ஒரு எரிச்சலான பார்வை... "ந்தா, எல்லாருக்கும் 10 மணிதான் டைம், நீ அங்கே போயி நில்லு" அப்படின்னு ஒரு பெரிய வருசையை காட்டினார். வரிசையா பார்த்து அதிர்ந்து போய் நின்றேன். அந்த வரிசையில் கூட்டமும் கொஞ்சமாத்தான் இருந்தது, சரி எப்படியும் ஒரு 60 நிமிடத்தில் வரிசை முடிந்துவிடும், பாஸ்போர்க்கு அப்ளிகேசன் கொடுத்துடலாம்ன்னு நம்பி நின்றேன். அப்பதான் தெரிந்தது அது அப்ளிகேசனு கொடுப்பதற்கு உண்டான கூட்டம் இல்லை, எந்த வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவாங்களாம் அதற்கு உண்டான வரிசைதான் அது. இந்த கொடுமையா யாராவது அனுபவித்துள்ளீர்களா.

எந்த வருசையில் நிற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு வருசை.

அதுமுடிய 1 மணிநேரம் ஆச்சு. ஒருவழியா ஸ்டிக்கர் ஒட்டியாச்சு அவர்கள் சொன்ன வேறு ஒரு கியுவில் போய் நின்றேன். அங்கும் சரியான கூட்டம் இருந்துச்சு, எனக்கு முன்னாடி வயசான ஒரு அம்மா நின்று கொண்டிருந்தார்கள், பாவம் அவர்களால் நிற்க கூட முடியவில்லை,  பாஸ்போர்ட் ஆபிஸில் எப்படி விண்ணப்பம்  பூர்த்தி செய்வது போன்ற விபரங்கள் எழுதி போட்டிருந்தனர், அதில் ஒன்றுதான் வயதானவர்களுக்கு 2 மாடியில் அப்ளிகேசன் வாங்கபடும்ன்னு போட்டிருந்தது. இதை அந்த வயதான அம்மாவிடம் சொன்னேன். நீங்க "ஏம்மா கியுவில் நிக்கிறீங்க, 2 மாடிக்கு போங்க அங்க வாங்கிகிருவாங்க" அப்படீன்னு, பாவம் அவர்களும் ஏறமுடியாமல் 2 மாடிக்கு ஏறி கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்துட்டாங்க,  அங்கு கொடுக்க முடியாதாம் இங்குதான் கொடுக்கவேண்டுமாம். எனக்கே என்னவே போல ஆயிடுச்சு. என்னாலதானே நடக்க முடியாம மேல் போய்விட்டு வந்துவிட்டார்கள் என்று.

பெரிய கொடுமை என்னவென்றால், மிக அதிகமான கூட்டத்திற்கு,  எல்லாவற்றையும் செக்செய்யும் ஊழியர்கள் 3 பேரே இருந்தனர்.

கூட்டம் அப்படியே நகர்ந்து நகககககககர்ந்து போயிடுச்சு.

அங்கே இருந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு கடுகடுப்பு, எல்லரிடமும் எரிச்சலான வார்த்தைகள்தான். யாரா இருந்தாலும் ஆங்கிலத்தில்தான் பதில், ஆனால் அவர்களுக்குள் தமிழில் பேசிக்கொள்கிறார்கள், என்னமோ இந்தியாவை அவர்கள்தான் காத்துகொண்டிருப்பது போல்.

நான் எனது அப்ளிகேசன் ஃபார்ம் மற்றும் அனைத்து சர்டிபிகேட் எல்லவற்றையும் கொடுத்தவுடன், "Your photos are not good, take photos for passport" இது சொன்னவுடன் நெக்ஸ்ட் அப்படின்னுட்டாரு, நான் உடனே வெறுத்துபோயி வெளியே வந்துட்டேன்.

எப்ப மறுபடி போட்டா எடுத்து மறுபடி லீவு போட்டு அப்ளை செய்ய...

இதுதான் எனது கோபம்.

  • இப்படி செய்தால் ஏஜெண்டிடம் ஏன் அதிக பணம் எடுத்து அல்லது ஏதாவது திருட்டுதனம் செய்து பாஸ்போர்ட் வாங்க மாட்டார்கள்?
  • வயதானவர்கள், கர்பிணிப் பெண்கள் வந்தால் அவர்களுக்கு ஏன் தனி இடம் ஒதுக்க கூடாது?
  • 90% பேர் வேலைக்கு போகிறவர்கள்தான், வரவேண்டும் என்றாலே விடுப்பு எடுத்துதான் வரவேண்டும். சனி, ஞாயறு நாட்களிலும் செயல்பட்டால் என்ன?
  •  ஆன்லைன் அப்ளிகேசன் எதற்கு? அப்ளை செய்பவர்களுக்கு சரியான நேரத்தை குறிப்பிட்டால் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்.
  • அங்கிருப்பவர்கள் உட்கார இடம் இல்லை, கியுவில் நின்றுகொண்டே வரவேண்டியதிற்கிறது, ரயில் முன்பதிவு நிலையங்களில் உள்ளதுபோல் சேர் போட்டால் என்ன?
  • 10 பேர் பார்க்கவேண்டிய வேலையை 3 பேர் பார்த்தால் எல்லருக்கும் வெறுப்புதான் வரும், ஏன் அதிக பேர்களை வேலைக்கு அமர்த்த கூடாது? 

Oct 5, 2009

அவசர ஊர்தியின் ஒரு அவசர வேண்டுகோள்

அவசர ஊர்தி...


அருமையான பேரு. அவசரமாய் செல்ல வேண்டி இருப்பதால் அவசர ஊர்தி.





நல்ல பேருதான் வைத்துள்ளனர்.


எல்லாவற்றிக்கும் ஆதி அந்தம் அர்த்தம் தெரிந்துள்ள நமது மக்க்ளுக்கு இதன் அர்த்தம் இன்னும் விளங்க வில்லை என்பதுதான் கொடுமை.


அல்லது எப்பவும் போல எவன் செத்தா எனக்கு என்ன அப்படிங்கிற மனப்பான்மையா கூட இருக்கலாம்.


நானும் சென்னையில் பல இடங்களில் உய் உய் உய்ன்னு கத்திக்கிட்டு போற ஆம்புலன்சுன்னு எழுதி இருக்கிற அவசர ஊர்திகளை பார்த்துள்ளேன். ஆனா பாவம், எழுத்தில் மட்டுமே அது அவசரம். மத்தபடி தேமேன்னு மெதுவா ஊர்ந்து போகும்.


அவசரத்த எடுத்துட்டு ஊர்திய மட்டும் வச்சு இது ஊர்ந்து போக கூடியதுதான்னு சென்னை மக்கள் நினைச்சுட்டாங்க போல.


ஆம்புலன்ஸ் மட்டுமே எந்த விதமான சாலை போக்குவரத்து விதிகளுக்கு கட்டுபடாமல் செல்ல கூடியது.


ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அதை ஓட்டும் தினத்தில் யாரிடமாவது திட்டு வாங்குவார் அல்லது திட்டுவார். நமது மக்கள் புரிந்து கொண்டதுபோல் இதுவரை அவசரத்திற்கான அளவுகோலை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பது எனது எண்ணம்.


என்ன காட்டு கத்தலாய் கத்தினாலும் இதற்கு வழிவிடுபவர்கள் குறைவானவர்களே... ஆம்புலன்ஸ் சப்தம் காதுக்குள் ஒலித்தாலும் சரி அதனின் ஓளி கண்ணை கூசசெய்தாலும் சரி எனக்கு என்ன, நான் போறதுதான் எனக்கு முக்கியம் என்று போவோறே மிக அதிகமானோர்.


யாருக்கு என்ன அவசரமோ, என்ன சீரியஸ் மேட்டரோ? என்றாவது சிந்தித்து செயல்பட்டிருப்பார்களா? ஒவ்வொரு தடவை ஆம்புலன்ஸ் பார்க்கும் போதெல்லாம் எனது மனதில் வலி உண்டாகும். கடவுளே இதில் இருக்கும் மனிதரை காப்பாற்று என்று வேண்டிக்கொள்வேன், வழியும் விட்டு ஒதுங்க ஆரம்பித்துவிடுவேன். ஆம்புலன்ஸ் போக வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் சென்றாலே அம்மனிதர் குணமாகிவிடுவார். நான் துபாயில் 2 வருடம் வேலை செய்ததால் அங்கு இருக்கும் சாலை போக்குவரத்து விதிகள் இந்தியாவுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளேன். அங்கு ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்டாள், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள் ஏதாவது சந்து பொந்து இடுக்குகளில் டக்கு டக்குன்னு போய் ஒளிந்து கொண்டு ஆம்புலன்சிற்கு வழி விடும், அந்த அளவிற்கு மக்கள் அதன் அர்த்தம் புரிந்து வைத்துள்ளனர், ஆதலால் மிக உடனடியாக அது செல்வதற்கு ஏற்ப வழி ஏற்படுகிறது. துபாயில் வசிப்பவர்கள் 70% பேர் நமது மக்கள்தான், அங்கு பின்பற்றும் விதிகளை இங்கு வந்தவுடன் மறந்து விடுகின்றனர்.


சமிபத்தில் சென்னையின் ஒரு மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் சப்தம் போட்டு கொண்டிருக்கிறது, நான் எதிர் பக்கமாக சென்று கொண்டுருந்தேன், எப்பவும் போல் அந்த மேம்பாலம் அந்த நேரத்தில் மிகவும் அதிப்படியான வாகனங்களாள் ஊர்ந்து கொண்டிருக்க, அந்த ஆம்புலன்சிற்கு வழி விடுவோர் எவருமில்லை... அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் அதன் முன்பு நிற்கும் வாகன ஓட்டிகளிடம் வழி விடும்படி கத்தி கொண்டிருந்தார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரின் கூட இருந்தவர் கண்ணீருடன் கதறி அனைவரிடம் கெஞ்சி கொண்டிருந்தார், வழி விட்டவர் கொஞ்சம்தான்... கொடுமையான விசயம் கேட்டு கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தவர்கள்தான் அதிகம், அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது ஏன் என்றால் முன்பு நிற்கும் வாகனங்கள் வழி கொடுத்தால்தான் அவர்களும் வழி கொடுக்க முடியும்.


இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குற்றம் சொல்லும் வழக்கத்தைதான் அதிப்படுத்தி வைத்திருக்கிறோம்.


இங்குதான் ஆம்புலன்ஸ் மான்புமிகு மந்திரிகளுக்ககவும் பெரிய பதவியில் இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்காவும் வழி விட்டு கொண்டிருக்கிறது.


அதையிம் விட கொடுமை சிக்னல் சிவப்பு விளக்கில் ஆம்புலன்ஸ் இங்கு நிறுத்தபடுகிறது.


நமது மக்கள் இரக்க குணம் மிக்கவர்கள்தான், ஒரு விசயம் தமது குடும்பத்தினற்கும் சுற்றாருக்கும் ஏற்படாதை வரை அவ்விசயத்தில் இரக்கமற்றவர்களாகவே இருப்பார்கள்.


இவ்விசயத்தில் முன்அனுபவம் தேவையா? யாரும் ஆம்புலன்சில் போகவேண்டும் என்று ஆசை படமாட்டார்கள்.


தயவுசெய்து ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்கும்போதும் சரி, அதன் ஒளி நம்மை சென்றடையிம் போதும் சரி, மனதில் இருத்தி கொள்ளுங்கள் நீங்கள் வழிவிடும் போது ஒரு உயிர் காப்பாற்ற படுகிறது. நமக்கு ஏதாவது தேவையின் போது மற்றவர்கள் அதாவது அறியாது தெரியாதவர்கள் உதவும் போது எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ அதை விட பல மடங்கு சந்தோசம் மற்றவர்களுக்கு உதவும் போது ஏற்படுகிறது.


இதை படிக்கும் நீங்கள், நீங்களும் மாறி மற்றவர்களும் மாற உதவலாமே? ஒரு உயிர் உங்களாலும் காப்பற்ற படுகிறது என்பது எவ்வளவு சந்தோசமா விசயம்.


வாழும் வாழ்கை கொஞ்சம்தான், மற்றவர்களுக்கு உதவி வாழ்கையை அழகாக ஆக்கிக்கொள்ளலாமே.

Sep 30, 2009

தமிழை கொலை செய்தது போதும்

<<<
அய்யா இஸ்லாமியரே தமிழை கொலை செய்தது போதும் . இனியாவது தமிழை விட்டுவையுங்கள், தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் தமிழில் எழுத தெரியவில்லை. உங்களுக்கெல்லாம் எதற்கு தமிழ் வலைப்பதிவு , உமக்கெல்லாம் உருது தான் லாயக்கு. தயவு செய்து நிறுத்திகொள்ளும் உமக்கு கோடி புண்ணியமாக போகும். நீங்கள் சொல்லவிருக்கும் பதிவுகள் அனைத்தையும் படிக்கவே தோன்றவில்லை ஏனென்றல் தமிழை கொலை செய்வது பார்த்து தான் . தமிழுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் தயவு செய்து உங்கள் பதிவை தமிழில் எழுதுவதை நிறுத்தி கொள்ளுங்கள்







----இவண் முனைவர் ப . பிரியா கண்ணப்பன்
priya.9582@gmail.com
>>>
 
இப்படி ஒரு மெயில் எனக்கு இன்று வந்திருந்தது.
 
நானா தமிழை கொலை செய்கிறேன்?
 
ஆரம்பத்தில் எதுவும் தவறாகத்தான் இருக்கும், போக போகத்தான் சரியாகும், நானும் முடிந்த அளவு தவறில்லாமல்தான் முயற்சிக்கிறேன். ஏதாவது எழுத்து பிழையிருந்தால் அதை கடிதத்தில் கூறிருந்தால் சந்தோசப்பட்டு திருந்திருப்பேன்.
 
நான் எழுது எழுத்தில் இலக்கண தவறு இருந்து, அதை மாற்ற சொல்லி கடிதங்கள் வந்தன, அவர்களுக்கும் நன்றி சொல்லி அவர்கள் சொன்ன மாற்றம் படி மாற்றினேன்.
 
ஏன் இந்த வன்மம்?
 
நான் தமிழில் எழுதுவதற்கு காரணம், அது எனது தாய்மொழி. உருது எனக்கு தெரியாது, எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. தெரிந்த மொழியில்தானே எழுத முடியும்.
 
ஏன் அனைத்தையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்?
 
எது எடுத்தாலும் மதம்தானா?
 
தமிழை யாரும் இங்கு சொந்தம் கொண்டாட தேவை இல்லை. எல்லாருக்கும் பொதுதான் அது. தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடும் கூட்டம் என்றாவது தமது சொந்தமான் நிறுவனத்தில் தமிழில் பெயர் வைத்திருக்குமா? அனைவரையும் நான் சொல்ல வில்லை. இஸ்லாமியர்கள் நடத்தும் நிறுவனங்களில் பாருங்கள் முடிந்த அளவு தமிழில்தான் பெயர் வைத்திருப்பார்கள்,  இங்கு மட்டும் அல்ல, நான் துபாயில் பணிபுரிந்ததால் அங்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளுக்கு தமிழில்தான் பெயர். நாங்கள் தமிழை கொலை செய்ய விரும்பினால் ஏன் தமிழில் பெயர்?
 
என்னவோ இவர்கள் மட்டும்தான் தமிழை காப்பது போலவும், மற்றவர்கள் தமிழை கொலை செய்வது போலவும்...
 
 

இலங்கையில் தமிழ் சகோதர்கள் செத்து கொண்டுறுக்க, என்ன செய்தார்கள் இவர்கள்?
 
 
 
தமிழ் மொழிக்காக வாழ்கையில் என்ன செய்திருப்பார்கள்? அடுத்தவர்களை குற்றம் சொல்வதை தவிர?
 
 
 
 
எதுக்கு எடுத்தாலும் குறை.
 
எப்படித்தான் மதத்தை எல்ல விசயத்திலும் முடித்து போடுவார்களோ?
 
அது எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுகிறது?
 
தமிழை யாரும் இங்கு வாழ வைக்க வேண்டாம்.
அதுதான் பல பேரை இங்கு வாழ வைத்து கொண்டிருக்கிறது.

Sep 17, 2009

மழலைச் சொல் கேளாதவர்

இப்பதிவு நான் எழதுவதற்கு காரணமே எனது நண்பன்தான்.


அவனேடு நான் சொன்னவைதான் இங்கு உங்களுடனும் பகிர்ந்துகொள்ளனும்னு தோனுச்சு அதான் "மழலைச் சொல் கேளாதவர்", அப்படி என்ன அட்வைஸ் மழையா பொழியப்போறான்னு நென்ச்சு டெர்ரர் ஆகாதீங்க தெரிச்சு ஓடாதீங்க


பதிப்பின் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சமாவது கெஸ் பண்ணீருப்பீங்க...


அவசரப்படாதீங்க! பொறுமை பொறுமை... :)


நீங்க நினைக்கிறது கிடையாது.. இது டோட்டல் வேற..


நான் பேசப் போறது வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களை பற்றிதான்.


எனது நண்பன் துபாய்ல குப்பை கொட்டுகிட்டு இருக்கான், கொஞ்சம் வருசமாத்தான் அங்க போய் குப்பயை கொட்டுறான்... ஊருக்கு வந்தா அதிக பட்சம் ஒரு மாசம்தான் அதுக்கு மேல ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டான், இருந்தா ஆப்பு அடுச்சுருவாங்க...


போன வருசம்தான் அவனுக்கு கல்யாணம் ஆச்சு, அதுக்கும் தலைவர் வந்து இருந்தது 30 நாள்தான், சமிபத்தில் அவனுக்கு குழந்தை பிறந்தது... அவன் குழந்தைய பாக்க வருவான்னு பார்த்தால், வரவே இல்லை, கூப்பிட்டு கேட்டான் "வேலை பிசிடா இப்ப வர முடியாது",  இந்த எழவு பதிலத்தான் எப்பவும் சொல்லுவான்.

ம்ம்ம்ம்ம்ம்ம்...

பெத்த புள்ளைய பாக்கம கூட அப்படி என்ன வேலை,  ரெண்டு நாளைக்கு ஊருக்கு வந்துட்டு போய்ட்டாத்தான் என்ன,  உலகத்தில் எவ்வளவே பேர் என்னனெமே செஞ்சும் குழந்தை பாக்கியம் இல்லாம இருக்காங்க, இவனுக்கு இறை அருளால் சீக்கிறமா கிடைச்சுடுச்சி, இவன் இப்படி இருக்கானே இப்படியே மனசுக்குள்ள வருந்தினேன்.  நான் போயி குழந்தையே பார்த்தேன், அப்படியே பூப்போல... கடவுள் அற்புதமானவன்... எவ்வளவு அழகாக படைத்திருக்கிறான். குழந்தைகளை ரசிக்காதவன் மனிதனே இல்லை.

இல்லையா?




இவன் உண்மைதான் சொல்கிறானா, இல்லையான்னு உளவு பாக்கனும்னு,  துபாய்ல இருக்குற என்னோட வேற ஒரு நண்பன்கிட்ட இதப்பத்தி சொல்லி நல்ல விசாரிச்சு சொன்னேன், அவன் சொன்னது "இவனுக்கு இப்ப லீவு கிடையாதாம்!" .

எனக்கு தோனியதெல்லாம், இப்படியெல்லாமா இருக்கனும். ஏன் நம்ம நாட்டில் வேலை  தேடிக்கொண்டு இங்கே குடும்பத்துடன் வசித்தால்தான் என்ன? மிகவும் பாவம் தனது குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள். :( ஏதாவது ஒரு துக்கம்னா உடனடியா வர முடியாமல், சந்தோசம்னா யாருடனே சேர்ந்து கொண்டாடிக்கொண்டு...  சே

பணம்தான் வாழ்க்கையா?

ஒரு சில விசயங்களை கடந்து விட்டால் என்ன முயற்சி செய்தலும், கோடி கோடியா பணத்தை திரும்ப கொட்டினாலும் திரும்ப பெற முடியாது.

ஆயிரம்தான் இருந்தாலும், கல்யாணம் ஆவதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தாலும். கல்யாணத்திற்கு பிறகு கண்டிப்பாக தனது துனைவியருடன் தான் இருக்கனும். ஒரு சந்தோசம்னா பகிர்ந்து கொள்ள துக்கம்னா கூட பங்கெடுக்க இணை எப்போதும் வேண்டும்.  தன்னுடைய குழந்தை வளருவதை பக்கதில் இருந்து அனு அனுவாக ரசிக்க வேண்டும்.

வள்ளுவர் கூட
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலை சொல் கேளாதவர்.


அதாவது,  குழல் இசைதான் சிறந்தது, யாழ் இசைதான் சிறந்ததுன்னு சொல்வார்களாம் சிலர், அவர்கள் யாரென்றால் தனது மழலை பேச்சை கேக்காதவர்களாம்.