Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Jan 30, 2013

விஸ்வரூபம் : கருத்து சுதந்திரம்

எதற்கு இவ்வளவு எதிர்ப்பு என்றே தெரியவில்லை... எந்த நேரத்தில் படம் ஆரம்பித்தாரோ ஒரே சிக்கல்தான்; பாவம் கமல்... பரிதாபம்தான், எவ்வளவு தடை இந்த படத்தை வைத்து இந்து முஸ்லீம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கலாம் என்றே பலபேர் நினைக்கின்றனர்... ஒரு வழியாக தடை நீங்கிடுச்சு; 30 ஜனவரி முதல் படம் கண்டிப்பாக திரைப்படும், நல்ல ஒரு விளம்பரம் ஆகிடுச்சு... அப்படி என்னதான் இருக்கு படத்தில என்றே பலபேர் சென்று பார்பார்கள். முஸ்லீம்கள் முஸ்லீமை பற்றி சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கு மிகவும் வித்தியாசம் இருக்கும்... தலிபானை பற்றி யாருக்கு நல்ல அபிப்பிராயம் இருக்க முடியும்? அவர்கள் மனிதர்களே இல்லை... அவர்கள் அப்படிதானே? இதில் கமல் என்ன தப்பாக சொல்லிவிட்டார் என்றே தெரியவில்லை?


 

தாலிபான் எனும் தீவிரவாதியை அழிக்க கூடிய தமிழக முஸ்லிமா கமல் வருகிறாரம்; இதுவே கமலை தவிர மற்றவர்வர்கள் எடுத்திருந்தால் எப்படி இருந்துருக்கும்? கமலுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால்...எப்பவுமே எல்லாரை நல்லவராக காட்ட முடியாது, உண்மை இதுதான்; அக்பர் ஒரு பெரிய சக்ரவர்த்திதான், ஆனால் பீர்பால் பற்றிய கதையில் அக்பர் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகதான் வருவாரு.... அங்கு போய் அக்பரின் சாகசங்களை சொல்ல முடியாது.


கருத்து சுதந்திரம்: இதுதான் கண்டிப்பா விவாதிக்க கூடியது, ஓசில கூகுள் பிலாக் கொடுத்துருக்கு என்னுடைய சிந்தனை எல்லாம் பட்டை தீட்டுவேன், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களின் நம்பிக்கையும் சிதைப்பேன் இதுதான் கருத்து சுதந்திரம், ஒருவர் ரோட்டில் செல்லும் போது கையும் காலையும் வீசிக்கொண்டு நடந்தால் அது அவர் சுதந்திரம், அதே அவர் கையை மூலம் அடுத்தவர் நடக்க முடியாமல் தடுதால் அது சுதந்திரமா? இல்லை அடுத்தவர் முகத்தில் கை வைப்பது சுதந்திரமா? என்கிட்ட காசு இருக்கு நான் எப்படி வேன்னா படம் எடுப்பேன்னு இது என்னுடை கருத்து சுதந்திரம், ஒருவர் தனது பணத்தின் மூலம் அவரை பற்றி எவ்வளவு கேவலமாக வேண்டும் என்றால் எடுக்கலாம், ஆனால் அவரின் குடும்பத்தாரை பற்றி எடுக்க முடியாது கூடாது, ஏன்னா அவர்க்கு அவரின் குடும்பத்தாரை பற்றி கேவலமாக எடுக்க ரைட்ஸ் இல்லை... முடியவே முடியாது எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு அப்படிதான் எடுப்பேன், எழுதுவேன் அப்படி என்பவர்களை என்ன செய்ய முடியும்?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ சிப்பாயை கழுத்தை அறுத்து கொலை செய்தானே அப்ப ஏன் முஸ்லீம்கள் போராடலை/பாகிஸ்தானை எதிர்க்கலை என்கிறார்கள், ஆமா இதை குற்றமாக கூறும் எவ்வளவு பேர் இதற்கு எதிராக போராடினார்கள்? சன் நியுஸ்ல இயக்குனர்/தயாரிப்பாளர் செல்வமணி மற்றும் கேயார் கூட கூறினார்கள்; அவர்கள் இதற்கு எதிராக போராடினார்களா? எதாவது எதிர்ப்பை தெரிவித்தார்களா? நாம் எல்லாரும் ஒரு காமன் மேன் அவ்வளவுதான்... எங்கயாவது ஒரு அன்னா ஹசாரே வரும்போது சேர்ந்து இருந்து சப்போர்ட் செய்வோம், வேறு என்னதான் செய்திருக்கிறோம்? இது ஒரு லூசுதனமான வாதமாகத்தான் இருக்கு. ஒரு செய்தி எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை, ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செல்பவர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கும் செல்வார்கள், அப்படி ஒரு வேனில் செல்லும் போது தொண்டி எனும் இடத்தில் அந்த வேன் விபத்துக்கு உள்ளாகிறது அனைவரையும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக முஸ்லீம்கள் உதவி செய்திருக்கிறார்கள்.


பல பேர்களின் கருத்து, படத்தை படமாக ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே பார்க்க கூறுகிறார்கள் அதுவும் தமிழகத்தில்... ஆளும் கட்சியும் சரி, எதிர்கட்சியும் சரி திரைபடத்தின் மூலம் வந்தவர்களே. பொழுதுபோக்கு என்பது தேய்ந்து போயிடுச்சு, நம்மக்கள் பவர்ஸ்டாரை முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டர்கள் அல்லவா? முஸ்லீம்னாவே குண்டு வைக்கிறவனாவும், ஆடு மாடு வெட்டுகிறவனாகவும், சாம்புராணி போடுகிறவனாகவும் காட்டுகிறது இந்த பொழுதுபோக்கு சாதனம். நான் சென்னையிலதான் இருக்கேன், வீடு வாடகைக்கு பிடிக்க முடியாது; முஸ்லீம்னு சொன்னாவே வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க, ஏன்? எப்படி வந்தது இந்த வெறுப்புணர்வு?  ஊடகமும் ஒரு காரணம் இல்லையா????


எப்படியோ, முஸ்லீம்கள் மேல் நல்ல நட்புடன் இருப்பவர் கமல், பாபர்மசூதி இடிப்பின் போது திரையுலகின் முதல் ஆளாக தனது கண்டனத்தை பதிவு செய்தவர் கமல், மருதநாயகம் என்ற பெயரில் முஸ்லீம்களே மறந்துவிட்ட ஒருவரை பற்றி படத்தை ஆரம்பித்தவர்... இனிமேலும் இவற்றை கமலிடம் எதிர்பார்க்க முடியுமா???

Aug 13, 2010

விதி சரிதானா?

வேறு ஒரு தளத்தில் இதை பார்த்தேன், பிடித்திருந்தது... அதான் பகிறலாமே என்று...






முதலிலே சொல்லிவிடுகிறேன், கடவுள் மேல் எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது, ஓரிறை கொள்கை கொண்டுள்ளேன். என்னுடைய கடவுள் நம்பிக்கையவும் இதோடு தொடர்புபடுத்தாதீர்கள்.

சரி விதி ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

விதி சரிதானா?

மிகவும் குழப்பதிற்கூறியது.

அனைவராலும் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு காரணத்தினால் விதியின் மேல் பாரத்தை போட்டுள்ளுனர்.

அனைத்து மதத்தினரும் விதியை ஏற்றுக்கொண்டுள்ளனர்… அதாவது மத நூல்கள் கூறியதில் ஏதாவது ஆராய்ந்து கேள்வி கேட்டோம் ஏன்றால், உடனடியாக விதியைதான் காரணம் காட்டுவார்கள். இது மட்டுமல்ல, நம்மால் ஏற்றூக்கொள்ள முடியாத, புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று நடக்கும் போதும் விதிதான் பழியை ஏற்றுக்கொள்கிறது.

பாவம் விதி, பாவப்பட்டு பாரம் சுமக்கின்றது.

நமக்கு அறியாத நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு விசயங்கள் உலகத்தில் நடந்து கொண்டுள்ளன… அனைத்துக்கும் விதியை காரணம் காட்டமுடியுமா?

விதியின் படிதான் அனைத்தும் நடக்கின்றனவா?

விதி ஏற்றுக்கொள்ளும் அனைத்து மதவாதிகளும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், ஆதாவது, விதி கடவுள் நம்பிக்கையை தகர்த்துவிடும்.

விதியின் படி எது நடக்க இருந்த்தோ, அதுதான் நடந்த்து.

இப்போது நான் விதியை நம்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம், நான் எழுதும் இந்த பதிவும் முன்பே நான் இவ்வாறு எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்ட்தாருக்கும். ஆதாவது, விதியை நான் தூற்றி எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்டது.

உலகத்தில் நடக்கும் விசயங்கள், முன்பே தீர்மானிக்கப்பட்டது, நாம் செய்யும் நன்மையும் தீமையும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை. இதன் மூலம், நன்மை செய்பவர்களே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது அடிபட்டு போகின்றது இல்லயா? விதியை நம்பும் பொழுது, இவற்றையும் நம்ப வேண்டயதுள்ளது.
நன்மை செய்யும் ஒருவர் சொர்கத்திற்கு செல்வார் என்பதும், தீமை செய்யும் ஒருவர் நரகத்திற்கு செல்வார் என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபடுகிறது. கடவுள் ஒருவர் செய்த நன்மை தீமையை பொருத்து தீர்ப்பளிப்பார், ஆனால் விதியின் படி ஒருவர் எங்கு செல்ல போகிறார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன்படி கடவுளுக்கே தீர்ப்புக்கே ஒரு கேள்விக்குறி? கடவுள் ஏன் நரகத்திற்கு செல்பவர்களை படைக்க வேண்டும்? இன்னார்தான் சொர்கத்திற்கு செல்பவர்கள் என்று எவ்வாறு முடிவெடுக்க படுகிறது. விதியின் படி ஏன் நரகம் செல்பவர்கள் தீமைகளால் ஆழ்படுகின்றனர். விதியை நம்பினால் இவற்றையும் நம்ப வேண்டியதுள்ளது.


இதை படிக்கும் போது மிகவும் குழப்பமாக தோன்றலாம், ஆனால்.... உண்மையாகவே உள்ளது, பொதுவாக எல்லா மதத்திலும் எல்லாம் உன் விதிபடிதான் நடக்கும் என்பார்கள் அல்லது கோள்களின் படி நடக்கும் என்பார்கள் எப்படியோ நமது வாழ்க்கையை வேறு சில விசயங்கள்தான் தீர்மானிக்கின்றன, ஆனாலும் அதை நம்ப(லாம்???) கூடாது.

கஷ்டகாலம் படுச்சவுடனே தலை சுத்த ஆரம்புச்சுடுச்சு :(

மத நம்பிக்கையின் படி, நல்லது செய்தால் சொர்க்கமும்/முக்தியும்; கெட்டது செய்தால் நரகமும்/மீண்டும் பிறப்பு கிடைக்கும் இல்லையா? இப்போது ஒருவர் ஏதோ நல்லது செய்கிறார் என்றால் அவர் ஏற்கனவே நல்லது செய்வார் என்று தீர்மானிக்க பட்டுள்ளது இல்லையா, அதே போல் ஒருவர் ஒருவரை கொலை செய்து விட்டார் என்றால் அதாவது தப்பு செய்துவிட்டார் என்றால் ஏற்கனவே இது தீர்மானிக்க பட்டதாகத்த்னே அர்த்தம் அதாவது இன்னார் இன்னாரால் கொலை செய்யபடுவார் என்று, அப்படி கொலை செய்பவருக்கு தீமையிம் செய்யப்பட்டவர் வேறு ஒன்றையும் அடைவார்கள் விதி/கோள்கள் படி. சோ கொலை செய்தவர் தண்டனைக்கு உள்ளாகிறார் அதாவது நரகத்திற்கோ மீண்டும் மனித பிறப்போ எடுக்கிறார், அப்படி என்றால் இன்னார்தான் இப்படிதான் என்று ஏற்கனவே தீர்மானிக்கபட்டுள்ளது இல்லையா?

இதை நினைத்தாலே மிகவும் குழப்பமாக உள்ளது, தயவு செய்து இதை பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் மிகவும் நன்று.

Aug 6, 2010

இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்

சிலரை உயிரோடு விட்டுள்ளேன், அவர்கள் மீது இரக்கபட்டு அல்ல, அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். --ஹிட்லர்.

இந்த படங்களை பாருங்களேன், மிகவும் வருத்தமாய் இருக்கும் இதையெல்லாம் பார்க்க, ஏன்தான் இப்படி நடக்கிறதோ??? ஹிட்லர் சொன்னது உண்மைதான் போல், ஈவு இரக்கம் இல்லாமல் இப்படியும் செய்வார்களா?































Dec 30, 2009

வெளிவந்துகொண்டிருப்பது பூனைக்குட்டியா ஓநாயா?

இப்போதுதான் அதிக அதிக பூனைக்குட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது... மிகவும் பக்கத்தில் பார்க்காமல் விட்டதினால் தெரியவருகிறது அது பூனைக்குட்டி இல்லை, ஓநாய் என்று. இவ்வளவு நாள் அடிமனதில் தேக்கிவைத்திருந்தவை இப்போதுதான் வெளிவருகின்றன. அது கூட அதிகம் பழகிவருக்கே அது தெரியவில்லை பூனைக்குட்டியா அல்லது வேறு எதுவுமா என்று... ஓநாய் எதற்கு வரும், இரத்தம் தேடிதான் ஓநாய் வரும். இரத்த்தை பார்க்காமலும் இறந்த மனித உடலை பார்க்காமலும் கண்டிப்பாக ஓநாய் செல்லாது.




விதைப்பது விஷம் என்றே தெரியாமல் சிலபேர்,
நட்பை அசிங்கபடுத்தியிம்,
உறவை கொச்சைபடுத்தியும்..
இதுதானா அவர்கள் விருப்பம்?
அசிங்கத்தை பார்த்து விட்டால்
சிங்கத்தை எதிபார்க்கும் கூட்டம்...
இதுதான் இறுதி,
இதுதான் முடிவு என்றும் சிலபேர்...
அய்யோ பாவம்...
கொடுப்பதுதான் கிடைக்கும் அறியாதவர்களா அவர்கள்?
பரவட்ட்டும் தீ...!


இதற்கு மேலும் இதை பற்றி எழுத விரும்பவில்லை, புரியவேண்டியவர்களுக்கு புரிந்தாலும் சரி தொலைந்தாலும் சரி, நான் ஒரு பிரபல எழுத்தாளன் இல்லை பிரபல எழுத்தாளர்கள் படிப்பதற்கு, ஒரு சராசரியின் உள்ள கூக்குரல்தான் இது.

தீ பரவ வேண்டுமா அல்லது அனைக்க வேண்டுமா.

Oct 21, 2009

கடவுள் மோசமானவரா?

எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்கனும்?

கடவுளுக்கு கருணையே இல்லையா?

நான் யாருக்கும் எந்த துன்பமும் செய்யலையே!

எல்லாம் எனக்கு மட்டுமே நடக்கனுமா?

பட்ட காலிலே ஏன் படுதோ?

இறைவா ஏன் இந்த சோதனை?

நமக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது?

கடவுளே நீ  என்னை காப்பதே இல்லையா?

இப்படிலாம் எல்லாருக்கு ஏதாவது ஒரு நேரத்தில் சிந்தனை வரும். எனக்கும் அடிக்கடி கடவுள் மேல கோவம் கோவமா வரும், அது கொஞ்ச நேரம்தான் இருக்கும், அப்புறம் சகஜமாயிடுவேன். சின்ன விபத்து நடந்தா, நல்ல வேளை பெரிய விபத்து நடக்காம ஆண்டவன் காப்பாத்திட்டன்னுதான் நினைப்பேன், அதுபோல்  100 ருபாய் காணாமல் போனா 10000 போகாம இருந்துச்சேன்னு நினைப்பேன். ஏதாவது தவறா ஒரு விசயம் நடந்தா, நல்ல வேளை ரெம்ப பெருசா எதுவும் நடக்கலை இப்படித்தான் நினைக்கனும்.

உண்மையிலே கடவுள் நம்மளை எல்லா விசயத்திலும் பாதுகாத்து கொண்டுதான் இருக்கிறார், நாம்தான் புரிந்து கொள்வதுமில்லை, சரிவர நன்றி செலுத்துவதும் இல்லை,  நன்றி செலுத்த விட்டாலும் பரவாயில்லை நாம் செய்யும் அனைத்து தவறுக்கு காரணம் கடவுளே என்று தூற்றுகிறோம்.

கொஞ்ச நாளைக்கும் முன்பு என்க்கு இந்த மெயில் வந்துருந்துச்சு... மிகவும் நான் விரும்பிய மெயில். கடவுளின் கருணையை பற்றி ஒரு படத்தில் சொன்ன விசயம். பார்க்கும் அனைவருக்கும் ஒரு சந்தோசத்தை தர கூடியது.



பாருங்கள் இந்த படத்தில்... ஒருவனை எப்படி கடவுள் காக்கிறார் என்பதையும், அவன் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளான் என்பதையும்.