Showing posts with label பிரிவினை. Show all posts
Showing posts with label பிரிவினை. Show all posts

Jan 30, 2013

விஸ்வரூபம் : கருத்து சுதந்திரம்

எதற்கு இவ்வளவு எதிர்ப்பு என்றே தெரியவில்லை... எந்த நேரத்தில் படம் ஆரம்பித்தாரோ ஒரே சிக்கல்தான்; பாவம் கமல்... பரிதாபம்தான், எவ்வளவு தடை இந்த படத்தை வைத்து இந்து முஸ்லீம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கலாம் என்றே பலபேர் நினைக்கின்றனர்... ஒரு வழியாக தடை நீங்கிடுச்சு; 30 ஜனவரி முதல் படம் கண்டிப்பாக திரைப்படும், நல்ல ஒரு விளம்பரம் ஆகிடுச்சு... அப்படி என்னதான் இருக்கு படத்தில என்றே பலபேர் சென்று பார்பார்கள். முஸ்லீம்கள் முஸ்லீமை பற்றி சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கு மிகவும் வித்தியாசம் இருக்கும்... தலிபானை பற்றி யாருக்கு நல்ல அபிப்பிராயம் இருக்க முடியும்? அவர்கள் மனிதர்களே இல்லை... அவர்கள் அப்படிதானே? இதில் கமல் என்ன தப்பாக சொல்லிவிட்டார் என்றே தெரியவில்லை?


 

தாலிபான் எனும் தீவிரவாதியை அழிக்க கூடிய தமிழக முஸ்லிமா கமல் வருகிறாரம்; இதுவே கமலை தவிர மற்றவர்வர்கள் எடுத்திருந்தால் எப்படி இருந்துருக்கும்? கமலுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால்...எப்பவுமே எல்லாரை நல்லவராக காட்ட முடியாது, உண்மை இதுதான்; அக்பர் ஒரு பெரிய சக்ரவர்த்திதான், ஆனால் பீர்பால் பற்றிய கதையில் அக்பர் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகதான் வருவாரு.... அங்கு போய் அக்பரின் சாகசங்களை சொல்ல முடியாது.


கருத்து சுதந்திரம்: இதுதான் கண்டிப்பா விவாதிக்க கூடியது, ஓசில கூகுள் பிலாக் கொடுத்துருக்கு என்னுடைய சிந்தனை எல்லாம் பட்டை தீட்டுவேன், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களின் நம்பிக்கையும் சிதைப்பேன் இதுதான் கருத்து சுதந்திரம், ஒருவர் ரோட்டில் செல்லும் போது கையும் காலையும் வீசிக்கொண்டு நடந்தால் அது அவர் சுதந்திரம், அதே அவர் கையை மூலம் அடுத்தவர் நடக்க முடியாமல் தடுதால் அது சுதந்திரமா? இல்லை அடுத்தவர் முகத்தில் கை வைப்பது சுதந்திரமா? என்கிட்ட காசு இருக்கு நான் எப்படி வேன்னா படம் எடுப்பேன்னு இது என்னுடை கருத்து சுதந்திரம், ஒருவர் தனது பணத்தின் மூலம் அவரை பற்றி எவ்வளவு கேவலமாக வேண்டும் என்றால் எடுக்கலாம், ஆனால் அவரின் குடும்பத்தாரை பற்றி எடுக்க முடியாது கூடாது, ஏன்னா அவர்க்கு அவரின் குடும்பத்தாரை பற்றி கேவலமாக எடுக்க ரைட்ஸ் இல்லை... முடியவே முடியாது எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு அப்படிதான் எடுப்பேன், எழுதுவேன் அப்படி என்பவர்களை என்ன செய்ய முடியும்?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ சிப்பாயை கழுத்தை அறுத்து கொலை செய்தானே அப்ப ஏன் முஸ்லீம்கள் போராடலை/பாகிஸ்தானை எதிர்க்கலை என்கிறார்கள், ஆமா இதை குற்றமாக கூறும் எவ்வளவு பேர் இதற்கு எதிராக போராடினார்கள்? சன் நியுஸ்ல இயக்குனர்/தயாரிப்பாளர் செல்வமணி மற்றும் கேயார் கூட கூறினார்கள்; அவர்கள் இதற்கு எதிராக போராடினார்களா? எதாவது எதிர்ப்பை தெரிவித்தார்களா? நாம் எல்லாரும் ஒரு காமன் மேன் அவ்வளவுதான்... எங்கயாவது ஒரு அன்னா ஹசாரே வரும்போது சேர்ந்து இருந்து சப்போர்ட் செய்வோம், வேறு என்னதான் செய்திருக்கிறோம்? இது ஒரு லூசுதனமான வாதமாகத்தான் இருக்கு. ஒரு செய்தி எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை, ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செல்பவர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கும் செல்வார்கள், அப்படி ஒரு வேனில் செல்லும் போது தொண்டி எனும் இடத்தில் அந்த வேன் விபத்துக்கு உள்ளாகிறது அனைவரையும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக முஸ்லீம்கள் உதவி செய்திருக்கிறார்கள்.


பல பேர்களின் கருத்து, படத்தை படமாக ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே பார்க்க கூறுகிறார்கள் அதுவும் தமிழகத்தில்... ஆளும் கட்சியும் சரி, எதிர்கட்சியும் சரி திரைபடத்தின் மூலம் வந்தவர்களே. பொழுதுபோக்கு என்பது தேய்ந்து போயிடுச்சு, நம்மக்கள் பவர்ஸ்டாரை முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டர்கள் அல்லவா? முஸ்லீம்னாவே குண்டு வைக்கிறவனாவும், ஆடு மாடு வெட்டுகிறவனாகவும், சாம்புராணி போடுகிறவனாகவும் காட்டுகிறது இந்த பொழுதுபோக்கு சாதனம். நான் சென்னையிலதான் இருக்கேன், வீடு வாடகைக்கு பிடிக்க முடியாது; முஸ்லீம்னு சொன்னாவே வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க, ஏன்? எப்படி வந்தது இந்த வெறுப்புணர்வு?  ஊடகமும் ஒரு காரணம் இல்லையா????


எப்படியோ, முஸ்லீம்கள் மேல் நல்ல நட்புடன் இருப்பவர் கமல், பாபர்மசூதி இடிப்பின் போது திரையுலகின் முதல் ஆளாக தனது கண்டனத்தை பதிவு செய்தவர் கமல், மருதநாயகம் என்ற பெயரில் முஸ்லீம்களே மறந்துவிட்ட ஒருவரை பற்றி படத்தை ஆரம்பித்தவர்... இனிமேலும் இவற்றை கமலிடம் எதிர்பார்க்க முடியுமா???

Jan 25, 2010

தமிழன் இளிச்சவாயனா?

வர வர தமிழன் இங்க வேலையே செய்ய முடியாது போல இருக்குது, இப்பவே ஹிந்திக்காரன் சென்னையில எல்லா இடத்திலையும் வந்துட்டான், சென்னையில தமிழ்நாடு வகை சாப்பாடு போயி ஹிந்தி டைப்பு சாப்பாடு வந்துடுச்சு, தமிழ்படங்கள் அதிகமா வெளிட்டது போக நிறையவே ஹிந்திபடங்களா வர ஆரம்புச்சுடுச்சு... இங்க பிழைக்க வந்தவன் எல்லாம் இங்க உரிமை கொண்டாட ஆரம்புச்சுட்டான். இப்பவே பல பகுதிகளுக்கு தமிழன் வீடோ நிலமோ வாங்க முடியாத நிலமை, சென்னையில சில இடங்கள் இருக்கு மார்வாடியை தவிர யாரும் அங்கு குடி போக முடியாது, தமிழ்நாட்டுடைய மொழியா ஹிந்தியை ஆக்கிடுவாங்க போல இருக்கு... இப்ப வரைக்கும் லங்காவுல தமிழனை அடிக்கிறானுக, மலேசியாவுல அடிக்கிறானுக, அப்ப அப்ப மகராஷ்ட்ராவுலயும் கர்நாடகத்திலயும் அடிப்பானுக. நாம எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கனும் அது போதாதுன்னு இங்க வேற வந்து அடிக்கிறானுக... நாமதான் எல்லாதையும் பொருத்துகிட்டு போகிட்டு இருக்கிறோம்... இந்தியாவவது மயிராவது??? எல்லாம் வேஸ்ட்... இப்படி தமிழன் அடிவாங்கிறத செண்ட்ரல் கவர்மண்ட்ல இருந்து எவனாவது கேட்டுறானா??? ஹிந்து பேசுறவனுல்லாம் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, PM குரல் கொடுக்குறார்,    இங்க அரசியல் நடத்துறவனுக எல்லாம் தே... பசங்க, ஆரம்பிக்கம்போது அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம்னு சொல்வானுக ஆனா எல்லாரும் வேஸ்ட்... தமிழன் நல்லா இருக்கனும்னா தனிநாடு வேனும், இல்ல மகராஷ்ட்ராவுல ராஜ்தாக்ரே செய்யிறது போல நாமளும் செய்யனும்... 







இப்படி ரயிலில் ஒருவர் பொதுவாக பேசிக்கொண்டுவந்தார்...


அவர் சொல்ல வந்தது எனக்கு புரிந்ததுதான், கருத்தை கேட்க கேட்க மனது ஏதோ கொதிக்க ஆரம்பித்தது, அவர் நிறுத்தவே இல்லை, அதிகமாக பேசினார், நியாமாத்தான் இருந்தது... ஆனாலும் மனது கேட்கவேவில்லை, ஏனோ கருத்தை ஒப்பு கொள்ள மறுக்கிறது மனது...


நானே என்னுள் இரண்டாக மாறி சண்டையிட்டு கொள்கிறேன்...
ஆமா, அவர் சொல்வது சரிதான். தமிழன் ஏமாளிதான், எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கதான் செய்வான், கேட்பதற்கு நாதி இல்லாமல் போயிடுச்சுதான்... போற இடத்துல அடிவாங்குறாண்டா, சொந்த இடத்திலும் அப்படிதான்.இதுக்குலாம் ஒரு விடிவு வரனும்னா மத்தவன் நம்ம இடத்துல நுழைய விடாம தடுக்கனும், அப்பதான் முடியும்... ஒவ்வொரு மொழிக்காரனும் தமிழ்நாட்டை ஆக்கிறமச்சுகிட்டோ போறான், இப்படியே போச்சுன்னா தமிழ்நாட்டிலயும் தமிழனை அகதி ஆக்கிடுவாங்க போல, ஒரு வெறி ஆட்டம் ஆடினாத்தா நமக்கு உள்ள உரிமை நமக்கு கிடைக்கும்... 


இரண்டாவதாக...
இந்தியா என்பது அகண்ற நாடு யாரு வேண்டும் என்றாலும் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம், வாழலாம், சம்பாரிக்கலாம்... இப்படி இந்தியர் அனைவருக்கும் சம உரிமைகளை நாடு வழங்கி உள்ளது, இப்படி இருக்கும் போது நீ இங்கு வராதே.. நீ ஹிந்திக்காரன் இப்படி சொல்லுறது கொஞ்சம் ஓவரா படுது. ஏன் தமிழர் வேறு பகுதிகளுக்கு போயி வாழலையா? தமிழ்நாட தவிர பல இடத்துல தமிழர்கள் நல்லாதானே வசிக்கிறாங்க, யாருக்கு இப்ப என்ன ஆச்சு, சில இடத்துல சில சம்பவங்கள் நடக்கிறது என்பதற்காக நாமும் மிருமமா மாறிடலாமா??? என்ன உரிமை? அவனுக்கும் இந்தியாவுல உரிமை இருக்கதானே செய்யுது, தமிழ்நாடு ஒன்னும் தனிநாடு இல்லையே... 







இப்படியே என்னோட யோசனை போச்சு... அவ்வளவு சீக்கிறத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியுமா என்ன? இது ஒருவருடைய சிந்தனையா இல்லாமல் பலபேருடைய கருத்தாதான்  எண்ணவேண்டியதுள்ளது, அதிகமானோர் மனதில் பூட்டி வைத்துள்ளனர், இப்படி சிலபேர்தான் வெளிட்டு விடுகின்றனர்,,, இந்திவுக்குள்ளே நடக்கும் இந்த இனவெறியை எப்படி தடுப்பது??? ஒன்று பட்ட இந்தியாவை இந்த வெறி பாதிக்குமே... இப்போதுதானே இந்தியாவே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆகின்றது, இவர்கள் சிந்தனை இப்படி இருந்தது என்றால்... யாருடைய குற்றம், அவர் சொன்னதில் ஒன்று கூட தவறு இல்லை, ஆனால் தமிழரும் பல்வேரு இடங்களில் சென்று வசிக்கின்றனர் அவர்களை பற்றி இவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்... இப்பேர்பட்ட தீ அதிகமாகமல் தடுக்கவேண்டும், இந்தியர் அனைவரும் சகோதர்கள் என்ற சிந்தனைக்கு இவர்களை கொண்டு வரவேண்டும்... 

Dec 30, 2009

வெளிவந்துகொண்டிருப்பது பூனைக்குட்டியா ஓநாயா?

இப்போதுதான் அதிக அதிக பூனைக்குட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது... மிகவும் பக்கத்தில் பார்க்காமல் விட்டதினால் தெரியவருகிறது அது பூனைக்குட்டி இல்லை, ஓநாய் என்று. இவ்வளவு நாள் அடிமனதில் தேக்கிவைத்திருந்தவை இப்போதுதான் வெளிவருகின்றன. அது கூட அதிகம் பழகிவருக்கே அது தெரியவில்லை பூனைக்குட்டியா அல்லது வேறு எதுவுமா என்று... ஓநாய் எதற்கு வரும், இரத்தம் தேடிதான் ஓநாய் வரும். இரத்த்தை பார்க்காமலும் இறந்த மனித உடலை பார்க்காமலும் கண்டிப்பாக ஓநாய் செல்லாது.




விதைப்பது விஷம் என்றே தெரியாமல் சிலபேர்,
நட்பை அசிங்கபடுத்தியிம்,
உறவை கொச்சைபடுத்தியும்..
இதுதானா அவர்கள் விருப்பம்?
அசிங்கத்தை பார்த்து விட்டால்
சிங்கத்தை எதிபார்க்கும் கூட்டம்...
இதுதான் இறுதி,
இதுதான் முடிவு என்றும் சிலபேர்...
அய்யோ பாவம்...
கொடுப்பதுதான் கிடைக்கும் அறியாதவர்களா அவர்கள்?
பரவட்ட்டும் தீ...!


இதற்கு மேலும் இதை பற்றி எழுத விரும்பவில்லை, புரியவேண்டியவர்களுக்கு புரிந்தாலும் சரி தொலைந்தாலும் சரி, நான் ஒரு பிரபல எழுத்தாளன் இல்லை பிரபல எழுத்தாளர்கள் படிப்பதற்கு, ஒரு சராசரியின் உள்ள கூக்குரல்தான் இது.

தீ பரவ வேண்டுமா அல்லது அனைக்க வேண்டுமா.

Dec 8, 2009

பிரிதல் நலமா?

பிரிவினை...

ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளும் பிரிவினை...

தூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம்! எதற்காக போராட்டம்? தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகமானோர் தெலுங்கான பகுதியை சேரதவர்களாம், எங்கள் ஏரியாவை சேராதர்கள் எப்படி எங்கள் இடத்தில் இருக்கவேண்டும், வேலை செய்யவேண்டும் என்று ஒளிவுமறைவான திட்டத்துடன்தான் தனிமாநிலம் கேட்டு போராடுகிறார்கள்.




மாநிலம் பிரிவதற்காக போராட்டம் நடத்தும் சந்திரசேகர ராவை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்கள் தெலுங்குதேசப் பகுதியை சேராதவர்களும் இருப்பார்கள். இவற்றை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? 30 மருத்துவர் குழு அவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது. 30 மருத்துவர்களும் தெலுங்கு தேச பகுதியை சேர்ந்தவர்கள்தானா?

இதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தேசிய(?) கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. தேசியம் பேசினாலே நாங்கள்தான் என்று மார்தட்டும் பிஜேபி எப்படி இதற்கு ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை.

சொந்த மொழி ஆட்கள் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரசேகர ராவ் கட்சியினர் மாநிலம் பிரிக்கபட்டால் அங்கு பல காலமாக வசிக்கும் தமிழர்கள் மற்றும் மற்றவர்கள் மீதும் வெறுப்பை கக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தெடர்ந்து பல நாட்களாக பந்த்... ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே பாதுக்கபட்டது, இவ்வளவு சிக்கலாக ஆக்கிகொண்டது மாநில அரசாங்கம்தான், அவர் ஆரம்பித்தவுடனே தடுத்திருக்கவேண்டும்.




ஏற்கனவே நமது நாட்டில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டதில் பிரிந்து போய் கிடக்கிறோம். இந்தியாவின் ஒரு சரிசரியான வளர்ச்சி எட்டாதற்கு மொழியால் பிரிந்து கிடப்பது ஒரு காரணம் ஆகும், யார் மறுத்தாலும் இது ஒரு கசப்பான  உண்மையே. இந்தியர்கள் என்று பெருமை பேசும் நாம், இந்தியர் என்பதால் ஒன்றுபடுகிறோம் எனும் நாம், மொழி என்று வரும்போது மட்டும் அனைத்து விசயங்களிலும் கோட்டைவிட்டு விடுகிறோம்,  எனது மொழி பெரிதா உனது பெரிதா எனும் சண்டையிலே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து கொண்டுயிருக்கிறோம்.

மொழியால் நமது நாடு பிரிந்து கிடப்பதினலே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, மொழிக்குள்ளும் பிரிவு ஏற்பட்டால்?

இப்படியே போனால் வீதிக்கு என்றும் ஜாதிக்கு என்றும் மாநில கோரிக்கை எழலாம்.




இந்தியா வல்லரசு ஆக அனைவரும் சேர்ந்து இருந்தலே நலம்.