Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Jan 12, 2011

சில நிஜங்கள்...

இந்திய நாட்டின் சில நிஜங்கள், இது சில நேரங்களில் உலக அளவில் கூட பொருந்தும் இல்லையா?

மாங்கு மாங்குன்னு இரவும் பகலும் கண்ணு முழுச்சு படிச்சு முதல் வகுப்புல தேறி டாக்டராவோ பொறியாளரோவோ ஆகுறாங்க.






மாங்கு மாங்கு படிக்காட்டாலும் ஓரளவுக்கு படிச்சு இரண்டாம் வகுப்புல தேறி MBA வா ஆகி, முதல்ல வந்த டாக்டரையும் இஞ்னியரையிம் கண்ட்ரோல் செய்றாங்க..






கடமைக்குன்னு படிச்சு மூன்றாம் வகுப்புல தேறி, அரசியல்ல நுழைச்சு முதல்ல வந்தவர்களையும் இரண்டாம் வந்தவர்களையும் ஆட்டி படைக்கிறாங்க...








இதுதான் லீஸ்ட், சுத்தமா படிப்பும் ஏறாமே, எல்லாத்துலையும் பெயில் ஆகியும் தாதாவ ஆகி படுச்சவர்களை பூரா ஆட்டிவைக்கிறாங்க.

என்னத்த படிச்சு என்ன செய்றது??? வேன்னா பெஸ்ட் நாத்திகவாதின்னு சொல்லிக்கலாம் :)

Dec 6, 2010

தற்கொலை செய்வதற்கான ஐடியா

இது எனக்கு மெயில் மூலம் வந்தது, நன்றாய் இருப்பதினால் இங்கு வெளியிடலாம் என்றுதான். யாரும் முயற்சிக்க மாட்டீர்கள் இருந்தாலும்... யாராவது ஏதாவது செஞ்சுகிட்டா அதுக்கு நான் காரணம் இல்லை :)












May 6, 2010

ஜக்குபாய்ஸ்

ஜக்கு தூக்குறவங்கலை என்ன சொல்லுவோம்??? ஜக்குபாய்ஸ்தானே... இங்க கூட செம்பு தூக்குறவங்க இருக்காங்க, பாருங்க, நல்லா வித்தியாசமா செஞ்சுருக்காங்க, கண்டிப்பா ரசிப்பீங்க :)



Mar 29, 2010

இவர்கள் விளையாட ஆரம்பித்தால்

தோல்வி மேல் தோல்விகளை அடைந்து கொண்டிருக்கும் சென்னை வேஸ்ட் கிங்கை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று திரையுலகை சேர்ந்தவர்கள் குதிக்கிறார்கள்...

இது சிரிப்பதற்காக மட்டுமே... ஜஸ்ட் என்ஜாய் பன்னுங்க, ரியலா நடக்கனும்னு எதிர்பார்க்க கூடாது, ஆமா!

நமது கேப்டன் (இது வேற, வேற கேப்டன்) தலைமையில ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள்...

  1. விஜயகாந்த்
  2. ரஜினி
  3. கமல்
  4. டாக்டர் விஜய்
  5. அஜித்



இவர்களுடன் டோனி அண்டு கோவும் கலந்து கொள்கிறது.



சினிமா ஆட்கள் கலந்து கொள்ளும் நியூஸ் தெரிந்தவுடன், பொன்னகரம் தேர்தல் ரிசல்ட்டை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சினிமாக்காவே மட்டும் உள்ள கலைஞர் கருணாநிதியும் நான் இதை பார்த்தே தீர்வேன் என்று ஒத்த சேர்ல நின்னு(?) வந்துடுறாரு.

துரதிர்ஷ்டவசமாக இவர்கள் மோதும் முதல் ஆட்டமே ராஜஸ்தான் ராயலோடு அமைந்து விடுகிறது... டாஸில் வென்ற ராஜஸ்தான் ராயலே பவுலிங் செய்கிறது... சென்னை வேஸ்ட் கிங் அணியிக்காக டோனியும் விஜயகாந்தும் ஓபனிங்கா போறாங்க சினிமா ஆட்கள் விளையாடுகிறார்கள் என்பதை அறிந்த பாரதிராஜா அண்ட் குருப்ஸ், அவர்களையும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்கிற கடுப்பில் எப்படியாவது இதை தடுக்க வேண்டும் என்கிற நோக்கில் ஆவேசமாக வருகிறார்

பிரஸ் : எதுக்கு சார் எதிர்க்கிறீங்க?
பாரதிராஜா: அஜித் ஒரு மலையாளி அது எப்படி நாங்க தமிழ்நாட்டுல விளையாட விடுவோம்...
பிரஸ்: சார் விளையாடுற மத்தவங்க வேற நாட்டை சேர்ந்தவங்களும் இருக்காங்க அதுக்கு நீங்க ஒன்னும் சொல்லை...
கூட இருந்த சீமான்: அது அப்படிதான் நாங்க அப்ப்டிதான் சொல்வோம்.. நீ எப்படி இலங்கையை சேர்ந்தவன சேர்த்தே???
பிரஸ்: ஏன் சார் இதை பெரிய நாட்டு பிரச்சனை ஆக்கிரூங்க???
பாரதிராஜா: ஆஅஅ... என்கிட்டையே கேள்வி கேக்கிருயா... (ஓவரா டென்சன் ஆயிட்டார்)

விஜயகாந்து ஓடி வந்து சமாதானப்படுத்துகிறார், சமாதானமாகி பாரதிராஜா அண்ட் குருப் கிரிக்கெட் பாக்க உக்காந்திடுறாங்க.

சும்மாவே, மக்கள் கூட்டத்திற்க்கு குறை இருக்காது, சினிமாவை சேர்ந்தவர்கள் விளையாடுகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்,  அவ்வள்வு கூட்டம்... எக்கச்சக்க கூட்டம்...

விஜயகாந்திற்கு அதிக கூட்டத்தை பாத்தவுடன் குஷி ஆயிட்டார், விளையாட வந்ததை மறந்து, கத்தி பேச ஆரம்புச்சுட்டார்

விஜயகாந்த்: ஆங்! ஐபில் மொத்தம் 8 அணி இருக்கு, ஆனா மாறி மாறி ஒவ்வொரு அணிகிட்டயும் தோத்துக்கிட்டு இருக்குறது சென்னை வேஸ்ட் கிங், இதுக்குகெல்லாம் காரணம் கருணாநிதிதான், இந்த திமுக போச்சுன்னா எல்லா சரியாயிடும், இப்படிசொல்லிகிட்டு இருக்கும் போதே, பவுலர் பவுலிங் செஞ்சு கரக்ட்டா ஸ்டம்ல பட்டு அவுட் ஆயுடுறாரு... உடனே டென்சன் ஆன விஜயகாந்த், இதுக்கும் காரணம் கருணாநிதிதான் நான் சும்மா விடவே மாட்டேன் கத்திட்டு போயிட்டார்.

அடுத்தது கமல்: நேர அம்பயர்ட்ட போறாரு... ம்ம்ம்ம்... நான் ஒரு காமன் மேன், நீங்க என்னை பேர் சொல்லி கூப்பிடலாம்னு நினைக்கலாம், பட் நான் ஒரு காமன் பேனா சீ மேனா இருக்கேன், நான் இங்க வந்த வேஸ்ட்டுன்னு நினைக்கல... வேஸ்ட் கிங்க மாத்த வந்தது என்னை வேஸ்ட்டுன்னு நினைக்க கூடாது, நான் விளையாட விரும்பலை எல்லாரும் ஆசைப்பட்டாங்கன்னுதான் வந்தேன், நான் போறேன் ஆஅஅஅஅஅஅஅ அபிராமி அபிராமன்னு அழுதுக்கிட்டு உள்ளே ஓடிட்டார்.

அடுத்து வருகிறார்... டாக்டர் விஜய், எதுவும் பேசாம உம்முன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு பேட்டை புடிக்கிறார்... பால் போட்டவுடன் நல்லா ஓங்கி அடுச்சுடுறார் ஆச்சிரியமா சிக்ஸ் போயிடுச்சு... 6 ரன் மட்டும் கிடச்சவுடன் உடனே டாக்டர் விஜய் அம்பயர்கிட்ட போயி முதல்ல பவுண்ட்ரி லைனை தாண்டி போச்சு அதனால 4 ரன்னும், பறந்துபோயி விழுந்தது அதனாலே 6 ரன்னும் இப்படி மொத்தம் மொத்தம் மொத்தம்10 கொடுக்கனும் சொல்லுறாரு.. அம்பியர் டென்சன் ஆகி விஜயை சமாதனப்படுத்த ஆரம்பிக்கிறார்... உடனே விஜய் சமாதானமா போறதுக்கு நான் ஒன்னும் புறா இல்லைடா, சுறாடான்னு கிளம்பி போயிடுறார்.

அடுத்து அஜித் வருகிறார், வரும்போதே பிரஸ்காரங்க கேள்வி கேக்க ஆரம்பிக்க, மைக்கை பாத்தவுடன் அஜித்துக்கு உடம்புலாம் அப்படியே நடுங்க ஆரம்புச்சுடுது, அப்படியே கை கால் நடுங்க.. யாருமே என்னை மிரட்டல நானாத்தான் இந்த விளையாட்டுல கலந்துக்கிறேன்....யாருமே என்னை மிரட்டல மிரட்டலஅப்படீன்ன்னு புலம்ப ஆரம்புச்சுட்டார்... இவர் வேலைக்கு ஆகமாட்டாருன்னு உடனே உள்ளே வர சொன்னவுடனே... இல்லை நான் போறேன் போறேன்னு ஸ்டேடியம் விட்டே போயிடுறாரு.

நெக்ஸ்ட் வருகிறார் சூப்பர் ஸ்டார்... ஹஹான்னு சிரிச்சுக்கிட்டே உள்ளே வருகிறார், பேட்டை கொடுத்தவுடன் டக்குன்னு பேட்டை கீழே போட்டுறாரு, மறுபடியும் எடுத்து கொடுக்க அப்பவும் பேட்டை கீழே போட்டுறாரு... என்னடான்னு யோசுச்சு பாத்தா பேட் வெயிட்டை சூப்பர் ஸ்டாரால தூக்க முடியலை... :( பேட்டையே தூக்க முடியாத இவரு எப்படி விளையாடுவாருன்னு அம்பயர் ரஜினியை விளையாட அனுமதிக்கலை... உடனே... கண்ணா, பேட்டு புடுச்சவன் எல்லாம் அடிக்க மாட்டான், அடிக்கிறவன் எல்லாம் பேட்டு புடிக்கமாட்டான்னு ஒரு லூசுதனமா தத்துவம் சொல்லிவிட்டு, மனசுக்குள் சொல்லிகொள்கிறார் இமயமலைல இருந்தவன கூட்டி வந்து கொல்றாங்களே ஆண்டவா! என்று பெருமூச்சு விடுகிறார்.

எங்களையும் சேர்த்து கொள்ளுங்கள், நாங்களும் மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம் என்று குரல் வர திரும்பிபார்த்தால், ரஞ்சிதானந்தா தனது சேவை நாயகிவுடன் உள்ளே வருகிறார்... ஸ்டேடியத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆசி வழங்கி கொண்டு, கையை உயர்த்தி வருகிறார்... ரஞ்சிதானந்தா வருவதை பார்த்த அனைவரும் அப்படியே ஸ்டண்ட் ஆகிவிட்டார்கள்... அவரை பார்த்த மக்களும் ஸ்டார்களும் கொஞ்சம் கொஞ்சமா சூடாகிறார்கள்... அவர் அங்கு இருந்தால் ஏதாவது தப்பாக (?) நடந்து விடும் என்பதை அறிந்த டோனி, ரஞ்சிதானந்த பக்கத்தில் சென்று... "சாமி பாக்கி இருக்குற சிடிலாம் எப்ப வெளிவரும்" அப்ப்டின்னு கேக்குறாரு....  இவர் இப்பவாவது ஏதாவது செய்வாருன்னு  எப்பவும் போல மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்...

Dec 30, 2009

கொஞ்சம் சிரீங்க...

எல்லாரும் சண்டை போட்டு சண்டை போட்டு கோவமா இருக்கீங்க... அதுனால, சிரிக்கிறதுக்காக படங்க... கண்டிப்பா சிரிப்பீங்க, இது கொஞ்சம் பழசுதான் இருந்தாலும் ரசிக்கலாம்.

சண்டைபோட்டு வாழாதீங்க, சிரித்து வாழுங்க. :)




















































Dec 29, 2009

வேட்டைக்காரனும் ஜூஜூவும்

வோடாபோன் விளம்பரத்தில் வரும் ஜூஜூ ஒரு விசயத்தை பார்த்து பயந்து ஓடுது, என்னவா இருக்கும், வேட்டைக்காரன்தான் அது... ஹிஹி... மக்களின் கிரியட்டியவிட்ட்டியே கிரியட்டியவிட்ட்டியே அருமையா யோசுச்சுருங்காங்க.. நீங்களும் பார்த்து சிரீங்க...

ஏன்தான் வேட்டைக்காரனும் இந்த அளவுக்கு வெறுப்போ?

சரி நம்ம நோக்கம் சிரிக்கிறதுதானே... என்ஜாய் :)

இது அனிமினேட்டட் GIF படம், ஆதலால் படம் லோடு ஆக கொஞ்சம் நேரம் ஆகலாம். வெயிட் பிளீஸ்...

டவுன்லோடு செய்தும் பாருங்கள்






Dec 28, 2009

காமெடி உரையாடல்

ஆங்கிலம் தெரியாமலே பேச முடியுமா? பேச முடியும்... முடியாது... எப்படி வேன்னா எடுத்துக்கலாம், இந்த உரையாடல் இமெயில் மூலம் கிடைத்தது,  இதை கேட்டு கேட்டு சிரித்தது வயிறு வலித்தது, அவ்வளவு காமெடி, சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட்டுட்டேன்...

நீங்களும் கண்டிப்பா சிரிப்பீங்க... எவ்வளவு பெட்?





Note: Please view Internet Explorer browser

Dec 22, 2009

வேட்டைக்காரன் அமெரிக்காவில் ரிலீஸ்

இந்த படம் இமெயில் மூலம் வந்தது, பார்த்தவுடன் சிர்ப்பு சிரிப்பா இருந்துச்சு... நான் விஜய் படத்தை எதிர்ப்பவன் கிடையாது, விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும், இன்னும் வேட்டைக்காரன் பாக்கவில்லை... பார்த்துட்டும் விமர்ச்சனம் எழுதுகிற ஐடியாவுலாம் இல்லவே இல்லை :D


Nov 2, 2009

பொண்ணும் சர்தார்ஜியிம்

சர்தார்ஜி ஜோக்ஸ் எப்ப படிச்சாலும் சலிக்கிறதே இல்லை...

நான் இல்ல இல்ல நம்ம விரும்பி அதிகமா படிக்கிறது சர்தார்ஜி ஜோக்ஸ்தான். சர்தார்ஜிவுடைய இன்னோசன்ட் நமக்கு ஜாலியா இருக்கு, பொதுவா நாம அறிவாளி வேசம் போட்ட முட்டாளுங்க இல்லையா? அய்யயோ ஜோக்ஸ் சொல்ல வந்துட்டு அட்வைஸ் பன்ன ஆரம்பிச்சுட்டேனே :D சரி சரி ஓவரா அறுக்கலை. இனி ஜோக்ஸ்க்கு போகலாம்.

ஒரு சர்தார்ஜிக்கு கார்வாங்கனும்னு மனைவிக்கு பரிசு கொடுக்கனும்னு ஆசையோ ஆசை.  அவரு பொண்டாட்டி கோடிஸ்வரி, அவளையிம் கூட கூட்டிக்கிட்டு போயி அவ இஷ்டபடி கார் வாங்கனும்னு போராங்க.
ஷோரூம்ல பல கார பாத்தவுடனே சர்தார்ஜி பொண்டாடிக்கு காருடைய பிராண்ட் பேரு மறந்து போச்சு.
அவ சேல்ஸ் மேன கூப்பிட்டு சொல்லுறா "அது டொயட்டா மாதிரி இருக்கும் ஆக்ச்சுவலா "டீ"ல அது ஆரம்பிக்கும்.
உடனே சர்தார்ஜி " வாவ், என்ன ஒரு ஆச்சரியம்? இங்கயிலாம் காரு பெட்ரோல்லதான் ஸ்டார்ட் ஆகும்"


சர்தார்ஜி வேலைக்கு இன்டர்வியூக்கு போறாரு
அங்க இன்டர்வியூ எடுக்குறவரு கேள்வி கேட்குறார்.
இ: நீங்க எங்க பிறந்தீங்க?
ச: பஞ்சாப்ல
இ: எந்த பார்ட்?
ச்: என்ன எந்த பார்ட்? (கோவமாயிட்டாரு) பாடி ஃபுல்லா பஞ்சாப்லதான் பொறந்துச்சு.

ஒரு சர்தார்ஜி புது சைக்களை தள்ளிக்கிட்டு வாறத நம்ம சர்தார்ஜி பாக்குறாரு.
என்ன புது சைக்களா? எப்படி கிடைச்சுச்சு?
உடனே அவரு, நான் காலைல வாக்கிங் போகும் போது ஒரு பொண்ணு சைக்களை ஓட்டி வந்துச்சு, என்ன பார்த்த உடனே பக்கதுல வந்து டிரஸ் எல்லாம் அவுத்துபோட்டுடு எது வேனுமோ எடுத்துக்கோன்னு சொல்லுச்சு, அதான் நான் சைக்களை எடுத்துகிட்டு வந்துட்டேன். 
 உடனே நம்ம ஆளு கோவமாயிட்டாரு, என்ன ஆளுப்பா நீ சே, ட்ரஸையிம் சேர்த்து எடுத்துருக்க வேனாம்.

சர்தார்ஜி வேகவேகமா ஆட்டோவுடைய முன் சக்கரத்தை கழட்டுறாரு, இத பார்த்த வேற ஒரு ஆளு கேக்குறாரு ஏம்பா என்ன ஆச்சு எதுக்கு கழட்டுற? அதுக்கு சர்தார்ஜி "ஹேய், அந்த போர்ட பாக்கலையா நீ?  பார்க்கிங் 2 வீலர் ஒன்லி"

அமெரிக்கா போயிட்டாரு சர்தார்ஜி...
ஒரு அமெரிக்கன் பிரண்டா கிடைசான்... அவன் அவங்க நாட்ட பத்தி சொல்ல சொல்ல நம்ம ஆளு வாய பொலந்து கேட்டுகிட்டு இருக்காரு. எங்க நாட்டுலையிலாம் கல்யாணம் இமெயில்லதான் நடக்ககும். உடனே நம்ம ஆளு, என்ன கொடுமை இது? எங்க நாட்டுல பிமெயிலோடத்தான் நடக்கும்னாரு.








Oct 25, 2009

தம்பதியின் அந்தரங்க உரையாடல்

கணவன் மனைவியின் ஒரு ஜாலி உரையாடல்.

நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க




மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?
கணவன்சே சே மாட்டேன்
மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா?
கணவன்: ம்ம்ம்... விரும்புவேன்
மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது?
கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன்.
மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை)
கணவன்: (க்கும்...., அமைதியா இருக்கார்)
மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா?
கணவன்: கண்டிப்பா, இது  ரெம்ப நல்ல வீடு இல்லயா...!
மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா?
கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது?


மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா?
கணவன்: அது செஞ்சுதானே ஆகனும்
மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா?
கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா.
மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா?

கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே...
மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா?
கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும்.
மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...
கணவன்: ஷிட்
மனைவி:
கணவன்: