எம் எஸ் விஸ்வனாதன், இளையராஜா வரிசையில் அடுத்து வர மிக தகுதியானவர் தேவி ஸ்ரீ பிரசாத்தானாம், வருங்காலத்தை மிகச்சரியாக கணிக்கும் கமல்ஹாசன் சொல்லியிருக்கின்றார். கமலுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏ ஆர் ரஹ்மானை மட்டம் தட்டி கொண்டே இருக்க வேண்டும்.
கமலுக்கு அவரை தவிர மற்றவர்கள் பிரபலம் அடைவது பிடிக்கவே செய்யாது, அதுவும் உலக அளவில் பிரபலம் என்றால் வயிறு எரிவது இயற்கைதானே... பல காலமாக பெயரில் ஆஸ்கார் நாயகன், உலக நாயகன் என்றெல்லாம் விளிக்கபட்ட இந்த சாதா நாயகன் பல வருடங்களாவே ஆஸ்காரை வாங்கி வருகிறேன், வாங்கி வருகிறேன் என்று ஏமாற்றி ஒருவர் ஆஸ்காரை வாங்கியவுடன் அவரை விமர்ச்சிப்பது என்ன பண்போ?
இந்தியன் படத்தில் இயக்குனர் ஷ்ங்கரின் வற்புற்தலினால், தென்னாலி படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் வற்புற்தல் காரணமாகவே ஏ ஆர் ரஹ்மான் கமல் படத்திற்கு இசை அமைத்தார், அல்லது கமல் ஏ ஆர் ரஹ்மானை இசை அமைப்பதற்கு இயக்குனர்கள் காரணமாக ஒப்பு கொண்டார்.
கமலும் எப்படியாவது ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக எந்த இசை தொகுப்பாளர்களாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று வெறி, அதனால்தான் தசவாதரம் படத்தில் ஹிமேஸ் ரேஸ்மியாவை கொண்டு வந்தார், அவர் என்னடான்னா நான் ரஹ்மானின் ரசிகன், எனக்கு ரஹ்மான் இசையில் பாடனும்னு ஆசைன்னு கமல் மூஞ்சில் கரியை பூசிட்டு போய்ட்டார்... கமலும் விடல விக்ரமாதித்தன் போல் தொடர்ந்து கொண்டிதான் இருக்கிறார்....
உலக நாயகன், உலக நாயகன் என்று கூறுகிறார்களே... அப்படி என்னதான் உலக அளவில் விரும்ப படும் படங்களை எடுத்துவிட்டார்? அவரின் பிரபலமான அவ்வை சண்முகி முதல் மன்மதன் அம்பு வரை ஆங்கில படங்களின் காப்பி, சொந்தமாக ஒரு கதையை யோசிக்க தெரியாத இந்த உலக நாயகன் ஏன் தான் இப்படி?
சமிப குமுதத்தில் இதை பற்றி சில இசையமைப்பாளர்களிடம் கேட்டு கருத்து வெளியிட்டு உள்ளது, அதில் சில பேர் கூறி உள்ளது
சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் என்றால் அது சிம்புதான்
இப்படி கூறினால் எப்படி ஏற்கொள்ள முடியாதோ, இப்படி கூறினால் எப்படி கூறியவர்கள் அசிங்கபடுவார்களோ, இதனால் எப்படி கமலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லையோ, அதேபோலத்தான் கமல் கூறியதை எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வுகளை படிக்கும் போது, தவளை கதைதான் ஞாபகம் வருது... உங்களுக்கும் வருதா??? தமிழ்ழண்ண்டா....
வர வர தமிழன் இங்க வேலையே செய்ய முடியாது போல இருக்குது, இப்பவே ஹிந்திக்காரன் சென்னையில எல்லா இடத்திலையும் வந்துட்டான், சென்னையில தமிழ்நாடு வகை சாப்பாடு போயி ஹிந்தி டைப்பு சாப்பாடு வந்துடுச்சு, தமிழ்படங்கள் அதிகமா வெளிட்டது போக நிறையவே ஹிந்திபடங்களா வர ஆரம்புச்சுடுச்சு... இங்க பிழைக்க வந்தவன் எல்லாம் இங்க உரிமை கொண்டாட ஆரம்புச்சுட்டான். இப்பவே பல பகுதிகளுக்கு தமிழன் வீடோ நிலமோ வாங்க முடியாத நிலமை, சென்னையில சில இடங்கள் இருக்கு மார்வாடியை தவிர யாரும் அங்கு குடி போக முடியாது, தமிழ்நாட்டுடைய மொழியா ஹிந்தியை ஆக்கிடுவாங்க போல இருக்கு... இப்ப வரைக்கும் லங்காவுல தமிழனை அடிக்கிறானுக, மலேசியாவுல அடிக்கிறானுக, அப்ப அப்ப மகராஷ்ட்ராவுலயும் கர்நாடகத்திலயும் அடிப்பானுக. நாம எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கனும் அது போதாதுன்னு இங்க வேற வந்து அடிக்கிறானுக... நாமதான் எல்லாதையும் பொருத்துகிட்டு போகிட்டு இருக்கிறோம்... இந்தியாவவது மயிராவது??? எல்லாம் வேஸ்ட்... இப்படி தமிழன் அடிவாங்கிறத செண்ட்ரல் கவர்மண்ட்ல இருந்து எவனாவது கேட்டுறானா??? ஹிந்து பேசுறவனுல்லாம் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, PM குரல் கொடுக்குறார், இங்க அரசியல் நடத்துறவனுக எல்லாம் தே... பசங்க, ஆரம்பிக்கம்போது அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம்னு சொல்வானுக ஆனா எல்லாரும் வேஸ்ட்... தமிழன் நல்லா இருக்கனும்னா தனிநாடு வேனும், இல்ல மகராஷ்ட்ராவுல ராஜ்தாக்ரே செய்யிறது போல நாமளும் செய்யனும்...
இப்படி ரயிலில் ஒருவர் பொதுவாக பேசிக்கொண்டுவந்தார்...
அவர் சொல்ல வந்தது எனக்கு புரிந்ததுதான், கருத்தை கேட்க கேட்க மனது ஏதோ கொதிக்க ஆரம்பித்தது, அவர் நிறுத்தவே இல்லை, அதிகமாக பேசினார், நியாமாத்தான் இருந்தது... ஆனாலும் மனது கேட்கவேவில்லை, ஏனோ கருத்தை ஒப்பு கொள்ள மறுக்கிறது மனது...
நானே என்னுள் இரண்டாக மாறி சண்டையிட்டு கொள்கிறேன்...
ஆமா, அவர் சொல்வது சரிதான். தமிழன் ஏமாளிதான், எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கதான் செய்வான், கேட்பதற்கு நாதி இல்லாமல் போயிடுச்சுதான்... போற இடத்துல அடிவாங்குறாண்டா, சொந்த இடத்திலும் அப்படிதான்.இதுக்குலாம் ஒரு விடிவு வரனும்னா மத்தவன் நம்ம இடத்துல நுழைய விடாம தடுக்கனும், அப்பதான் முடியும்... ஒவ்வொரு மொழிக்காரனும் தமிழ்நாட்டை ஆக்கிறமச்சுகிட்டோ போறான், இப்படியே போச்சுன்னா தமிழ்நாட்டிலயும் தமிழனை அகதி ஆக்கிடுவாங்க போல, ஒரு வெறி ஆட்டம் ஆடினாத்தா நமக்கு உள்ள உரிமை நமக்கு கிடைக்கும்...
இரண்டாவதாக...
இந்தியா என்பது அகண்ற நாடு யாரு வேண்டும் என்றாலும் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம், வாழலாம், சம்பாரிக்கலாம்... இப்படி இந்தியர் அனைவருக்கும் சம உரிமைகளை நாடு வழங்கி உள்ளது, இப்படி இருக்கும் போது நீ இங்கு வராதே.. நீ ஹிந்திக்காரன் இப்படி சொல்லுறது கொஞ்சம் ஓவரா படுது. ஏன் தமிழர் வேறு பகுதிகளுக்கு போயி வாழலையா? தமிழ்நாட தவிர பல இடத்துல தமிழர்கள் நல்லாதானே வசிக்கிறாங்க, யாருக்கு இப்ப என்ன ஆச்சு, சில இடத்துல சில சம்பவங்கள் நடக்கிறது என்பதற்காக நாமும் மிருமமா மாறிடலாமா??? என்ன உரிமை? அவனுக்கும் இந்தியாவுல உரிமை இருக்கதானே செய்யுது, தமிழ்நாடு ஒன்னும் தனிநாடு இல்லையே...
இப்படியே என்னோட யோசனை போச்சு... அவ்வளவு சீக்கிறத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியுமா என்ன? இது ஒருவருடைய சிந்தனையா இல்லாமல் பலபேருடைய கருத்தாதான் எண்ணவேண்டியதுள்ளது, அதிகமானோர் மனதில் பூட்டி வைத்துள்ளனர், இப்படி சிலபேர்தான் வெளிட்டு விடுகின்றனர்,,, இந்திவுக்குள்ளே நடக்கும் இந்த இனவெறியை எப்படி தடுப்பது??? ஒன்று பட்ட இந்தியாவை இந்த வெறி பாதிக்குமே... இப்போதுதானே இந்தியாவே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆகின்றது, இவர்கள் சிந்தனை இப்படி இருந்தது என்றால்... யாருடைய குற்றம், அவர் சொன்னதில் ஒன்று கூட தவறு இல்லை, ஆனால் தமிழரும் பல்வேரு இடங்களில் சென்று வசிக்கின்றனர் அவர்களை பற்றி இவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்... இப்பேர்பட்ட தீ அதிகமாகமல் தடுக்கவேண்டும், இந்தியர் அனைவரும் சகோதர்கள் என்ற சிந்தனைக்கு இவர்களை கொண்டு வரவேண்டும்...
பிடித்தவர் பிடிக்காதவர்...
யாருக்கு யாரை பிடிக்கும்... எப்ப பிடிக்கும்? ஏன் பிடிக்கும்?
யாருதான் இதை ஆரம்பித்தார்களோ.. உஸ்ஸ்ஸ்ஸ்... எந்த திரட்டிய பாத்தாலும் இதுதான் இருக்கு... இதில் இருந்து தெரியுது யாருக்கும் எழுதுறதுக்கு எதுவும் இல்லைனு... தப்பா நினைச்சுக்காதீங்க... எவ்வளவோ இருக்க எழுத... ஒருத்தரை பிடிக்காததை பற்றிதானா எழுதனும்?
எனக்கு பிடித்த எழுத்தாளர்களிடம் கூட இந்த பதிவு இருந்ததை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.
நல்ல வேளை வினவு இப்படி பதிவு போடலை. :)
பிரபலமானவர்களை பிடிக்கலை என்று சொல்லி பிரபலமாகலாம் என்பது என்ன விதமான செயல்பாடு என்பது தெரியவில்லை.
பிடித்தவர்களை மட்டும் சொல்வது போல் அமைந்திருந்தால்... அது ஒகே.
ஏ ஆர் ரஹ்மானை பிடிக்காததற்கு அவர் விளம்பரபடத்தில் நடிப்பதை சொல்லிருந்தார்கள். AIDS நோயாளிகளுக்காகவும் லாபநோக்கமற்ற செய்திகளுக்காவும் அவர் விளம்பரபடத்தில் நடிக்கிறாரே... இளையராஜாவையும் விரும்புங்கள் அதே நேரத்தில் ஏ ஆர் ரஹ்மானை முதல் ஹாரிஸ் ஜெயராஜ் வரை வெறுக்காமல்.
நீங்க பிடிக்கலைன்னு ஒருத்தரை சொன்னா அது அவர் மேல் தெரிந்தே தெரியாமலோ கொஞ்சம் வெறுப்பு விதைப்பதற்கு சமம்.
பொதுவா, ஒருத்தருக்கு ஒருவர் பிடித்தவர் பிடிக்காதவர் என்று எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கின்றனர்? இன்று பிடிக்கும் ஒருவர் நாளைக்கே பிடிக்காமலும் போகலாம், பிடிக்காதவர் பிடிக்கவும் செய்யலாம்.... காலத்தில் அனைத்தும் மாற்றத்திற்கு உரியதுதான்... பிடிக்காதவர் என்று எழுத்துமூலமாக பதிவு செய்யும் போது, அது என்றென்றும் தங்கிவிடவும் அவரின் எண்ணமாகவும் இருக்கும்.
உலகத்தில் பிடித்தவர் பிடிக்காதவர், பிடித்தவை பிடிக்கதவை என்று எதுவுமே இல்லை. நாம் சார்திருப்பவர்களாலும் நம்மை சார்திருப்பவர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனக்கு ஒருத்தரை பிடிக்க காரணமே, அவரின் சில செயல்பாடுகள் என்னை கவர்ந்ததாலும் மேலும் அவரை பற்றிய மற்றவர்களின் எண்ணங்கள் அவரின் மேல் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாலும் அவரை எனக்கு பிடிக்க காரணமாய் அமைகின்றது. இதே காரணம்தான் பிடிக்காததற்கும்...
மாற்றம் என்பது நம்மை சார்ந்து அனைத்தும் மாறிக்கொண்டிருப்பதுதான். மாறாமல் எதுவும் இல்லை, வாழ்கிற வாழ்க்கையில் அனைவரையிம் விரும்பி அனைவராலும் விரும்ப் படுகிறவர்களாக வாழ்வோம்.