Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

May 28, 2012

வாழ்த்துக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்

இப்படி நான் வாழ்த்து சொல்லவில்லை என்றால் பிலாக் எழுதுவதே வேஸ்ட்... மாறி மாறி ஏதாவது ஒரு கிரிக்கெட் வந்தாலும் ஐபில் என்றாலே ஒரு பொழுதுபோக்கை மீறிய ஒன்றாகி விட்டது, சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பேரு வச்சுக்கிட்டு சென்னையில் உள்ளவன் சப்போர்ட் செய்யலைன்னா யார் சப்போர்ட் செய்வார்கள்???

இன்னும் எனக்கு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், எவ்வளவோ அடி வாங்கு வாங்ன்னு வாங்கி சி.எஸ்.கே உள்ளே வந்தது, என்ன மாயமோ மந்திரமே தெரியலை..அது எப்படியோ தொடர்ந்து வேற டீம் தேர்த்தால் அல்லது ஜெயித்தால் மட்டுமே சி.எஸ்.கே வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில், வாய்ப்பு எப்படி வந்ததோ...எல்லாம் அந்த சினிவாசனுக்கே வெளிச்சம் :)



இதுல பாவப்பட்ட டீம்ன்னு டெல்லி மற்றும் மும்பைதான், தொடர்த்து ஜெயித்து வந்து, கடைசில தோல்வி என்பது; பெரும் கொடுமை, சென்னை எப்படி ஜஸ்ட் லைக் தட் என்று உள்ளே வந்தது... ஐபில் எலிமினேட்ர், ஃக்லிபையர், பைனல் என்ற முறையை மாற்றி எல்லா டீமும் எல்லாருடன் 3 தடவை விளையாடி, நல்ல ரேட் பெரும் அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்,

கடைசியா சென்னை மற்றும் டெல்லி மோதியது, தோற்பதுக்கே வந்ததுபோல் சேவாக் இருந்தது, பெரும் பாவமாய் இருந்தது, எல்லாமே முன்னமே தீர்மானிப்பட்டது போல் இருந்தது... அதுவும் டெல்லி அணி பீல்டிங்கை விடுவதாட்டும், கேட்ச் மிஸ் செய்வதாகட்டும்... அடடடடா அட்டடா...  வெல் பிளே வெல் பிளே... என்னமோ போங்க...

உண்மையிலே பைனல் நல்லா இருந்துச்சு, சென்னை ஜெயிச்சுருக்க வேண்டியது, அதான் ஏற்கனவே ரெண்டுதடவை ஜெயிச்சாச்சே பிறகு என்னத்துக்கு ஜெயிக்க என்ற எண்ணத்தில்தான் கொல்கத்தாவுக்கு விட்டு கொடுத்துடுச்சு....

என்னவா இருந்தாலும் நம்ம டோணிக்கு ஒரு பெரிய விசில் அடிக்கனும்

Jun 28, 2011

தியாகராய நகர்

பல நாட்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி... நம்ம என்னத்த எழுதி அப்படீன்னு விட்டுறது; ஒரு சோம்பேறித்தனம் தான், வேறேன்ன

சமிபத்தில் சென்னை டி நகருக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்றிருந்தேன், என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு கூட்டம், எங்கிருத்துதான் இந்த மக்கள் வருகின்றனோ??? எப்பவுமே இப்படிதான் போலெ, அப்படி ஒரு கூட்டம். ரங்கனாதன் தெருவில் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டிததிருந்தது, கொஞ்சம் வேகம நடக்கவே முடியாது... எப்படியும் யாரோடவாவது மோதிகொண்டே செல்ல வேண்டும் அவ்வளவு மக்கள் கூட்டம்.

ரங்கனாதன் தெருவில் இரு பக்கமும் இருக்கும் கடைகள் பாதி சாலையை அடைத்தார்கள் என்றால், சாலையோரம் வியாபரம் செய்வபவர்கள் மீதி இடத்தையும் ஆக்கிறமிப்பு செஞ்சு மக்கள் நடக்க வழி இல்லாமல் செஞ்சுடுறாங்க...

மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து,ரங்கனாதன் தெரு வழியாக உஸ்மான் சாலை அடைய குறைந்தது 10 நிமிடம் ஆகும்.






அவ்வளவு கூட்ட்ட்டமா இருக்கு.

இவ்வளவு மக்கள் வந்து செல்கின்றனரே? ஏதாவது நல்ல உணவு விடுதி இருக்கா? சரவண பவன் இருக்கு, அங்கு போய் சாப்பிடனும்னா, குறைந்தது 30 நிமிடம் பொறுக்கனும்... வேறு நல்ல ரெஸ்டாரன்ட்?

ஹும்ம்ம்ம்... சரவணபவனில் சாப்பிட 61 அல்லது 75 ருபாய், இதே ஏசி என்றால் 150, 180 ருபாய் உஸ்ஸ்ஸ்ஸ்... ஏன்தான் இவ்வளவு விலையோ? எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்று சரவணபவனை மொய்க்கும் கூட்டம் ஒருக்கும் வரை விலை குறைய சான்ஸே இல்லை.

அதேபோல் கழிப்பிட வசதி? இவ்வளவு பேர் வந்து செல்லும் இடங்களில் கழிப்பிட வசதி இருக்க வேண்டாம்? பாவம் பெண்கள். வருந்துவதை தவிர என்ன செய்ய

நான், ரங்கனாதன் தெருவில் இருக்கும் பல கடைகளுக்கும், மேலும் உஸ்மான் சாலையில் இருக்கும் பல கடைகளுக்கு சென்று வந்தேன்... எல்லா இடத்திலும் கூட்டம், கூட்டம், கூட்டம்... எல்லா வியாபரிகளும்

பணம்தான் குறிக்கோள், ஆனால் மக்களை பற்றிய கொஞ்சமாவது கவலை? சுத்தமாக கிடையாது. இவ்வளவு மக்கள் கூடும் இடங்களில், பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும்? பாதுகாப்பா அப்படீன்னா? வியாபரிகளும் கண்டு கொள்வதில்லை, அரசாங்கமும் வாங்கியதை வாங்கி கொண்டு அமைதியாகி விடுகிறது. 5 மாடி உள்ள கட்டடத்தில் 4 மாடியில் தீப்பிடித்தி விடுகிறது என்றால், ஆவசரமாக வெளியேறுவதற்கு Fire Exit கிடையாது, இருக்கும் ஒரே படி வழியாகத்தான் இறங்கி வரவேண்டும்... வருவதற்குள் தீ நம்மளை தின்றுவிடும். சாதரனமாகவே ஒரு கட்டிடம் கட்டும் போது, பல்வேறு விசயங்களை கடைபிடிக்க வேண்டும், அதுவும் இப்படி அதிகம் மக்கள் கூடும் இடங்களில் மூன்று மடங்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்... டி நகரில் எங்கும் இது கடைபிடிக்கவே இல்ல.

அரசாங்கம் எப்போதுதான் கண்டு கொள்ளபோய்கிறதோ??? எப்போதுமே பெரிய அளவில் விபத்து நடக்கிறதோ, அப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வருமோ?

Nov 29, 2010

கண்டிப்பாக செய்ய வேண்டிய சாலைவிதி

சாலைவிதி..., மாற்றம் செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது, இன்னும் இதேபோல் தொடர்ந்து கொண்டிருந்தால் பெருநகரத்தில் இருப்பவர்கள் கடுமையான விரக்தி உள்ளாவர்கள்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் அதிகமாகி கொண்டே போகிறது, இப்போது கார் வாங்குவது என்பது ஒரு அவசியம் ஆகிவிட்டது, வரும்காலங்களின் கார் என்பது கட்டாயமாகிவிடும். ஆனால் சாலை வசதி மட்டும் மாறவே மாறாது, அப்படியே இருக்கும்... அதாவது போக்குவரத்து நெரிசல் தகுந்தார்போல் சாலையை மாற்ற மாட்டார்கள்... என்னதான் மெட்ரோ ரயில் விட்டாலும் கொஞ்ச நாளிலே போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து விடும், இன்னும் 1900 போட்ட சட்ட திட்டங்களையோ கொண்டிருந்தால் வருங்காலத்தில் கண்டிப்பாக வருத்த படுவோம்.

சமிபத்தில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள், என்னவென்றால் இ-சாலன் முறை, இ-சாலன் முறை வந்தால் மட்டும் திருந்திட போகிறார்களா என்ன? அவர் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருந்தால் அவரின் அத்யாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும், அப்போது ஓரளவுக்கு தவறுகள் மட்டுபடும்.

சென்னை போன்ற பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் தனிமனித ஒழுக்கமின்மையாகும், எல்லாருக்கும் எங்கும் அவசரம்தான். ஒரு பகுதி ஒரு வழி சாலையாக இருந்தால் அதில்தான் தவறாக போக முயற்சிப்பார்கள், இதில் ஆட்டோ ஓட்டுனர் ஆகட்டும் அல்லது இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஆகட்டும்.... அனைவரும் தவறிலைப்பதில் குறைந்தவர்கள் அல்ல.

நான் பார்த்த வரை, சென்னையின் மற்றும் அனைத்து மாநகரங்களின் போக்குவரத்துக்கு மிக தேவையான ஒன்று, மஞ்சள் பெட்டி பகுதி (Yellow Box System) கொண்டுவருவதாகும். இது எதற்கு என்றால் நான்கு ரோடு சந்திக்கும் பகுதி என்றால் நேராக செல்பர்கள் குறுக்காக செல்பவர்களுக்கு தோதாக நிற்க வேண்டும், அதாவது மஞ்சள் ஒளிந்தவுடன் நிற்க ஆரபித்து, சிவப்பு ஒளிரும் போது நின்றுவிட வேண்டும் அதுதான் முறை, ஆனால் என்ன நடக்கிறது என்றால் ஒருவர் சீக்கிறமாக சென்றுவிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் செல்லும் வழியை அடைத்து கொள்வார்கள்.


மஞ்சள் பெட்டி என்பது நடுவில் போடப்படும் ஒரு மஞ்சள் கட்டம் ஆகும், எதற்கு என்றால் அந்த கட்டத்திற்குள் எந்த வாகனமும் அதிக நேரம் நிற்க கூடாது.

கிழே இருப்பதுதான் மஞ்சள் பெட்டி


இப்ப நான் நேரே செல்லவேண்டும் என்றால் பச்சை விளக்கு எரிந்தால் மேலும் மஞ்சள் கட்டத்திற்குள் சிக்காமலும் இருக்க வேண்டும்; மஞ்சள் கட்டத்திற்குள் சிக்க கூடாது என்றால் நான் போக வேண்டிய அளவு இடம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள் 1ம் எண் வண்டி போவதற்கு பச்சை விளக்கு எரிந்தும் நிற்கிறது, ஏனேன்றால் 3ம் எண் வண்டி சென்றால்தான் அதனால் மஞ்சள் பெட்டியில் மாட்டாமல் செல்லமுடியும்; அதே நேரத்தில் 2ம் எண் வண்டி சென்று கொண்டியிருக்கிறது ஏனெறால் அந்த வண்டி எப்படியும் மஞ்சள் பெட்டி பகுதியில் நிற்க போவதில்லை. மஞ்சள் பெட்டியில் நின்றால் என்ன நடக்கும் மற்றவர்களின் (குறுக்காக செல்பவர்களின்) வழியை மறைத்து கொண்டிருப்பதினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.


இந்த முறை அனைத்து வெளிநாடுகளில் உள்ளது, நமது நாட்டில் இன்னும் வரவில்லை, வந்தால் மிகவும் நல்லது; மஞ்சள் பெட்டில் ஒரு குறிப்பிட்ட நேர அளவை தாண்டி நின்றால் போக்குவரத்து விதிகளுக்கு மாறு செய்தகாக நம்மீது ஃபைன் போடுவார்கள். அதை தொடர்து செய்தால் நமது ஓட்டுனர் உரிமம் கூட ரத்து செய்யபடலாம்.

எவ்வளவு நல்ல விசயம் அல்லவா? யாராவது இதை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து கொண்டு போங்களேன்.

Jun 6, 2010

புகையில்லா சென்னை

சமிபகாலமாக சென்னைவாசிகள் எங்கு பார்த்தாலும் "SMOKE FREE CHENNAI" என்ற வாசகம் காணப்படுகிறது.... ஸ்மோக் ஃபிரி என்பது சரிதான், ஆனால் சிகரட்டில் மட்டும்தான புகை காணப்படுகிறதா???



மாநகரங்களில் வசிப்பவர்கள் இழக்கவேண்டிய ஒன்று ஆரோக்கியம், ஆமாம் சென்னையில் ஆரோக்கியத்தை இழந்துதான் பணத்தை(?) சேர்த்துக் கொண்டிருக்கிறோம். சிகரட் மட்டும் மட்டும் புகை விடுது என்பவர்கள்...














பஸ்கள், லாரிகள் வெளியுடும் கரும்புகை


















சென்னையில் ஓடும் கார், ஆட்டோக்களின் புகை




















இண்டஸ்ட்ரீஸ் வெளியிடும் புகை






















பண்டிகையின் போது வெளியும் புகை


இப்படி புகையோ புகை, கண்டிப்பா இவை எல்லாம் நமக்கு பகைதான், ஆனால் எதிர்ப்பவர்கள் ஒன்றை மட்டுமே ஏன் எதிர்க்க வேண்டும்? புகையில்லா சென்னை என்பது, எங்கும் புகை இல்லாமல் இருப்பதை குறிக்கும் அல்லவா? சிகரட்டில் வெளிப்படும் புகை ஒன்றும் ஓசன் படலத்தை ஓட்டை போடுவதில்லை, புகைப்பவர்களின் இதயத்தில் ஓட்டை போடுவதோடு சரி, ஆனால், மேற்கண்ட வழிகளில் வெளிப்படும் புகை ஓசன் படலத்தை அல்லவா ஓட்டை போடுகிறது, இதனால் என்ன பிரச்சனை என்பவர்கள் வருங்கால சந்ததிக்காக நாம் சேர்த்து வைப்பது கொடிய நோய் நொடிகள்தான், போராடுபவர்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் மிகவும் நன்றாய் இருக்கும்!

நமது நாட்டில் அரசாங்காத்தின் பல்வேறு தூண்கள் பேருக்காகவே இருக்கின்றன... அதில் ஒன்றுதான், "மாசு கட்டுபாட்டு வாரியம்"... இதன் செயல்பாடுகளை யாராவது எடுத்து சொன்னால் தேவலை, பேருதான் "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஆனால் செயல்பாடுகளோ "மாசு கட்டுபடுத்தா வாரியம், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டில் நமது நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா? 123வது இடம். அவ்வளவு சுகாதாரமாக நமது நாட்டை வைத்துள்ளோம். "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஒழுங்காகவே செயல்பட்டு இப்படி புகை வெளியும் பஸ், காரு, ஆட்டோ போன்றவற்றை தடை செய்து, கொடுரமாக புகை வெளியிடும் இண்டஸ்ட்ரீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.


கடைசியா இரண்டு தகவல்

  • சிக்ரட் குடிப்க்கும் ஆண்களுக்க் ஆண்மை குறைவு ஏற்படுமாம், பெண்களாய் இருந்தால் பெண் தன்மையே பரிபோகுமாம்.
  • சிக்ரட் குடிப்பவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் அது குழந்தையின் உயிரை கூட பரித்து விடுமாம்,சமிபத்தில் வந்த தந்தியில் இருந்த தகவல்.

Apr 30, 2010

நீக்க வேண்டுமா ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை?

ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை ரத்து செய்து அரசு செய்தி வெளியுட்டுள்ளது, இதற்கான காரணம் "சென்னையைவிட சிறிய நகரங்களான பெங்களூருவில் 78 ஆயிரம் ஆட்டோக்களும், ஐதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்களும் ஓடுகின்றனவாம்" சென்னையில் 52 ஆயிரம் ஆட்டோவே உள்ளனவாம்.

அதனால், சென்னையில் கூடுதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவதற்கான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்டுகள் தகுதி அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு வழங்கப்படும்.

நன்றி தட்ஸ்தமிழ்


முதலில் நன்றாய் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதையும் கற்று கொடுத்து விட்டு பர்மிட்டுக்கு பர்மிட் கொடுத்திருக்கலாம். இரண்டாவது பயணிகளிடம் எப்படி பேசுவது என்பதையும் சொல்லி கொடுத்திற்கலாம், மூன்றாவது நியாயமான முறையில் பணம் வாங்குவது என்பதை சொல்லி கொடுக்கலாம்... இப்படி பல உள்ளன...



பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆட்டோக்களில் சவாரி செய்திருப்பவர்களிடம் சென்னையில் ஆட்டோ பயணம் செய்ய சொல்லுங்கள், ஒருவர் திருப்தியாக பயணம் செய்தால் அப்பறம் தடையை நீக்கலாம்.

சென்னையில் இருப்பவர்களிடம் கேளுங்கள், யாருமே ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாகவே பேசவே மாட்டார்கள், விதிவிலக்குலாக சில ஆட்டோ டிரைவர் இருக்கலாம்... ஆனாலும் பெருபான்மை என்னவோ அதுதானே உண்மை. பொதுவா நான் எங்கு போனாலும் பைக், அல்லது ரயிலில் போயிவிடுவேன், சில நேரங்களில் பஸ் பயணம் செல்ல நேரலாம்... மற்றபடி என்ன அவசரம் என்றாலும் ஆட்டோ பயணத்தை விரும்பவதில்லை... அவர்கள் ஏறும் போது ஒரு வாடகையும் இறங்கும் போதும் ஒன்றாகவும் இருக்கும், கண்டிப்பா மீட்டர் போடவே மாட்டார்கள், இதுவரை யாருமே நியாயமான வாடகை கேட்டதே இல்லை, குறைந்தது 1 கிமீ போகவேண்டும் என்றாலும் 100 ரூபாயவது கேட்பார்கள், நமக்கு இடம் தெரியும் பக்கதில்தான் என்றாலும் அங்க சுத்தி இங்க சுத்தி போகனும் என்பார்கள், சென்னைக்கு புதியவர்கள் என்றால் ஆட்டோ டிரைவர்கள் பாடு கொண்டாட்டம்தான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறந்து விடுவார்கள்.

ஓட்டுவது மிக மிக வேகமாக இருக்கும், சின்ன சந்தில் ஒரு மனிதன் நுழைய முடியுமா என்று இருப்பதில் கூட ஆட்டோவை நுழைக்க முயற்சி செய்வார்கள் உள்ளே இருக்கும் பயணி உயிரை கையில் பிடித்து, நாம போக வேண்டிய இடம் சீக்கிறமா வர கூடாதா என்று வேண்டி கொண்டிருப்பார்கள்.

சாலைகளில் எந்த விதமான விதிகளையும் மதிக்காமல் ஓட்டுவது ஆட்டோ டிரைவர்களாகத்தான் இருக்கும், ஒரு ஆட்டோவில் பேசிவிட்டு அடுத்த ஆட்டோவிற்கு சென்றால், முதலில் பேசிய ஆட்டோ டிரைவர் "... போற மூஞ்சிய பாரு, ந்தா 20க்கு போகனுமா, த்தா...." என்று மற்ற ஆட்டோ டிரைவருடன் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். இப்படி ஒன்று இல்லை... பல கூறலாம்...

இருந்தாலும் சில பேர் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள், சமிபத்தில் எனது நண்பர் தனது மனைவியை கூட்டி கொண்டு சென்னை வந்தார், அவருக்கு ஒரு மகன், மனைவிக்கு உடம்பு சரியில்லை.. ஒரு ஆட்டோவில்தான் சென்னை முழுக்க பயணம் செய்தார்... ஆட்டோ டிரைவர்தான் கூட இருந்து அனைத்து விதமான உதவிகளையும் செய்தார், அவரின் மகனை முழுவதுமாக பார்த்து கொண்டது ஆட்டோ டிரைவர்தான், கடைசியில் பணம் கொடுக்க போகும் போது, பரவாயில்லை சார், முதல்ல அவங்க சரி ஆகட்டும் என்று பணத்தை மறுத்தார்... இப்படியும் சிலபேர்....



ஆனாலும், அரசாங்கம் ஆட்டோ பர்மிட்டுக்கு இருந்த தடையை நீங்கவதற்கு முன்பு அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சில கட்டுபாடுகளை விதித்திருக்கலாம்.

  • மீட்டர் பொருத்துவது
  • கணிவாய் பேசுவது
  • சாலைவிதிகளை மதிப்பது

Apr 23, 2010

ஐபில்: இப்பதான் சந்தோசம் :) (ஓட்டும் போடுங்களேன் பிளீஸ்)

நேற்று நடந்த ஐபில் டி20 சென்னை - டெக்கான் விளையாட்டை பார்த்திருந்திருப்பீர்கள், அதில் சென்னை ஜெயித்தது மிகவும் சந்தோசமாக இருந்தது, அதைவிட சந்தோசமா இருந்தது டெக்கான் தோற்றது...











கடைசியில் சென்னை ஜெயித்தாலும் சந்தோசம்தான் மும்பை ஜெயித்தாலும்தான், ஏன் என்றால் வெளிநாட்டுகாரன் கேப்டன்சிப் இல்லாமல் இந்தியர்கள் தலைமையில் ஜெயிப்பது மிகவும் சந்தோசமா விசயம். இதே நேரத்தில் டெக்கானோ, ராஜஸ்தான் ராயலோ ஜெயித்துவிட்டார்கள் என்றால் அவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியாது... வெளிநாட்டுகாரன்தான் ஜெயிப்பான் என்கிற மனோபாவம் வந்துவிடும்.

இந்த தடவை எப்படியும் சென்னைதான் ஜெயிக்கனும், பாவம் முதல் தடவை பைனல் வரை வந்தார்கள், இரண்டாவது செமி பைனல் வரை, இப்போது பைனல் வரை வந்து விட்டது, கண்டிப்பாக ஜெயித்து விடவேண்டும் :) எப்படியோ வரும் ஞாயிறு மிகச்சரியான போட்டி இருக்கு.

ஹைடன் எப்பவும் போல் இந்த சீசன் 3யில் செதப்பி வருகிறார் (பெருசா பணம் விளையாடிருக்குமோ???) அவரை பார்க்க பார்க்க அப்படி டென்சனா இருக்கு, அவரை விட்டு விட்டு கெம்பை எடுக்கலாம், மற்றபடி வள்ளல் பாலாஜியவும் நீக்கிவிடலாம். மும்பை அணியில் சச்சின் மற்றும் பொல்லார்டுக்கு அடிபட்டது சென்னைக்கு மிகவும் சாதகம் எப்படியோ டோனிக்கு அதிர்ஷ்டம் இருப்பதை ஒற்றுக் கொள்ள்வேண்டும். சென்னை சூப்பர் கிங் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

பார்க்கலாம் டோனியா சச்சினா என்று.




இங்கு ஓட்டிங் பட்டை வலது பக்கம் உள்ளது, அதில் பைனலில் யார் ஜெயிப்பார்கள் என்று கேள்வி உள்ளது, தயவு செய்து ஒரு ஓட்டு போட்டு போங்க



எல்லாம் ஒரு சூதாட்டம்தான்... இருந்தாலும் மனசு கேக்க மாட்டேங்கிது.

Mar 26, 2010

சென்னை வேஸ்ட் கிங் -- இன்னுமா உலகம் நம்புது

ஒவ்வொரு தடவையும், இப்ப ஜெயிச்சுருவாங்க இந்தா ஜெயிச்சுகிட்டு இருக்காங்காங்க அப்படீன்னு நம்பி ஏமாந்து போறதுதான் எனக்கு பொழப்பா இருக்கு... 



ஏன்தான் சென்னை சூப்பர் கிங் இப்படி ஆயிடுச்சோ... முதல் IPL பைனல் வரை வந்தாங்க.. இரண்டாவது IPL செமி பைனல்வரை... இப்ப அவ்வளவுதான் சங்குதான்... ஆனாலும் சூப்பரான முன்னேற்றம்... எல்லாருக்கும் ஏறுமுகம் இருக்கும், ஆனா நம்ம சென்னை சூப்பர் கிங்குக்கோ சூப்பரான இறங்குமுகம்... :)

ஓரளவுக்கு பேட்டிங் இருக்குன்னு நம்பலாம்... மத்தபடி பவுலிங், பீல்டீங்... சே நினைக்க  நினைக்கவே அப்படியே பிபி ஏறுது... நேத்து பீல்டீங்கிற பேர்ல இவங்க செஞ்ச விசயம்... பந்து கைல பட்டு போனாலும் அப்படியே விட்டுடு வேடிக்கை பாத்துக்கிட்டு பொணம் மாதிரி நிக்கிறாங்க... பவுலிங் போட்டா எப்படிதான் புல்டாஸா போடுவாங்களோ அதுலாம் சென்னை சூப்பர் கிங் கிட்டதான் கத்துக்கனும்.... 

இதற்கு சென்னை சூப்பர் கிங் என்று பெயர் இருப்பதற்கு பதிலா சென்னை வேஸ்ட் கிங் அப்படின்னு பேரை மாத்திடலாம், அப்படி ஒரு கேவலமான ஆட்டம்... டோனியை வச்சுக்கிட்டு இந்தியா அணி எப்படிதான் டி20 விளையாட போகுதோ... ம்ம்ம்ம்... வர வர எரிச்சலா இருக்கு... ஆரம்பத்துல சென்னை ஆதரித்த என்னுடைய நண்பர்களாம் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சு போயிட்டாங்க... நாந்தான் சரி எப்படி ஜெயிச்சுருவாங்க... டோனிக்கு காயம் பட்டுருச்சு பாவம்... இப்படி நானே என்னை சமாதானம் செய்து கொண்ட நேரங்கள் அதிகம்... அட எல்லாரும் சென்னை சூப்பர் கிங் வெறுத்துட்டா ஆதரிக்க யாருமே இல்லைன்னே நான் இருந்தேன்... ஆனா,இன்னும் தொடர்ந்தா கேவலம்னு வேற ஒரு நல்ல டீம தேடுறேன்... இப்பவுலாம் பெங்களூர் டீம் நல்லா விளையாடுது... என்னமோ தெரியலை கர்நாடகா அப்படீன்னாலே ஒரு மாதிரியா இருக்கு... பேசாமா நம்ம சச்சின் இருக்குற பக்கமா சாஞ்சுடபோறேன் :) ஆயிரம்தான் இருந்தாலும் சச்சின் மாதிரிவருமா...


இந்த தடவை மும்பை இந்தியன் தான் ஜெயிக்குது என்ன பெட்???

Nov 13, 2009

சென்னையின் சப்தம்

உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.






அப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே???


ஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.


நான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(


எது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா???

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு

Nov 11, 2009

மாறவே மாட்டாங்களா?

பொதுவா ஏமாறுவதுக்கு என்றே சில பேர் உள்ளனர் போல். இதில் ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்களையே குற்றம் சொல்லனும். சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இந்த பதிவை எழுத தூண்டியது. 

அதாவது, ஒரு கணிணி நிறுவனத்தில் பணம் கட்டினவர்களை அந்நிறுவனம் பட்டை நாமம் சாத்திஉள்ளது...

எப்படிதான் ஏமாறுவார்களோ?

சில பேர் தானும் சாப்பிடாமல், மற்றவர்களுக்கு தானம் செய்யாமலும் சேமித்து சேமித்து இப்படி ஏமாற்று பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து எப்படிதான் சிந்திக்காமல் ஏமாறுகிறார்களோ? சிறிது வருடங்களுக்கு முன்பு சிட்பண்ட் என்ற பெயரில் ஏமாற்றி கொண்டுருந்தார்கள். 

இப்போதும் அவர்கள் தொடர்கிறார், வேறு வேறு பெயர்களிலும். மக்கள் இப்போதும் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்.

சில விசயங்கள் நமக்கே தெரியவேண்டும். பணம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்நிறுவனத்தின் நம்பகதன்மையை சிந்திக்க வேண்டாமா? 100000 முதலீடு செய்து மாதம் 20000 வருமானம் வரும் என்றால் நம்பிவிடுவதா? சமிபகாலமாக அதிககமாக பஸ், ரயில் போன்றவற்றில் சிலபோஸ்டர் தென்படுகின்றன... அவைகளின் சாராம்சம்...

"மாதம் 5000 வருமானம்,  இது மார்கெட்டிங் கிடையாது, கஷ்டப வேண்டியதில்லை, சேல்ஸ் வேலையிம் கிடையாது, உங்களது விருப்பபட்ட நேரங்களில் வேலை செய்யலாம்"

இப்படிலாம்,  இருக்கின்றது... எப்படி வரும் 5000 ருபாய்.. சும்மா தூக்கி கொடுத்திருவாங்களா 5000 ருபாய்??? நாம அவர்கள் கொடுக்கும் நம்பருக்கு பேசினால் அப்படியே ஐஸ் முழுங்கியது போல் பேசுவார்கள்.. அவர்கள் இடத்திற்கு கூப்பிட்டு  நீங்க எந்த வேலையிம் செய்ய வேண்டாம், 100000 பணம் கட்டிடுங்க... மாசம் மாசம் 5000 ருபாயா 5 வருசத்திற்கு கொடுப்போம், ஜாலியா இருக்கலாம்னு சொல்வார்கள்... ஏமாறுவதற்கே இருக்கும் மக்களும் பணத்தை கட்டி விட்டு வருவார்கள்.

ஏமாற்றுபவர்கள் பலவிதம், கம்பியூட்டர் பெயரில் கூட... "டாக்குமொண்ட் பிராஸ்ஸிங்... ஒரு குறுப்பிட்ட அமொண்ட் கட்டிடுங்க, எவ்வளவு கட்டுறீங்களோ அதற்கு தகுந்தார்போலவே டாக்குமொண்ட் கொடுப்போம், நீங்கள் அதை பிராஸ்ஸிங் செய்து மாதம் 50000 வரை சம்பாதிக்கலாம்..." பணத்தாசையில் வீட்டை அடமானத்தில் வைத்து சேர்வார்கள்.

எனக்கு தெரிந்தவர் நடந்த உண்மை சம்பவம் இது.
சென்னை சுற்றி பார்க்க வந்த அவரது குடும்பம், எங்கோ செல்லும் போது, ஏதோ ஒரு பார்மில் அவர்களது மொபைல் நம்பரை கொடுத்துள்ளனர், அவர்களும் அதை மறந்து விட்டனர், கொஞ்ச நாளில் அவர்களுக்கு ஒரு போன் வந்துள்ளது,  "உங்களுக்கு சிங்கப்பூர் போவதற்கு பரிசு விழுந்துள்ளது" என்று கூறிவுள்ளார்கள், அவர்களும் ஒரே குஷியாகி அடுத்த நாளே சென்னை வந்து ஒரே குஷியா இருந்தாங்க... அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போனவுடன்... உங்களுக்கு பரிசு விழுந்தது உன்மைதான். சீக்கிரமா பாஸ்போர்ட்லாம் ரெடி பன்னுங்க, விசா, டிக்கட், தங்குற செலவு எல்லாம் நாங்களே பார்த்து கொள்வோம், அவரு ரெம்ப சந்தோசமாயிட்டாரு... அவர்கள் சில இடங்களில் அவரின் கையெழுத்து வாங்கிவிட்டு, இது நீங்க எங்க கிளப்பில் மெம்பரா சேர்ந்தாதான் இது எல்லாம் அணுவிக்க முடியும் என்றவுடன், அவரும் அவரின் மிகவும் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து விட்டனர்.

எல்லா இடங்களிலும் இவர்கள் உள்ளனர்,  வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூட ஒரு கூட்டம் ஏமாற்றி கொண்டு இருக்கின்றது. நாம அங்கு போன பிறகுதான் தெரியும், ஏதாவது அவர்களிடம் சேர்ந்து கோர்ஸ் படித்தால்தான் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வார்களாம்... வேலை என்பது உறுதி கிடையாது... வேலை கிடையாது என்பது உறுதி :)




இப்படி பலபேர் இருக்கின்றன்ர், ஏமாற்றுவர்களின் லிஸ்டில்... நாம்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுநிறுவன வங்கிகளே 11% மேல் வட்டி தறுவதில்லை... மற்றவர்கள் எப்படி தறமுடியும்? சிந்திப்பார்களா?

Aug 28, 2009

சென்னையின் சப்தம்

என்ன டைட்டில் வைப்பது என்று யேசித்தே, யேசித்தே பதிவ பதிவு செய்யாம விட்டுறேன். எப்படித்தான் பர பரப்பான பேரா வக்கிறாங்களோ???
நான் பொதுவா தமிழ்மணத்தில் பரபர பதிவு, அதிகமாக பின்னூட்டம் இட்ட பதிவு எதுவோ அதையோ முதலில் பார்பேன், பிறகு மற்றவகளை பார்வையிடுவேன், அதிரடியா பதிவுக்கு எப்படித்தான் பெயர் வைப்பார்களோ?

உண்மையில் பிலாக் எழுதுறது என்பது ஒரு அடிட் மாதிரி, இதான் எனக்கு ரெண்டாவது பதிவு, முதலுக்கும் ரெண்டாவது இடையில் ஒரு 10 தடவை பிலாக் ஓபன் செஞ்சு ஏதாவது எழுதிட்டு அப்புறம் விட்டுவேன்... இதை எப்படியோ கடைசி வரை கொண்டு வந்தாச்சு :)

இப்ப நான் எழுதப் போறது. சென்னையில் இருக்குற அனுவிக்கிற சப்தங்களை பற்றி. அனுபிவிக்கிறம்னு சொல்லுறத விட செவிடாகிக்க் கொண்டு இருக்கிறோம் என்பதே உண்மை.

உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.

அப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே???

ஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.

நான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(

எது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா???