Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Dec 9, 2009

ஐயமிட்டு உண்

சமிபத்தில் இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது, பார்த்தவுடன் மனது கணமானது. இப்படியும் உலக மக்கள் இருக்கின்றனர். பிச்சை புகினும் கற்றல் நன்று என்பது பசி அடக்குவதற்கவே என்று ஆகிவிட்டது.  இதை பாருங்கள் சிலர் சாப்பிடும் உணவை.


Nov 25, 2009

லிபரான்: அரசியல்வாதிகளின் பொய்முகம்

பலவருடங்களையும், அரசாங்கத்தின் கஜானவையும் சேதப்படுத்தி வந்திருக்கும் லிபரான் கமிஷன் அறிக்கை, என்ன முடிவுகளை கொண்டுவந்திருக்கிறது என்றால்... பெரிய ஒரு வெற்றிடம்தான் மிச்சம்.




எதற்காக நாடாளுமன்றத்தில் இதை சமர்க்கப்பட வேண்டும்? இதை சமர்பித்த அரசாங்கம் யார் மீதும் குற்றம்யில்லை, சூழ்நிலையால் குற்றவாளியாக ஆக்கபட்டுள்ளனர் எனும் அர்த்ததில் சமர்பித்துள்ளது. யார் மீதும் குற்றம்யில்லை என்றால் எதற்கு ஒரு கமிஷன், எதற்கு இவ்வளவு நாட்கள்? ஏன் நமது வரிப்பணம் இவ்வளவு வீணடிக்கபட்டது? அதை விட முக்கியமானது இக்கமிஷன் கூறியிருக்கும் எவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை இல்லையாம். நடவடிகை எடுக்க வில்லை என்றால் இதை சமர்பிக்கனும்? இக்கமிஷனே யார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பரிந்துரைக்கவில்லை.

லிபரான் கமிஷன், மிகப்பெரிய உண்மையை மறைந்த்துள்ளது, அது காங்கிரஸுக்கு எந்த விததிலும் பாபர்மசூதி இடிப்பில் தொடர்பில்லை என்பதை... இந்த உண்மையை கண்டுபிடித்தது லிபரான் கமிஷனா, அல்லது அறிக்கையை தாக்கல் செய்த அரசாங்கமா தெரியவில்லை? பாபர்மசூதி இடிக்கபட போகிறது என்று அன்று ஆண்டுகொண்டிருந்த நரசிம்மராவுக்கு எதுவுமே தெரியாதாம், அவரும் காலையில் பேப்பர் பார்த்துதான் இச்செய்தியை தெரிந்து கொண்டாராம், இதை நான் சொல்லவில்லை லிபரான் அறிக்கை சொல்கிறது, இல்லை இல்லை தாக்கல் செய்த அரசாங்கம் கூறுகிறது. பாபர்மசூதி விவகாரத்தின் ஆணிவேர், காங்கிரஸ் கையிலே உள்ளது, அனைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி ராமர் சிலையை அங்கு நிறுவ அனுமதியளித்தது அன்றய காங்கிரஸ் அரசாங்கதான். இடித்தது வேண்டும் என்றால் இந்துத்துவா, அதற்கு துனை நின்றது காங்கிரஸ் என்றால் மிகையில்லை. காங்கிரஸ் கட்சிய சேர்ந்த (சங்கர் சிங் வகேலா) அமைச்சரும் இதில் குற்றம் சாற்றபட்டவர் ஆவார்.

அரசியல்வாதிகளுக்கும், நான்காம் தூணுக்கும் மிக நல்ல ஒரு விசயம் மாட்டிகொண்டது. அரசியல்வாதிகள் நன்கு அடித்துகொள்வதற்கும், ஓட்டு வங்கியை பலப்படுத்தவும் லிபரான் கமிஷன் உதவபோய்கிறது. இப்பவே நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்திவுள்ளது. பாஜாக உறுப்பினர்களும் சமாஜ்வாடி உறுப்பினர்களும் தாக்கி கொள்ளாத அளவிற்கு கூச்சல் இட்டு கொண்டனர், மகராஷ்ட்ராவில் உள்ள தொடர்ச்சி போல்...  வேறு ஒரு பரபரப்பு செய்தி வரும் வரை இச்செய்தி ஓடும்.

லிபரான் கமிஷனால் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருக்கும் சிலபேரில் மிகவும் பிரபலமான முகங்கள்... இவர்களை சட்டம் என்ன செய்துவிட முடியும்? பாபர்மசூதி இடிப்பிற்கு மிகவும் பெருமைபடுவதாக உமாபாரதி கூறுகிறார்,  சட்டம் அனைவருக்கும் பொதுதான் என கூறுவோம் நாம் சட்டதை பற்றி தெரியாதவரை... மிகப்பிரபலமானவர்கள் மீது சட்டம் என்ன கடமையை செய்யும்? மாபெரும் கேள்விகுறி!!! தன்னை மிதவாதி என்று கூறிகொண்ட வாஜ்பாயி, பாபர்மசூதியை இடுத்தது தவறு என்று வேறு நாடுகளுக்கு போய் ஒப்பாரிவைக்கும் அத்வானி போன்ற பொய்முகம்கள் அதிககதிகம் உள்ளன.
 
தெரிந்த முகங்கள் 
  • வாஜ்பாய் (BJP)
  • அத்வானி (BJP)
  • அசோக் சிங்கால் (VHP)
  • பால் தாக்கரே (Sivasena)
  • ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (VHP)
  • உமா பாரதி(BJP)
  • கோவிந்தாச்சார்யா (RSS)
  • கல்யாண் சிங்(BJP)
  • முரளி மனோகர் ஜோஷி(BJP)
  • பிரவீன் தொகாடியா(பஜ்ரங்தள்)
  • வினய் கத்யார்(RSS)
மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது,  பெரிய பொறுப்பில் இருக்கு அரசு அதிகாரிகளும் நேரம் கிடைத்தால் கொடிய முகத்தை காட்ட தயங்கமாட்டர்கள் என்பதுதான். லிபரான் கமிஷனால் கூறப்பட்டிருக்கும் மிகக்குறைந்தவர்களின் எண்ணிக்கை. மிகப்பெரிய தலைமை பொறுப்பில் இருந்த இவர்களின் கீழ் வேலை பார்த்த பலபேர்களை மனமாற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.   எவ்வளவு பேரிடம் விசத்தை விதைத்திருப்பார்கள்? முதலில் தண்டிக்க வேண்டியது உயர் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளைதான். கீழ் உள்ள இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்று ரிட்டயர் ஆகி இருப்பார்கள் அல்லது ஏதாவது அரசியில் கட்சியில் சேர்ந்து தொண்டு ஆற்றுவார்கள்.

அரசு அதிகாரிகள்
  • ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
  • அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
  • அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
  • டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
  • ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
  • கெளர் (மாவட்ட ஆணையர்)
  • திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
  • பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
அமைதியானவர்கள், சாதுக்கள் என்று மக்களால் நினைக்கபட்டவர்கள், எப்படி வந்தது இந்த கொலைவெறி???

சாதுக்கள் என்று அறியபட்டவர்கள்
  • சுவாமி சின்மயானந்த்
  • சுவாமி சச்சிதானந்த சாக்ஷி
  • சாத்வி ரிதாம்பரா

அறிந்தது தெரிந்தது குறைந்த அளவே. தெரிந்தவர்களையாது சட்டம் தண்டிக்கிறதா என்று பார்ப்போம்.  தர்மம் என்றாவது ஒரு நாளைக்கு வெல்லும். நம்பிக்கையுடன் 17 வருடத்தையும் எதிர்கொள்வோம்.

Oct 16, 2009

உங்களால் உதவ முடியாதா?






உணவு நாள் என்று ஒரு நாளை கொண்டாட வேண்டியதிருக்கிறது...  எல்லாவற்றிற்கும் நாள் வைத்து கொண்டாடியது போல் உணவு நாளையுமா?

கொண்டப்பட வேண்டியதா அல்லது கொடுக்க படவேண்டியதா?


நினைவு படுத்த வேண்டிய ஒன்றில் இரக்கமும் தர்மமும் சேர்ந்ததுதான் கொடுமை.


இந்த அவசர உலகில் நாம் பலவற்றை தொலைத்து கொண்டு வருகிறோம் அல்லது நாமே தொலைக்கப்பட்டு வருகிறோம்.


ஒரு வேளை உணவு இல்லை என்றால் எவ்வளவு துடித்து போய் விடுவோம், ஒரு அறிக்கையின் படி பல பேர்களுக்கு பல நாட்களுக்கு ஒரு வேளைதான் உணவு.  என்ன காரணமாய் இருக்கலாம் மக்கள் உணவு இல்லாமல் வீணாகி கொண்டிருக்க? நமது வாழ்ககை முறை பிரச்சினையா? நமது சமுக வஞ்சனையா? எதிர் காலம் எதிர் காலத்திற்கு என்று நிகழ்காலத்தை தொலைத்தவர்களினாலா? ஜீவகாருண்யம் என்று சொல்லி தனது வீட்டில் வளரும் மிருகங்களுக்கு உணவளிக்கும் மனிதர்களினாலா? உலகில் சராசரியாக விளையும் தானியங்களை குறிப்பிட்ட சிலரே அடைவதாலா? உணவை ஒழுங்காக வினியோகிக்க முடியாதலாலா?


இப்படியே பல காரணங்களை தேடிக் கொண்டிருக்கலாம்... நம்மால் முடிந்து இயலாமை என காரணங்களை தேடுவதும் ஆதங்க படுவதும் ஆகும். நாம வருத்த படுவதால் பசியோடுயிருக்கிறவன் வயிறு நிறைந்து விடுவதில்லை. நம்மால் முடிந்த உதவி பசித்தவனுக்கு உணவு அளிப்பதுதான்.


உலகில் ஆறில் ஒருவர் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரனாமாக கடந்த ஆண்டில் புதிதாக பிறந்த 10 கோடி பேர் உணவு பற்றாக் குறையால் பாதிக்க பட்டுள்ளார்களாம்.


எவ்வளவு பெரிய கொடுமை? ஆறில் ஒரு பேர் என்றால்... ஐந்து பேரும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தலே ஆறாவது மனிதனின் பசி ஆறிவிடுமே.


இதைபற்றி தினசரியில் வந்த செய்தி
உலகில் ஆறில் ஒருவர் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரனாமாக கடந்த ஆண்டில் புதிதாக பிறந்த 10 கோடி பேர் உணவு பற்றாக் குறையால் பாதிக்க பட்டுள்ளார்களாம். இதனால் சிக்கலான நேரங்களில் உணவு தட்டுபாட்டை எதிர் கொள்வோம் என்ற நேக்கத்தில் கொண்டாடப் படுகிற்து




1979 முதல் ஆண்டுதோறும் உலக உணவு தினம் அக்டோபர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை உணவு இல்லாத தினமாக அறிவிக்கும்படி இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை போன்றவற்றுக்கு எதிராக உலக சமூகம் ஒன்று படவேண்டும் என்ற நோக்கில் உலக உணவு தினத்தை ஐ.நா., சபை அறிவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிலவும் உணவுப்பற்றாக்குறையையும், உணவுப்பொருள் விலையேற்றத்தையும் சுட்டிக்காட்டி எல்லோருக்கு உணவு வழங்க மாற்றுவழிகளை கண்டறிய வேண்டும் என தன்னார்வ தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.


உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப் பட்ட பல திட்டங்கள் விவசாயிகளுக்கோ, ஏழைகளுக்கோ பெரிய அளவில் பலன் தரவில்லை என இந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவுப்பொருள் விலையேற்றம், கலப்படம், உற்பத்தி குறைவு போன்றவை பெரும்பாலும் ஏழைகளையே கடுமையாக பாதிக்கின்றன. தினமும் ஏறத்தாழ 92 கோடிப்பேர் பட்டினியுடன் தூங்கச்செல்கின்றனர் என உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதை 2015ம் ஆண்டுக்குள் 50 கோடியாக குறைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். உணவு தினத்தை, உணவு இல்லாத தினமாக அறிவித்தால் மட்டுமே உலக உணவுச்சிக்கல் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதும் தொண்டு அமைப்புகளின் வாதம்.


நன்றி தினமலர்




நம்மால் இயன்ற பொருள் உதவி செய்தால் ஒருவருடைய வயிறு நிறையும், நம்மால் நமது வயிறு நிறையும் போது அடையும் ஆனந்ததை விட மற்றவர்களுக்கு உணவளித்து பார்ப்பது பல மடங்கு ஆனந்ததை அளிக்க கூடியது. சாலையில் செல்லும் போது ஒருவருக்கு பிச்சை போடும் 10 ருபாயை விட அவருக்கு கொடுக்கும் ஒரு வேளை உணவு சிறந்தாகும்.




ஏழைகளுக்கு உணவு அளிக்கிறவன் கர்த்தருக்கு உண்வளித்தவனாவான் என்கிறது கிருஸ்த்துவம்

அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே என்கிறது இஸ்லாம்.


பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம் என்கிறது இந்துஸ்சம்


வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாமும் அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்க ஒரு நொடி போதும். அடுத்தவர்களின் பசியை ஆற்றிப் பாருங்கள், வாழ்கை அடுத்தவர்களை வாழ வைத்து பார்ப்பதுதான்.

நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒரவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.



ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்.

உங்களால் உதவ முடிந்தால்...
http://www.helpageindia.org/
www.mctrust.org.in/helpoldage.htm
http://www.ashanet.org/
http://www.karmayog.org/
http://www.hotfrog.in/Products/Welfare-Organisation
http://www.udavumkarangal.org/




அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி