Showing posts with label டெக்னாலஜி. Show all posts
Showing posts with label டெக்னாலஜி. Show all posts

Mar 30, 2010

விசுவல் ஸ்டூடியோ 2010 ஒரு பார்வை

நான் மிகவும் ஆர்வமாய் எதிர் பார்ப்பது மைக்ரோசாப்டின் விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸை... வரும் ஏப்ரல் 12 அன்று விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸ் என்று மைக்ரோசாப்டின் அறிவித்து விட்டது...

விசுவல் ஸ்டூடியோ 2008 இன்னும் முழுமையாக பயன் படுத்த ஆரம்பிக்காத நிலையில் புதிதாக விசுவல் ஸ்டூடியோ 2010... மைக்ரோசாப்ட் புதிதாக வெளியிட அனைத்து நிறுவனங்களும் விசுவல் ஸ்டூடியோ 2010 தெரிந்தவர்கள்தான் வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விடும்.. இதில் கொடுமை என்ன வென்றால் ஏப்ரல் 12 2010 அன்றுதான் விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸ் ஆகிறது, ஆனால் ஏப்ரல் இறுதியிலே இது தெரிந்தவர்கள்தான் வேண்டும் என்று கூற ஆரம்பித்து விடுவார்கள்... 20 நாட்களுக்குள் எப்படிதான் அப்டேட்டட் டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்வதோ???



சரி, விசிவல் ஸ்டூடியோ 2010 உள்ள வசதிகள் என்ன...


  • டாட்நெட் 4
  • சில்வர்லைட் 4
  • சி# 4
  • டைனமிக் லாங்குவேஜ் ரன்டைம் (DLR)
  • விண்டோஸ் 7 புரோக்கிராமிங் சப்போர்ட்
  • ஷேர்பாயிண்ட் 2010 சப்போர்ட்
  • ஆபிஸ் 2010 புரோக்கிராமிங் சப்போர்ட்
இதுவரை டாட்நெட் 2 பிறகு வந்த எந்த டாட்நெட் வர்சனும் ஏஸ்பி.நெட்டில் இயங்கும் வர்சனை மாற்ற கூடிய வகையில் வர வில்லை, ஆனால் இதை இன்ஸ்டால் செய்யும் போது, நாம்  ஏஸ்பி.நெட்டில் வர்சன் 1, 2, 4 என்று மாற்றி கொள்ளலாம்.

MVC (மாடல் வியு கண்ட்ரோலர்), ஒரு பகுதியாக டாட்நெட்டில் இனைகிறது, அதன் மூலம் MVC தேவையான நேம்ஸ்பேஸ் வந்துவிடும், மேலும் ரூட்டிங் செய்வதை மிகவும் எளிதாக்கிகிறது.
சி சார்ப் 4, பல மாற்றம் இருக்கும் போல
  • டைனமிக் என்ற கீவோர்ட் புதிதாக சேர்த்துள்ளார்கள், இதன் மூலம் ரன் டைமில் மாறும் வசதியை கம்பையல் டைமில் பெறலாம்.
  • ஆப்சனல் பேராமீட்டர் சப்போர்ட் (விசுவல் பேசில் போல), அதாவது ஒரு மெத்தேடு கிரியட் செய்யும் போது பல பேராமீட்டர் பாஸ் செய்ய வேண்டியது வரலாம், அப்போது பல ஓவர்லோடிங் மெத்தேடு எழுதுவோம், இப்போது அந்த பேராமீட்டருக்கு டீபால்டாகவே ஒரு வேல்வை செட் செய்து விடலாம்.
  • நேமுடு பேராமீட்டர், மெத்தேடுக்கு வேல்வு பாஸ் செய்யும் போது எந்த பேராமீட்டருக்கான வேல்வு என்று சொல்லாம்... உம் ( testMethod(firstVal : 5); )


விசுவல் ஸ்டூடியோ ஐடியி
  • ஏஸ்பி.நெட் பேஜ் டிசைன் நேரத்தில் மட்டும்தான், கண்ட்ரோல்களை ட்ராக் அண்ட் ட்ராப் செய்தால் அந்த கண்ட்ரோல் <asp:TextBox runat="server" id="TextBox1" /> என்று வரும், இப்போது சோர்ஸ் (HTML view) மூலம் செய்யும் போதும் இவ்வசதியல் பெறலாம்.
  • புதிதாக ஏதாவது ஒன்றை எழுதுகிறீர்கள், அதன் ரெபரன்ஸ் எங்கும் இல்லை என்றால் ஏதாவது நேம்ஸ்பேசை விட்டு விட்டீர்களா என்று கேட்கும், இதில் நாம் தேவை எனில் அந்த எழுத்துக்கு புதிதான கிளாஸ் உருவாக்க சொல்லாம், மேலும் ஒரு கிளாஸில் இன்ஸ்டன்ஸில் மெத்தேடு இல்லை என்றாலும் இப்படி உருவாக்கி கொள்ளலாம், அதாவது புதிதான எம்ய்டி கிளாஸ், மொத்தேட் ஈசியாக உருவாக்கலாம். 

டாட்நெட் 4 பிரேம்ஒர்க் டவுன்லோடு

Mar 16, 2010

காற்றில் ஓடும் கார்

இனி பெட்ரோல் நாடுகளுக்கு ஆப்புதான்... பொதுவா பெட்ரோலியம் புரடக்ட்  உபயோகப்படுத்துவது வாகனங்களில்தான், அந்த வாகனங்களும் இப்போது பெட்ரோலை பயன்படுத்துவதை நிறுத்திவிடும், ஏனென்றால் காற்றில் ஓடும் கார் கண்டுபிடித்துள்ளார்கள், அழுத்தி சேமிக்கப்பட்ட ஆக்ஸிசன் மூலம் ஓடும் காரை உருவாக்கி உள்ளார்கள்...

அதிக பட்சமாக மணிக்கு 120 கிமி வேகத்தில் போகலாம். பொலுசன் கிடையாது,  புகை கிடையாது... இப்படி பல கிடையாதுகள்...மேலும் தேவைப்படும் காற்றை நமது வீட்டிலே அடைத்து கொள்ளலாம்...



நமது நாட்டில் டாடா கார் நிறுவனம் இதற்காக உரிமையை வாங்கி உள்ளது, விலையும் 4 லட்சத்தில்தான் இருக்குமாம்.

இதை பாருங்கள்





Mar 2, 2010

திருட்டு விசிடி

திருட்டு விசிடி விற்பவர் பிடிபட்டார், ஓடி பிடித்தோம் வலை வீசி பிடித்தோம் என தினந்தோறும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளும் அதற்காக சில பத்தியை ஒதுக்கி இருக்கும் போல், மிகச்சரியாக அவ்விடத்தில் சிலபேர் போட்டோவை வெளியிடுவார்கள். விசிடி என்பதே தப்பு எந்த படத்தை இப்போது விசிடி அடக்க முடிகிறது? டிவிடி, புளுரேய் என்று முன்னேறிக் கொண்டிறிக்கிறார்கள். இன்னும் விசிடி? ஹும்ம்ம்...




சரி, விற்பவர் பிடிபட்டார், விற்பவர் பிடிபட்டார்... என்பவர்கள், இதையும் அவர்கள் வேறிடத்திலுருந்துதானே வாங்கி கொண்டுவந்திருக்க வேண்டும் அந்த தயாரிப்பாளர்(?) என்ன ஆனார், அவரை பற்றி எதற்கு எந்த நியுஸ் இல்லை??? திருட்டு விசிடி விற்பவர்கள் உண்மையில் மிகவும் பாவம், ஒரு டிவிடி விற்றால் அதிகபட்சம் 10 ருபாய் கிடைக்குமா? 10 ருபாய்க்கு ஆசைப்படுபவற்களுக்கு குண்டர்சட்டம் எல்லாம் பாயுது... இவைகள் சாதாரண டிவிடி விற்பவர்களுக்கே பாயவேண்டுமா... நம்ம நாட்டுலதான் சட்டத்தை மிகவும் திறன் பட பயன்படுத்துகிறார்கள்.



நான் சொல்ல வந்ததே வேற மேட்டரு... அதாவது ஏதாவது ஒரு புதிய தொழில்நுட்பம் வரும் பொழுது அதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... இல்ல, மாட்டேன், என்னால் முடியாதுன்னு சொன்னா அந்த தொழில்நுட்பம் நம்மை சீண்டித்தான் செல்லும். தொழில்நுட்பம் என்பது சுனாமி மாதிரி அப்படியே அடிச்சு தூக்கிபோட்டு போய்கிட்டே இருக்கும்...  இப்ப எல்லாம் சின்ன மொபைல் போனில் 10 MP கேமரா வந்துடுச்சு... ரொம்ப ரொம்ப ஈஸியா படம் எடுத்து போய்கிட்டே இருக்கலாம். படம் எடுக்குறது மட்டும் இல்லை, அதை ஆன்லைனில் வெளியிடுவதும் மிக மிக எளிதான காரியம்.  டிவிடி தொழில்நுட்பத்தை கண்டிப்பாக திரைத்துறையினர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.


ஒரு படத்தை இருவர் பார்க்க சென்றால் குறைந்தது 350 - 500 ருபாய் ஆகும்... டிக்கட் விலை குறைந்தது 80 முதல் 150 வரை இது கவுண்டரில் வாங்கினால்தான் பிளாக்கில் வாங்கினால் இரண்டுமடங்கு விலை, வெளியே 22 ருபாய்க்கு விற்கும் கோக்கோ பெப்சியோ 50 ருபாய்க்குமேல். அதையெல்லாம் விட 6 ருபாய்க்கு வாங்கும் சமோசா குறைந்தது 20 ருபாய் முதல் 30 ருபாய் வரை... இப்படி கொள்ளை மேல் கொள்ளை, இவற்றை சரி செய்வதற்கு எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர்களோ,  நடிகர்களோ முன்வரவில்லை... திருட்டு விசிடி திருட்டு விசிடி என்று ஆவூன்னா முதல்வரை பார்க்க போய் விடுகிறார்கள், என்ன ஒரு பிஸியான வேலை இருந்தாலும் முதல்வர் திரைத்துறையினறை பார்க்க மட்டும் தவறுவதில்லை. குண்டர்சட்டமும் பாஞ்சுக்கிட்டேதான் இருக்கு, ஏதாவது தடுக்க முடிந்ததா???

கண்டிப்பா முடியாது...  ஒரு படம் வெளியிடும் போதே அதன் டிவிடி பதிப்பையும் வெளியிட்டால் ஓரளவிற்கு இதை தடுக்கலாம். விலையையும் ஓரளவிற்கு நியாயமாக வைத்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது, தியேட்டரில் படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அங்குதான் பார்பார்கள். திருட்டு விசிடியும் ஒழியும்.

Sep 15, 2009

உங்கள் பிலாக்கை பிரபலமாக்க

பிரபலமாக்கனுமா?

வழி #1 
முடிந்த அளவு அனைத்து தமிழ் திரட்டிகளிலும் உங்களின் பதிவு வெளியுடுமாறு செய்யவும், அதாவது தமிழ்மணம், தமிழ்ஸ்... இப்படி.

வழி #2 
நீங்கள் வெளியிடுவது அனைத்து மக்களுக்கு போய் சேர சர்ச் இஞ்சினின் உதவியும் வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது தேவை என்றால் கூகுள் வெப்சைட்டில் சென்று தேடுகிறோம், அதே போல்  உங்களது பதிவு கூகுள் சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், கூகுள் மட்டும் அல்ல பல சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், சில மாற்றம் செய்ய வேண்டும்.  பிலாக்ஸ்பாட் இயல்பாகவே இவ்வசதியை மறைத்து வைத்துள்ளது.

அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு
Dashboard -&gt; Layout -&gt; Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து. 









இப்படத்தில் இருக்கும் 'nofollow' என்பதை 'follow' என்று மாத்திவிடவும். பிறகு சேவ் செய்து விடவும்.


வழி #3
முதலில் கூகுள் அனலையிக்ஸ் என்ன என்று பார்த்து விடுவோம். நீங்கள் சொந்தமாக பிளாக் அல்லது வலை வைத்திள்ளீர்களா?   அவ்வலைக்கு வருகை தரும் பார்வையாளர்களின் சாரசரி பற்றி அறிய நினைக்கிறீர்களா?  நாம் இதற்காக மற்ற நிறுவனம் தயாரித்தவகைலையே உபயோகப்படுத்துகிறோம். இப்போது கூகுள் முற்றிலுமாக இலவசமாக இதை தருகிறது. 

இதை உபயோகப்படுத்துவதினால் 
1. கூகுள் SEO  நம்மை இனைத்து கொள்கிறது.
2. நமக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும்
3. வருகைதருபவர்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளளாம்
4. வருகைதருபவர்கள் எண்ணிக்கையும் பிறகு அவர்களால் படிக்கப்பட்ட பதிவும் எவை எவை என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
5. தேதி வாரியாக அறிந்து கொள்ளலாம்.
இன்னும் பலவேறு பலன்கள் உண்டு.

இதை நடைமுறை படுத்த

1. http://www.google.com/analytics/ உங்களை பற்றி பதிவு செய்யுங்கள்

கீழ்வரும் படங்களில் உள்ளது போல் தொடர்ந்து செய்யவும்












முதலில் பதிவு









உங்கள் தளத்னைப் பற்றிய தகவல்களை தரவும்.









உங்களை பற்றிய தகவல்களை தரவும்.



"Yes, Agree" என்ற டிக் மார்க்கை டிக் செய்து விட்டு "Create New Account" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

சரியான முறையில் உங்கள் கணக்கு பதிவாகிவிட்டால்







இப்படி ட்ராக்கிங் பேஜ் கமிக்கபடும்.

இதுதான் மிகவும் முக்கியம்.

இதில் உள்ள கோட் காப்பி செய்து

உங்களது பதிவில் போடவேண்டும்.





அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு

Dashboard -&gt; Layout -&gt; Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து.






என்று இருப்பதை தேடி அதற்கு முன்பு அக்கோட போடவேண்டும்.






 






பிறகு சேவ் செய்து விடுங்கள்.

உஸ் அப்பாட... அவ்வளவுதான் முடிந்தது.

பிறகு நீங்களும் சொல்லலாம் "நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்" :D

நீங்க விரைவில் மிகவும் பிரபலமடைய வாழ்த்துக்கள்.



கடைசியா ஒன்னு...:  பிலாக்கை பிரபலமாடைய வைக்க,  அடிக்கடி பதிவிடுதலும், பின்னூட்டத்துக்கு பதிலளித்தலும் முக்கியம். ரெம்ப பெரிய எழுத்து திறமைலாம் தேவையே இல்லை. அட, எந்த திறமையும் தேவையே இல்லை. பல பேரு இப்படிதானே இங்கே குப்பை கொட்டுறாங்க.


கட்ட கடைசியா இன்னும் ஒன்னு...: உங்களின் புரோபைலின் பெயர் பெண்பாலில் வைத்து இருந்தால்... ஹிட்டோ ஹிட்டுதான்.