Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts

Apr 14, 2012

இலவசக் கல்வி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த செய்தியை எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, எதுவும் பரபரப்போ அல்லது நடிகை பற்றிய நிகழ்ச்சியே என்று யாரும் கண்டுகொள்ளாமல் கூட போய்விடலாம். பொதுவா இப்படிதானே நடக்குது.

அதாவது உச்சநீதிமன்றம் மிகவும் வரவேற்க்க கூடிய தீர்ப்பை கூறி இருக்கிறது, ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு, 

தட்ஸ்தமிழில் வந்த செய்தியை பாருங்கள்.

http://tamil.oneindia.in/news/2012/04/13/india-sc-stamp-on-right-education-poor-students-to-study-free-aid0174.html

கல்வி என்பது மாபெரும் வியாபரமாக போய்விட்ட நமது நாட்டில், கல்வி என்பது இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பாடி ஏற்படும்? 1000 ருபாய் முதல் போட்டவர்கள் 100 ருபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் கல்வி வியாபரத்திலே முதலே போடாமல் லாபம் மட்டும்தானே, லாபத்தில் குறை ஏற்பட்டால் விடுவார்களா?



என்ன மனது இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தர முடியாது என்று நீதிமன்றம் சென்றிருப்பார்கள். அதுவும் 25 சதவீதம்... மீதி 75 சதவீதம் தாரளமாக கொள்ளை அடிக்கலாமே, யார் தட்டி கேட்க முடியும், அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது.  ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது, இதை பற்றி தனியே தொடர் கட்டுரையே எழுத் முடியும். பிறந்தவுடனே ஸ்கூலில் சேர்க்கிற அவலம் நமது நாட்டில்தான் உள்ளது, ஏன்னா அப்பத்தான் நல்லா படிக்க முடியுமாம், ஆமாம் அப்படியே எல்லாரும் விஞ்ஞானிகளை உருவாக்கிறார்கள் பாருங்கள், நினைக்க நினைக்க மிகவும் எரிச்சாலத்தான் இருக்கு...

என்னுடைய எண்ணம் எல்லாம், அனைவருக்கும் சமமான இலவச கல்வியை கொடுக்க வேண்டும், ஏழை, நடுத்தர வகுப்பு, பணக்காரன் என்ற பாகுபாடு கல்வியில் இருக்கவே கூடாது,  எல்லாரும் சமம் என்ற நிலை கல்வியில் இருந்துதான் வரவேண்டும். அரசாங்கத்தின் கேவலமான நிலைப்பாடால், கொள்ளை அடிப்பவர்கள்தான் அதிகமாகி கொண்டே செல்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்க்க கூடியது.

Mar 8, 2010

மகளீர் தினமும் 33% இடஒதுக்கீடும்

இன்று மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யபடும் மசோதாவில் ஒன்று, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகும். ஆதரளிப்பவர்கள் அதிகம் என்பதால் இந்த இடஒதிக்கீடு கண்டிப்பக நிறைவேறிவிடும்.

காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட், திமுக, அதிமுக, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் இதை ஆதரிப்பதால் நிறைவேற மிகவும் வாய்ப்புகள் உள்ளன, எதிர்க்கும் கட்சிகள் மிகவும் குறைவு சிவசேனா, சாமஜ்வாடி, ராஸ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சாமஜ் போன்றவை, இவர்களின் பங்களிப்பு மக்களவையுளும் மாநிலங்களவையுளும் மிகவும் குறைவு, ஆதலால் மிகப்பெரிய சண்டை சச்சரவு இல்லாமலும், ஒரு பரபரப்பற்ற அல்லது வழக்கமான மசோதாவக இது நிறைவேறிவிடும்.




எனது கேள்வி எல்லாம், இந்த இடஒதுக்கீடு தேவைதான என்பதுதான்? ஏன் கொடுக்கவேண்டும் 33 சதவீத ஒதுக்கீடு? எதற்காக இந்த இட ஒதுக்கீடு? பொதுவாக இடஒதுக்கீட்டு ஆதரளிப்பவர்கள் கூறுவது, பின்தங்கி உள்ளவர்கள் முன்னேறுவதற்காக... காலங்காலமாக கூறுவது முன்னெறுவதற்காக என்றுதான், இந்த மசோதாவிலும் அதே பல்லவிதான், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், நாட்டில் சரிபாதி பெண்கள்தான் ஆனால் 10% பெணகளுடைய ஆதிக்கம் இல்லை அரசியலில்... இப்படி சொல்லி புலம்புவார்கள்.



இன்று அரசியல் ஆகட்டும் வேறு பிரபலத் துறையாகட்டும் ஆண்களுக்கு மிகச்சமமாகவே பெண்கள் வந்து கொண்டிருக்கின்றனர், எந்த துறையில் இப்போது பெண்கள் இல்லை? எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டின் முதன் குடிமகள் ஒரு பெண்தானே. சோனியாவகட்டும், ஜெயலலிதாவகட்டும் எந்த இடஒதுக்கீட்டை பெற்று இந்த இடத்தை அடைந்தார்கள்? அரசியலில் மட்டும் அல்ல. நான் இதை எழுதுவதால் பெண்களுக்கு எதிரானவன் என்று எண்ணவேண்டாம், பொதுவாகவே இடஒதுக்கீடு என்பது நல்ல தகுதி உள்ளவனை ஒதுக்கிவிட்டு தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கபடுவதாகும், காலங்காலமாய் ஜாதியாலும் மதத்தாலும் பிரித்தவர்கள் இப்போது பால் முறையிலும் வந்துவிட்டார்கள்.

பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாய் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் நிலையும் வேண்டும், இப்போது அரசியலில் ஈடுபடுபவர்கள் அந்த அஞ்சா நெஞ்சு கொண்டவர்களாகவே வந்துள்ளார்கள்,  அவர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று வரவில்லை... அதாவது இடஒதுக்கீடு முறையை பெற்று வருபவர்களிடம் இந்த தகுதியை எதிர்பார்க்க முடியாது... பஞ்சாயத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவந்தார்கள், என்ன ஆயிற்று? ஜெயிப்பவர்கள் பெண்களாக இருக்கும், கையெழுத்து போடுவதற்காக பஞ்சாயத்து ஆபிஸ்க்கு வருபர்களாக உள்ளனர், அதே நிலமைதான் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஏற்படவேண்டுமா?

சரி, மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் தீமை என்ன??? அந்த பகுதியில் நல்லது செய்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தேர்தலில் போட்டியிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று நினைத்தால், அந்த தொகுதி பெண்களுக்கு உண்டான தொகுதி என்று அறிவிப்பு வந்தால், அவரால் கிடைக்க போகும் நன்மை இல்லாமல் போகலாம்.

மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் நன்மை என்ன??? பல அட்டூழியங்கள் செய்து வரும் ஒருவர், தமது தொகுதி பெண்களுக்கு என்று மாற்றியவுடன், தமது துனைவியை வெற்றிபெற (அதான் இப்ப காசு போதுமே) வைத்து, மேலும் அட்டூழியம் செய்யலாம்.

வாழ்க ஜனநாயகமும் இடஒதுக்கீடும்!

Feb 11, 2010

இட ஒதுக்கீடும் இடமில்லா ஒதுக்கீடும்

சமிபத்தில் ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது... இதற்காக பெரும் பிரச்சனை ஆந்திராவில் நடந்து கொண்டுள்ளது... தேவையில்லாத ஒன்று, அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களால் நமது நாடு இன்னும் இப்படியே இருக்கிறது.

எனது எண்ணம் எல்லாம்... இட ஒதுக்கீடே தேவையா என்பதை பற்றிதான், இது மதம் சார்ந்து சொல்ல வில்லை... மொத்தமாக நமது நாட்டில் மற்றவர்களுக்கு கொடுக்கபடும் இட ஒதுக்கீடு பற்றிதான்...

ஆரம்ப கல்வியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஒதுக்கீடு இறுதி வரை தொடந்தே கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் ஏழையாக இருந்தவர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் கிடைக்கபெறாத மக்களுக்கு கொடுக்கபட்டது இட ஒதுக்கீடு, பெற்றவர்கள் மிகவும் நன்றாய் இருக்க, மற்றவர்கள் இன்றும் இடமில்லாமல் அவதியுருகிறார்கள்.



ஏழை என்பது எல்லா ஜாதி மதத்திலும்தான் உள்ளது, ஏன் ஒருசிலருக்கு மட்டும் பாகுபாடு??? ஆரம்பத்தில் கொடுக்கபட்டது ஏதோ சரின்னால்லும், இன்னும் அதை தொடர்ந்து கொண்டிருப்பது என்ன நியாயம்? 60 வருங்களுக்கு முன்பிருந்த நிலமையா இன்றும் இருக்கிறது? மேலும் இந்த சலுகைகளை பெற்றவர்களே மேலும் மேலும் சலுகைக்காக முயல்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லை...

தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு கொடுப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடை நான் மனதலவில் ஒதுக்கியவன். இங்கு கொடுப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீடை யார் யாரெல்லாம் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள், கண்டிப்பாக அவ்வசதியை பெற்றவர்களே மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள், ஏனெனில் இது மனித இயல்பு.  தமிழ்நாட்டில் பிறந்து பிரபலமாக இருக்கும் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு மூலம் அந்த பலனை அடைந்திருப்பார்களா என்றால் கண்டிப்பா இருக்காது. 

நன்கு படிப்பவன் ஒரு பள்ளியில் சீட் கிடைக்காமல், ஒன்னுமே தெரியாமல் ஜஸ்ட் இட ஒதுக்கீடு மூலம் உள் வருபவர்கள் கடைசியில் என்ன பெருசா சாதிச்சிட போறாங்க? ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து மற்றவர்களை எரிச்சலா பேசுவதை தவிர?

அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், ஒருவருக்கு சில சலுகைகளும் மற்றவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காமல் செய்வதுமா நீதீ? இடமில்லா ஒதுக்கீடும் செய்வது ஏனோ?  அனைவரும் சமம், யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்று கூறும் அரசாங்கமே இப்படி இன்னும் இட ஒதுக்கீட்டை விட்டு வைத்திருப்பது கொடுமைதான், இட ஒதுக்கீடு மூலம் என்ன சரியாக சாதிக்க முடிந்தது? ஏழைகள் எண்ணிக்கையை குறைக்க முடிந்ததா? சரி ஓரளவுக்கு நன்மை இருந்தாலும், இன்னும் இது தேவையா? நமது நாட்டில் இரவு உணவு இல்லாமல் உறங்குபவர்கள் எவ்வளவோ பேர் இருக்க... ரோட்டிலும் காட்டிலும் வசிப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.. உண்மையான ஒதுக்கீடு என்றால் இவர்களுக்கு செய்யவேண்டும்... மீண்டும் மீண்டும் கொடுத்தவர்களுக்கே கொடுப்போம் என்றால் என்ன தீர்வு?

யாருக்கும் எதிலும் இட ஒதுக்கீடே தேவையில்லை, ஜாதிக்கு மதத்திற்கு என்று அனைத்து இட ஒதுக்கீட்டையும் தடைசெய்யவேண்டும்.
நன்கு படிப்பவர்களுக்கு மட்டும் கல்வியும், நன்கு வேலை பார்க்க தெரிந்தவர்களுக்கு மட்டும் வேலையும் என்று மாறவேண்டும்.