Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Nov 17, 2009

ஏழாவது அறிவு

அவளுடைய சரீரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.

பார்ப்பவர்கள் கண்களுக்கு அவள் தெரியவில்லை.

ஒரு சில வினாடிகளுக்கு முன்பு பார்த்தவளை இப்போது காணவில்லை.

அரங்கதிலிருந்த அனைவரும் அரங்கம் அதிர கைதட்டினார்கள். ஒருவருக்கொருவர் ஒருவிதமான சந்தோசத்தில் பார்த்துக்கொண்டனர். ஆச்சரியத்தில் சிலபேர் வாய் மூடாமல் திறந்தே இருந்தன.

பலபேர்களுக்கு நடப்பது நிஜமா இல்லை கனவா என்றே தோன்றியது.

நானும் அந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.

நான் இதுவரை இவையெல்லாம் மூட நம்பிக்கை என்றே சொல்லிவந்தேன், மற்றவர்கள் சொல்லும்போதோ அவற்றை கேலிசெய்து  முற்றிலுமாக மறுத்தவன் நான். இவை நடக்காது நடக்கவே நடக்காது என்று இறுமாப்புடன் அலைந்தவன்,  கடவுள் மேல் நம்பிக்கையிம் கிடையாது வாழ்க்கையில் எதிர்பார்ப்பும் இல்லாமல் அதனால் விதிமேல் பழி சொல்லாமல் இருந்தவன. இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து எனது பலநாள் கொள்கைகளையும்  கேள்விக்கு உள்ளாக்கியது. நேற்று வரை பகுத்தறிவாளன்  என்று என்னை அழைந்தவர்கள், இதை கேள்வி பட்டால் என்ன கூறுவார்கள். இதை எப்படி பகுத்தறிய முடியும்??? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள் ஓட நடந்து கொண்டிருந்தவகைளை பார்த்து கொண்டேருந்தேன்.
சே, இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்க கூடாது. ஒருபக்கம் மனது கூறினாலும் நடந்தவை நன்மைக்கே என்று சமாதனப்படுத்தி கொண்டேன்.

அவளை சந்தித்ததுதான் மிகப்பெரிய தவறு.

சந்தித்த நினைப்பு வந்தது........

எனது வீட்டிற்கு போகும் போதுதான் அவளை பார்த்தேன், நல்ல அழகியாக இருந்தாள்,  ரோட்டில் செல்பவர்கள் அதிகமானோர் அவளைதான் பார்த்துகொண்டு சென்றனர்.  ஏதோ சேல்ஸ் கேர்ள் போல்,  ஒரு வித்தியாசமான் உடை உடுத்திருந்தால்.  அதே உடையில் மேலும் சில பேர்கள் நின்றார்கள். சரி என்னதான் பேசுகிறாள் என்று பார்க்கலாம் என கூட்டத்தின் உள் சென்றேன்.

அதிகமா  பேசிகிறவர்களுக்கு குரல் மாறிடுமே அப்படி இருந்தது அவளின் குரல், ஒருமாதிரி ரஃப்பா, இவ்வளவு அழகான பொண்ணுக்கு இப்படி ஒரு வாய்ஸா? கொடுமை...

என்னதான் பேசுகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

"இறப்பு என்றால் என்ன? மரணம் என்பது நமது உடல் அழிவதுதான்,  உடலுக்குதான் மரணம், உள்ளத்திற்கு அல்ல, நமது ஆத்மா என்றும் அழியாதது மரணம்  என்று நாம் நினைப்பது,  மற்றவர்களின் கண்களுக்கு  தோன்றாய் இருப்பதைதான்.  மற்றவர்களின் கண்களுக்கு ஒரு பிம்பத்தை நமது உடல் என்று  காமித்து  வைத்துள்ளோம்,  அது அழிவதுதான் மரணம் என்று எண்ணப்படுகிறது.  நமக்கு ஆறறிவு இருப்பது தெரியும் தொடுதல், சுவையறிதல், நுகர்தல்,  பார்வை, கேட்பது, பகுத்தறிவு இவைதான் காலம் காலமாக மனிதனுக்கு இருக்கும் அறிவுகள் என்று நாம் நினைப்பது. நாம் நினைப்பது போல் நமக்கு ஆறறிவு மட்டும் இல்லை, அதாவது பகுத்தறிவு கடைசி அறிவு கிடையாது, அதற்கு மேலும் ஏழாவது அறிவு உள்ளது.  பகுத்தறிவு மனிதனுக்கு கடைசி  என்று சொன்னால்தான் மேலும் இதனை பற்றி தேடமாட்டான்.  நமது அறிவால் பல அற்புதங்களை செய்யலாம். சிறந்த பயிற்சி எடுத்து  கொண்டால் நினைத்த நேரத்தில் இந்த உடலை தேவையற்றதாக ஆக்கிவிடலாம்.

நமது எண்ணங்களே ஆன்மா வாழ்ந்து வருகிறது. ஆன்மா என்பது அழியாது மட்டும் அல்ல,  என்றென்றும் நமது எண்ணங்களாக தோன்றுவவையே.

நாங்கள் இங்கு வந்ததுக்கு காரணமே ஏழாவது அறிவை உங்களுக்கு நிரூபிக்கதான். மனிதன் ஏதோதோ கண்டுபுடிக்கிறான், ஆனால் அவனுள் உள் ஒளிந்திருக்கும் சக்தியை மட்டும் உணராதவனாக இருக்கிறான். தூர தொலையில் இருக்கும் இருவர் பேசிக் கொள்ள செல்போன் தேவை இல்லை, மனிதனின் ஏழாவது அறிவை பயன்படுத்தி ஆழ்சக்தி மூலம் பேசிக்கொள்வது மட்டும் அல்ல நினைத்த நேரத்திலே அவர்களிடம் பார்த்தும் கொள்ளலாம். இப்படி பல பல நன்மைகளை உள்ளது.

இதை பற்றி விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறோம். 

அறிந்து கொள்ளுங்கள் ஏழாவது அறிவு"


 
அவ பேச பேச எனக்கு சிரிப்பு சிரிப்பாதான் வந்தது.  ஏழாவது அறிவாம் எட்டவது அறிவாம்... கேக்குறவன் கேணையனா இருந்தா என்ன வேன்னா சொல்லுவாங்க... சிரிச்சுகிட்டே நகர்தேன்... மனசுக்குள் ஒரு சின்ன ஆசை அப்படி என்னத்தான் சொல்லுவாங்க செய்வாங்க, போய்தான் பாக்கலாமே...

அவர்கள் அட்ரஸ் வாங்கி கொண்டு, அடுத்த நாள் குறிப்பிட்ட அரங்கத்திற்கு சென்றேன். மிக அதிகமானோர் வந்திருந்தனர். எனக்கு கடைசியில் நிற்பதற்கே இடம் கிடைத்தது.

அவளும் மேடையில் இருந்தாள்.

ஒரு பெரியவர் மிகவும் சன்னமாக உரையாற்றி கொண்டிருந்தார். கூட்டம் அமைதியாக இருந்ததினால் தெளிவாக கேட்டது.

"நமது மனத்தின் சக்தியை உங்கள் முன்பு நாங்கள் காட்ட போகிறோம், இதற்காக பலநாட்கள் முயற்சி செய்து இவற்றை கண்டுகொண்டுள்ளோம், இவை அழிய கூடாது, மக்களுக்கு போய் சேரவேண்டும். அதனால் இதை இலவசமாக விருப்பமுள்ள மக்களுக்கு போதிக்கிறோம்.




நாம் நினைத்த அடைய பல வழிகளை உபயோக படுத்துகிறோம், உதாரனம் கதவை அடைக்க, நமது எண்ணத்தின மூலம் அதனை செயல் படுத்தலாம்.  ஒரு மிருகத்தை கூட நமது சக்தியின் மூலம் கட்டு படுத்தலாம்.

நமது எண்ணம் மிகவும் சக்திவாய்ந்தது.

இப்போதுதான் விஞ்ஞானம் எண்ணம்தான் மிகவும் வேகமானது என்றும் கண்டுபிடித்துள்ளனர். நமது நாட்டில் இதை முன்பே கண்டு பிடித்திருந்தார்கள்.  எண்ணம்தான் எங்கும் விரைவாக போக கூடியது. அந்த எண்ணமே சக்தியாக ஏழாவது அறிவாக மாற்றம் அடையும்.

முதலில், இவள் (அப்பெண்ணை நோக்கி) அவள் விருப்பபட்ட இடத்திற்கு செல்லபோகிறாள், அவள் போக விரும்பிய இடம் மும்பை, CST ரயில் நிலையம் ஆகும். அவள் இங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைவாள் மும்பை, CSTயில் இங்கிருப்பவர்களின் நண்பர்கள் இருந்தால் அவளை அங்கு சரிபார்க்க சொல்லவும். இவள் ஏழாவது அறிவை உபயோகபடுத்தி தனது உடல் முதற்கொண்டு மாற்ற வல்லமை படைத்தவளாயிற்றாள்."


அவர் கூறியவுடன், அப்பெண் சம்மானமிட்டு அமர்ந்தாள்,  மேஜிக் செய்பவர்கள் ஏதாவது டப்பாவில் அடைத்து செய்வார்கள் அப்படி இல்லாமல் வெளிப்படையான இடத்திலே அமர்ந்தாள்... சிறிது நேரத்திலே மறைய ஆரம்பித்தாள்......


டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........


நல்ல தூக்கம், மணி 8 ஆயிடிச்சா? இப்படிலாம் கனவு வருமா?


பிரஸ் செய்துவிட்டு டீ குடிக்க போனேன்.


தினகரன் போஸ்டரில் கனவில் வந்த பெரியவர் போட்டோ


"பெண்ணை கொலை செய்த குற்றதிற்காக ஏழாவது அறிவு என்ற ஆன்மிக மையம் நடத்தி வந்த பெரியவர் கைது"

Oct 19, 2009

புது உயிரினம்

ஆராய்ச்சி நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.






பல்வேறு ரோபோக்கள் பழுதடைந்த ரோபோக்கள் என ரோபோக்கள் மயமாக இருந்தது.

இங்கு வேலை செய்யும் ரோபோக்கள் விஞ்ஞானிகள் என அழைக்கபட்டன.

பல்வேறு கிரகங்கள் மற்றும் சில பால்வெளிகளில் இருந்து ஜிவராசிகளை கண்டுபிடிக்கும் வேலையை சில ரோபோக்கள் செய்து கொண்டிருந்தன.

இப்படி ரோபோக்களின் தம்தம் வேலையை பிரித்து கொண்டுள்ளது.

அனைத்து ரோபோக்களும்  அதி வேகமாக அங்கும் இங்கும் என நகர்ந்து கொண்டிருந்தன,

பரபரப்பாக அனைத்து செயல்களையும் முடித்து கொண்டிருந்தன.

பலகாலமாக அவர்கள் தேடி கிடைத்த ஒரு கரப்பான்பூச்சியை குளோனிங் முறையில் அதிககமா உருவக்கி பெரிதுபடுத்தும் முறையில் மிகபிரமண்டமாக பெரிது படுத்தி அதனை வைத்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தன.

அதன் இயங்கு முறையை தெரிந்து கொள்வதற்காக அதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன.

அனைத்து ரோபோக்களும் சிந்திக்கும் திறனுடன் தயாரிக்க பட்டாலும், அவைகளின் இயங்கு முறைகள் அனைத்தும் ஒன்று போல் இருந்தன.

ஜீவராசிகளை தேடி வென்றிருந்த ஒரு விண்கலம் உள்ளே நுழைந்தது...

அதனின் கேப்டன் மிகவும் படபடப்பாக காணப்பட்டார், பரபரப்புடன் அனைத்து ரோபோக்களும் காந்தவெளி மூலம் கட்டளை இட்டார். அனைவருக்கும் கேட்கும் விதமா பேச ஆரம்பித்தார்... நாம் பல காலமாக ஜிவராசிகளை தேடி கொண்டிருக்கிறோம்... நமது இயங்கு முறை மாற்றுவதற்கும் இதனை உபோயகபடுத்துகிறோம். இப்பொழுதுதான் ஒரு விசித்திரமான உயிரினம் மாட்டி உள்ளது. அதனை உங்கள் முன்பு காமிப்பதில் சந்தோசம்.

கேப்டன் ரோபோ சொல்லி முடித்தவுடன்... சில ரோபோக்கள். ஒரு மனிதனை தூக்கிவந்தார்கள்.

Oct 16, 2009

தீபாவளியாம் தீபாவளி

 சே... எரிச்சல் எரிச்சலா வருது... இப்படியா கொண்டாடுவாங்க?


எனக்கு வந்த எரிச்சலுக்கு அப்படியே.....


என்மேலயே எனக்கு கோவம் கோவமா வருது, பின்ன என்ன திபாவளி அதுவுமா ஊருக்கு போகலாம்னா எல்லா பஸ்சும் புஃல் அட ரயில்ல போகலாம்னா மூணு மாசத்துக்கு முன்னாடியே எல்லா புக்கிங்கும் முடிச்சுடுச்சு...


என்ன செய்றது? எனக்கு வந்த கடுப்புல பஸ்சுல போறவங்க வாறவுங்க எல்லாரையும் மனசுக்குள்ளே திட்டினேன். பிச்சை கேட்டு வந்த கிழடியை கூட விரட்டினேன்.  எனக்கு என்னோட கோவத்த யார்மேலாவது காமிக்கனும்.  அரசாங்கம் மேல கோவம் திரும்புச்சு, சே என்ன அரசாங்கம் நடத்துறாங்க, ஒரு பண்டிகை நாளும் அதுவுமா அதிகமா பஸ் விட்டாதான் என்ன... இப்படி இருப்பாங்க, இனிமே இவன்களுக்கு ஓட்டே போடக்குடாது அப்படின்னு மனசுக்குள்ளே சபிச்சேன். ஸ்டேட் கவர்மெண்டு இப்ப்டின்ன சென்ட்ரலாவது கூட ரயில் விட்டிருக்கலாம்.


அம்மா சொன்னது மனசுக்குள்ளே கேட்டுகிட்டே இருந்துச்சு... "டேய் அருண் எப்படியும் திபாவளிக்கு 2 நாளைக்கு முன்னாடி வந்துடுடா". அம்மா எதிர்பாத்துகிட்டே இருப்பாங்க...


இதுவரைக்கும், அருண் எனக்கு அது வாங்கி கொடுடா இது வாங்கி கொடுடான்னு எங்க அம்மா என்கிட்ட கேட்டதே இல்லை... என்னை அவ்வளவு பாசமா பாத்துகிட்டாங்க, நான் பசின்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுகிட்டதே சென்னைக்கு வேலை தேடி வந்த பிறகுதான், எங்க அம்மவுடைய அருமை நான் அவங்கள் விட்டு பிரிந்து வேலை தேடி வந்தவுடந்தான் அதிகாதிகமாக உணர்ந்தேன், நான் கொண்டாடிய திபாவளியெல்லாம் எங்க அம்மாவுடன்தான், ஒவ்வொரு வருசமும் அவங்க சேலை எடுக்குறாங்களோ இல்லையோ எனக்கு கண்டிப்பா சட்டை பேண்ட் இருக்கும். இந்த தடவை அது நடக்காதோன்னு நினைக்கும் போதே கண்ணுல இருந்து இரண்டு துளி கண்ணீர் வந்தது.


வாழ்க்கையில முதல் தடவையா ஆசை ஆசையா அம்மாவுக்கு சேலை எடுத்தேன், தங்கச்சிக்கு சுடிதாரும் அப்பவுக்கு வேஷ்ட்டி சர்ட் வாங்கி ரெடியா வச்சுகிட்டு கோயம்பேடு பஸ்டாண்டு வந்தவன்தான் கடைசியில நொந்து போய் நின்னுகிட்டு இருந்தேன்...


சரி பிரைவேட் பஸ்சிலாவது போவோம், அப்படின்னு நினைச்சுகிட்டு அங்கு போனேன்... அங்கும் சரியான கூட்டம்.  எப்படியாவது ஒரு சீட்டு கிடைச்சுடனும்...  சார் எங்க சார் போகனும்? ஒரு புரோக்கர் கேட்டார் மதுரைக்கு போகனும், 700 ஆகும் சார், என்னங்க இது மகா அநியாயமாக இருக்கு? கவர்மெண்டு பஸ்லே 180 ருபாய்தானே என்று என்னோட ஆதங்கத்த சொன்னேன், அப்படியா நீ கவர்மெண்டு பஸ்சிலே போ போ என்று விரட்டினார்.


என்ன செய்றதுன்னு யோசிச்சிக்கிட்டே போய் சில மதுரைன்னு போர்டு போட்டிருந்த இடங்கள் கேட்டேன்... எல்லாரும் ஒரே மாதிரி எல்லாம் புல்லாயிடுச்சுன்னு ஒரே பதிலை சொன்னாங்க.


சோர்வுடன், திரும்பவும் அரசாங்க பஸ் நிலையத்திற்கே வந்தேன், அப்போதுதான் மதுரைன்னு போர்டு போட்டுக்கிட்டு ஒரு பஸ் வந்துச்சு... கலைத்து விட்ட தேனிக்கள் எதையாவது கொட்டுறதுக்கு போறது மாதிரி பஸ்சை நோக்கி மக்கள் கூட்டம் ஒடியது... இதவிட்ட போகவே முடியாது எப்படியாவது இடம் புடுச்சுடனும்னு ஓஓஓஒடிப் போயி பஸ்சுக்குள்ளே ஏறி உக்காந்துட்டேன்...

உஸ் அப்பாடி.


மக்கள் கூட்டத்தால் அப்படியே நசுங்கி கொண்டு பஸ் கிளம்பியது...


இனி கவலை இல்லை, எப்படி ஊர் போய் சேர்ந்திடலாம்...


நல்லா சாய்ந்து தூங்க ஆரம்பித்தேன்,  திடீர்ன்னு டம்னு ஒரு சத்தம், எல்லாரும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிட்டாங்க, டிரைவரும் பஸ்சை ஒரு ஒரமா நிப்பட்டுனாரு.


டரைவர் கீழே இறக்கி ரெம்ப நேரம் பாத்துட்டு டயர் ராடு ஒடஞ்சுடுச்சு, பஸ் இனி போகாது, எல்லாரும் இறங்கி வேற பஸ்சுல போங்க.

அடக்கடவுளே இப்படி ஒரு சோதனையா? நான் திபாவளிக்கு ஊர் போக முடியாது போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு கூட்டத்தோட கூட்டமா நின்னுகிட்டு இருந்தேன், 220 KM மதுரை அப்படின்னு போர்டு இருந்துச்சு, சரி கொஞ்சம் தூரம்தான் ஏது வந்தாலும் ஏறி போய்டனும்னு தீர்மானம் போட்டுகிட்டு இருந்தேன்.

நாங்கள் வருகிற அனைத்து வண்டிகளையும் நிப்பாடினோம், பல பேர் நிறுத்த வில்லை, சில பேர் நிறுத்தி குடும்பமாய் உள்ளவர்களை மட்டும் ஏற்றி கொண்டு சென்று விட்டனர்.

இப்படியே கூட்டம்லாம் குறைந்துவிட்டது... சே நாம மட்டும் மாட்டிக்கிட்டோம், ஏதாவது  பஸ்சு, லாரி வராதான்னு  வேண்ட ஆரம்பித்தேன்... நேரம் கடந்து கொண்டே சென்றது. இரவு 1 மணி ஆய்டுச்சு... எல்லா பஸ்சும் புல்லாவே கடந்தது..  

ரெம்ப நேரமா ஒன்னுமே வரலை...
கொஞ்ச நேரத்தில்... தூரத்தில் ஏதோ ஒரு வண்டி

பழனி ஆண்டவர் அப்படின்னு எழுதிருந்த ஒரு டாடா சுமோ வந்தது. நானும் தைரியமா கையை காமிச்சு நிப்பாட்டினேன். உள்ள ஒரு ட்ரைவரும் கூட ஒரு ஆளும் இருந்தனர், எப்படியும் சீட்டு கிடைச்சும் ஊர் போயிடலாம் அப்படிங்கிற குசில சென்னையில் இருந்து வந்தது பஸ் கெட்டு போனது எல்லாம் சொல்லி என்ன மதுரையில  விட்டட சொல்லி கொஞ்சுற நிலைமையில் சொன்னேன்... எல்லாம் கேட்டுகிட்டு இல்ல தம்பி நாங்க வேற ஒரு சோலியா போறோம்... அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான் அந்த பா... சே வந்த வண்டியும் போய்டுச்சே... வருகிற பஸ் எல்லாம் புல் என்ன செய்வது.. ஒரே டென்சன்ல ரோட்டுல நின்னுகிட்டு இருந்தேன்...

போச்சு போச்சு, இந்த தீபாவளிய அம்மாவோட கொண்டா முடியாது போல இருக்கேன்னு சோர்ந்து போய் ஒரு ஓரமா இருந்துட்டேன்.

மேரி மாதான்னு போர்டு போட்ட ஒரு லாரி வந்துச்சு, நானும் நம்பிக்கை இல்லமாத்தான் நிப்பட்டினேன், ஏற்கனவே பல லாரி நிப்பாடி ஒருத்தரும் ஏற்றவில்லை, சரி இங்காவது இடம் கிடைக்காதான்னு ஒரு நப்பாசைல நிப்பாட்டினேன். டிரைவரும் நிப்பாட்டினாரு,  சார் இப்படி சென்னைல இருந்து வந்தேன், மதுரை போகனும் அங்க இறக்கிவிட்டிருங்களான்னு கேட்ட உடனே சரிதம்பி வாங்க, நாங்களும் மதுரைதான் போறோம்.

ஒரே ஆனந்த்மாய் இருந்துச்சு.

ஏறி அமர்ந்தேன்.

நல்ல வேகம்...
அப்பாடி மதுரையிம் வந்துடுச்சு... ஒரே சந்தோசம், 100 ருபாய் காசு கொடுத்தேன் டிரைவரிடம் அதுக்கு அவரு காசுல்லாம் வேனாம் தம்பி பட்டாசு வச்சுரிந்திங்கன்னா கொஞ்சம் கொடுத்திட்டு போங்க வீட்டுல பிள்ளைகளுக்கு கொடுக்கனும்,  உடனே நான் வைய்திருந்த பேக்கில் இருந்து கொஞ்சம் பட்டாசு எடுத்து கொடுத்தேன். சந்தோசமா வாங்கி கொண்டார், சரின்னே ரெம்ப தங்ஸ், உங்க பேரு என்னன்னே கேட்டேன் பாஷா  என்றார்.


-----------------------------------





அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Oct 1, 2009

எதிர்கால உலகம்

இப்போது உள்ள உலகத்தை இரண்டாக பிரிக்கலாம்.


கமு கபி (கணிணி ஆட்சிக்கு முன் கணிணி ஆட்சிக்கு பின்)

நாங்கள் இருப்பது கபி 69 வருடம்.






ஏனென்றால் இப்போது அனைத்தையும் நிர்வாகிப்பது கணிணிதான்.

நாங்கள் இப்போது வசிப்பது பூமி கிரகத்தில் அருகில் இருக்கும் InD532 கிரகம், இதை எல்லாம் செயற்கை முறையில் கணிணியால் உருவாக்க பட்டவை. பூமியில் மனிதர்கள் வசிப்பதுக்கும் இடம் இல்லாததால், இவ்வாறு கணிணியே இடம் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.
 எங்கள் InD532 கிரகத்தை பராமரிப்பது CCx93BB என்கிற கணிணிதான் அதுதான் எங்களின் தலைவன்.


இந்த சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து CCxxxxx ரக கணிணிகள் மட்டும் அனைத்தையும் பராமரித்து பாதுகாப்பது பூமியில் உள்ள Axhd எனும் கணிணியாகும், அதுதான் உலகத்தின் தலைவன்.

பிறப்பும் இறப்பும் கணிணி வசம் தான்.


எங்களை உருவாக்கியதும் கணிணிதான், அழிப்பதும் அதுவே.


மனிதர்கள் எந்த இடங்களில் தேவை என்பதை கணிணி முடிவு செய்யும், பிறகு BIOTECH முறையில் அவர்களை 52 நிமிடம் 12 வினாடிகளில் உருவாக்கிவிடும்.

அனைவருக்கும் 500 மாதங்கள் மட்டுமே இங்கு வசிப்பிடம். பிறகு மனிதனின் உயர்கூறு செல்களை அழித்துவிட்டு அவர்களின் மூளை எடுத்து அதன் அனைத்து தகவல்களையும் ஓளியின் சேமிப்புகிடங்கில் வைத்து விட்டு பிறகு மூளையை flush செய்து விட்டு அடுத்து உருவாக்கும் மனிதர்களுக்கு வைத்து விடும்.


மனித இனத்தை இன்னும் அழிக்காமல் விட்டு வைத்திருக்க காரணம், மனிதனின் சுய சிந்திக்கும் திறன், முக்கியமா மனித மூளையின் இடது பக்கம், இந்த ஒருவிசயத்தை கணிணியால் இன்னும் அடைய முடிய வில்லை. எங்களை உபயோகித்து பல்வேறு செயல்களை செய்து வருகிறது.

மனிதர்களின் மூளையில் மிக பெரிய அளவிலான கணிணி ஒன்று பொருத்த பட்டு அது மனிதனின் பிம்பமாமாய் இருக்கும்.

இங்கு அனைவரும் அனைத்து விசயங்களிலும் கண்காணிக்கப்படுவர்.

யார் எங்கிருந்தாலும் கணிணி அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கொண்டே வரும், யாரும் தவறு செய்யவும் மாட்டார்கள், ஏன் என்றால் மனிதர்களுக்கு தவறு செய்யும் மூளையின் நியுட்ரான் செல்களை அழித்துவிட்டுதான் மனிதர்களின் உருவாக்கத்தை உறுதி செய்யும்.


கமு 250 வருடங்களில் மனிதர்களின் வாழ்ந்த வாழ்கை முறையை பற்றி படித்திருக்கிறேன். அப்போது ஆண், பெண் என்றும் ஜாதி மதம் என்றும் மொழி இனம், நாடு என்றும் பல்வேறு கூறுகளாக பிரிந்து இருந்ததை நினைத்து வியப்பாக இருக்கும், மேலும் மனிதர்களே மனிதர்களை உருவாக்குவார்கள் என்பதும் ஆணும் பெண்னும் சேர்ந்துதான் மனித இனம் உருவாகியது என்பதையும் எங்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.


அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்கைமுறை மிகவும் சிரமத்திற்கு உள்ளானது... ஒரு இடங்களில் இருந்து இன்னும் ஓர் இடங்களுக்கு தனது உடம்பின் மூலமா சென்றிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடிய விசயம்... நாங்கள் எங்களின் இயக்ககளை மற்றும் உடல் கூறுகளை மின்காந்தங்களாகா மாற்றி பயணம் செய்வோம். எங்களின் வேகம் நியுட்ரானின் வேகத்தை விடவும் வேகமானது.

புது பால்வெளியை  கண்டுபிடிக்கும் வேலை எனக்கு,  நானும் இப்போதுதான் வேலையை முடித்து வருகிறேன்.

வந்தவுடன்...


நான் இருக்கும் இடத்தில் Axhd கணிணி Virtual 4D முறையில் தோன்றி நான் மற்றும் அனைவர்களும் தனது பிம்பத்தையும் மக்கள் தொடர்புமையத்தை  கண்டிப்பாக தொடர்பு கொள்ளுமாறு ஆணையிட்டது.

ஏதாவது மிக முக்கியமான காரணத்தை தவிர Axhd எங்களை தொடர்பு கொள்ளாது.


இதற்கு முன்பு ஒருமுறைதான் இப்படி தொடர்பு கொண்டிருக்கிறது.


எல்லாரும் தொடர்பு கொண்டவுடன் Axhd பேச ஆரம்பித்தது. "கமு காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் இயற்கை விரோத போக்கினால் சூரியனின் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தது... மேலும் அது சூரியனுக்கு மிகவும் ஆபத்தாக மாறிவிட்டது... கடந்த பல வருங்களாகவே சூரியன் தனது செயல்பாட்டை இழந்து வருகிறது. நாமும் முடிந்த அளவு அதை தடுப்பதுக்கு முயற்சித்தோம், ஆனால் இப்போது சூரியன் முற்றிலுமாக செயல்..."


இப்படி Axhd பேசிக் கொண்டிருக்க போது... மிகப் பெரிய அதிர்வுடன், நாங்கள் எதையோ நோக்கி வேகமாக இழுக்கப்பட்டோம்...

Sep 9, 2009

சென்னை 2020

வாவ்வ்வ்வ்வ்வ்வ்....


வாவ், வாவ், இப்படி ஆரம்புச்ச ராஜுதான் வீடு வந்து சேர்கிற வாவ், வாவ்வ்வ்வ்வ்வ்வ் இவைகளை விடவே இல்லை.


ராஜு என்னோட பிரண்டுதான் இப்பதான் அமெரிக்கவிலிருந்து வாறான்.


அவன் அமெரிக்கா போனத இப்ப நினச்சாலும் காமடியா இருக்கும்.


அவன் காலேஜ் படிக்கிற போது ஆங்கிலத்துக்கு எதிரியா இருந்தான், எதிரினாலும் எதிரி காட்டு எதிரி... அவனுக்கு எதுக்கு ஆங்கிலமேல கடுப்பு வந்துசுச்சுன்னா, எல்லாரும் ஒரு பிகருக கூட சுத்திக்கிட்டு இருக்க, இவன் எவ பக்கதுல போனாலும் தஸ்புஸ்ஸுன்னு ஆங்கிலத்துல பேசுனவுன்னே, அவனுக்கு அவளுகளுக்கு பதில் சொல்ல முடியாததுக்கு காரணம் ஆங்கிலம்தான்னு முடிவு செஞ்சு; ஆங்கிலத்தையே ஜென்ம விரோதியக்கிட்டான், ஆங்கிலம் யாராவது பேசினாலே அவங்க அவனுக்கு எதிரிதான் அதுமட்டும் இல்ல, நானும் அவங்களுக்கு எதிரியாடனும்.




இப்படி இருந்த ராஜு வாழ்கை, விதியின் வசத்தால ஆங்கிலம் கத்துகிற சூழ்நிலை வந்துடுச்சு. நாங்க எல்லாரும் படிச்சுட்டு வேலை தேடிக்கிட்டு இருக்க, தொரை ராஜு மட்டும் வேலை தேடாமல் எல்லாத்துக்கு இந்தியாதான் காரணம், இங்க இருக்குறுவங்க உருப்படவே மாட்டாங்க இப்படி சொல்லி சொல்லியே அவனுக்கு இந்தியா வெறுத்து, அமெரிக்கா மேகம் ஆட்டியது.




அமெரிக்கா போறதுக்கவே ஆங்கிலம் கத்துக்கிற ஆரம்புச்சான், கடைசில கத்துகொடுத்தவருக்கு எல்லாம் மறந்து இவன் தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசி கஷ்டப்பட்டு அமெரிக்கவுக்கு ஜுன் 5, 2005 போய்ட்டான்.


அங்க போனாலும் அடிக்கடி எனக்கு போன் பேசுவான்.


அங்க ஒருத்திய கல்யானம் பன்னிக்கிட்டதா தகவல் சொன்னான், அடுத்த 2 வருடத்துல டைவர்ஸ் ஆச்சுங்கிற விசயதயும் சொன்னான்....


இடையில் இந்தியா வரவே இல்லை.


அவன் போயி 15 வருசம் ஆச்சு, இப்பதான் ஆகஸ்ட் 15, 2020 கரெக்டா இந்தியா சுதந்திரதினம் அன்று திரும்ப வந்துட்டான். நாந்தான் சென்னை அண்ணா விமான நிலையம் 22வது டெர்மினல் 159 கேட்டில் வெயிட் செஞ்சு கூட்டி வந்தேன். கூட்டிவரும்போதுதான் அவன் கூறிய வார்த்தைகள்தான் ஆரம்பத்தில் இருந்தவை.




விமான நிலையத்தில் வாய ஆன்னு பிளந்தவந்தான்... சென்னை மெட்ரே ரயில், எலக்ட்ரானிக் சிட்டி,  சென்னை நகரம் முழுமைக்கும் ஏசி, உலகத்தின் உயரமான கட்டிடம், மிகப்பெரிய விளையாட்டு திடல், பறக்கும் கார்கள் அதுவும் அன்று சுதந்திரதினம் சென்னையே விழாக்கோலம் பூண்டிருந்தது இப்படி எல்லத்தையும் பார்த்து வியந்தான்


வீடு வரும் வரை வாவ்தான். எனக்கு காதுல இருந்து ரத்தமே வந்துடுச்சுன்னா பாத்துக்குங்களேன்.




வீடு வந்தவுடன் ஒரே புலம்பல்தான்....



அமெரிக்கா சரியில்லடா, ஜார்ஜ் z புஷ் நிர்வாகமே வேஸ்ட்டா. அமெரிக்கா காரனுக்கு எத கண்டாலும் பயம், இப்பவுலாம் அமெரிக்கவுல வேலை இல்ல திண்டாட்டம் அதிகமாய்டே போகுது,  அமெரிக்காககாரன் (அவனே அமெரிக்காக காரன்தான்) வேலை பாக்காதா நாடே இல்லைனு ஆயுடுச்சு,  உலகத்துல எல்லா இடத்திலயும் அமெரிக்கா காரன் இருக்கன், இப்பவுலாம் அமெரிக்கா காரனுக அதிகமா இந்தியாவுக்குதான் வேலைதேடி வாராங்க,  அதான் நானும் வந்துட்டேன்.




எனக்கு மனசுக்குல்லே ஒரே ஆனந்தம், மவனே இந்தியா புடிக்கலைன்னு போனே. இப்ப பத்தியா இந்தியாவுக்கே திரும்ப வந்துட்டே...வாடா வா அப்படின்ன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டு

ஆமாம் ராஜு நீ சொல்லுறதும் சரிதான். இப்ப இந்தியாதானே உலகத்தின் வல்லரசு, அப்துல் கலாம் ஆசைப்பட்ட இந்தியா 2020 அடைந்து விட்டது. பக்கதில இருக்குற இருக்குற பாகிஸ்தான் நாமகிட்ட வாலட்டுறதே இல்லை, நாம சொல்லுறததான் ஐநா சபை கேக்குது, இந்தியா சொன்னதுக்கக சைனாமேலயிம், இலங்கைமேலயும் பொருளாதார தடை விதிச்சுருச்சு. இந்தியாவின் சக்திய பாத்த அய்ரோப்பாவெல்லாம் உலகத்தின் நாணயமா ருபாயை ஏத்துகிருச்சு, அவ்வளவு ஏன் சவுதிக்கே பயோ பெட்ரோலை இந்தியாதான ஏற்றுமதி செய்து.



இப்படி இந்தியாவின் அருமை பெருமைகளை நண்பனிடம் கர்வத்துடன் சொன்னேன். அப்பத்தான் வாசலில் இருந்து ஒரு குரல்




"அய்யா, சாமி, சாப்புட்டு ரெண்டு நாளாச்சு, ஏதாவது சாப்பாடு போடுங்க சாமி"






================






இந்தியா 2020ல் எப்படி இருக்குனு நினைப்பேன். அதான் இப்படி வந்துருக்கு இது என்னுடைய முதல் கதை, அடிக்கடி சுஜாத்தவுலாம் எட்டிப்பாப்பாங்கா. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.


நட்புடன்
மஸ்தான் ஒலி