Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Jun 24, 2012

மஹியின் மரணம்

என்னதான் சொல்வது, யாரைத்தான் நோவது... மரணம் கண்டிப்பா வரும், எப்படி வேன்னா வரும் அப்படீன்னு நமக்கு நாமே சமாதானமா போகனுமா? இல்லை குழந்தைகளை கொல்வதற்காவே கிணறுகளை/குழிகளை வெட்டி மூடாமல் விடுகிறார்களா என்று எண்ணிக்கொள்வதா?

எல்லாரும் படிச்சுருக்கலாம், நான்கு வயது சிறுமி ஒரு குழிக்குள் விழுந்து 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டாள் என்பதை, படிக்க




இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துவிட்டது, அடிக்கடி இப்படி குழிக்குள் குழந்தைகள் விழுவதும், இறப்பதுமாக... எதுக்காக அப்படி ஒரு குழியையை தோண்டி மூடாமல் விடனும்? இப்ப நம்ம நாட்டுல எப்படி ஆயிடுச்சுன்னா, நாம நல்ல வாழ்ந்தா மட்டும் பரவாயில்லை, எவனும் எப்படி வேன்னா போகட்டும்... எல்ல மட்டதிலும் சகிப்புதன்மை இல்லாமல் போயிடுச்சு... சுயநலம் மட்டுமே முக்கியமா இருக்கு...

கொஞ்சம் வேகமா மீட்பு நடவடக்கை இருந்திருந்தா மஹியை காப்பாதிருக்கலாமே???

சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.... :(

Jun 16, 2012

ஆட்டுக்கு தாடியும் நம் நாட்டுக்கு குடியரசுதலைவரும்

தேவை என்பது எவ்வளவோ இருக்க, எதுக்குதான் ஆட்டுக்கு தாடியை வளர்க்க பாடு படுகிறோமே???  ஆட்டை மேய்ப்பவர்கள் எப்படி பெருமைபடுவார்களோ அப்படி நாமும் நன்றாய் பெருமைபடலாம், அட அவ்வளவு ஏன் ஆடே தன்னுடைய தாடியை பார்த்து பெருமை பட்டு கொள்ளும்... அடடா எவ்வளவு பெருசா இருக்கு, எவ்வளவு கருப்பா இருக்கு என்று. ஆனா என்ன தாடி வைப்பதுற்க்கு அடிக்கடி 23 கோடி, 205 கோடின்னு செலவு செய்ய வேண்டியது வரும்.


அடப்போங்ப்பா லட்சத்துகோடி கணக்குல செலவு செஞ்சவங்களையே கண்டுக்க மாட்டோம், வெறும் பிசாத்து 205, 200, 23 கோடிதானே, ஆட்டுக்கு தாடி நல்லதுதானே, எல்லாருட்டையும் நல்லா சொல்லிக்கொள்ளலாம்... பாருங்க எங்க ஆட்டுக்கு தாடி இருக்கு,  ஆட்டை வெட்டும்போது  அந்த தாடிதான் விலை அதிகமா போகும், அந்த தாடிதான் எங்க நாட்டையே பாதுகாப்பாகவும், சந்தோசமாவும் வச்சுருக்கு...


நடக்கும் ஒவ்வொரு செயல்களும் எனது விரக்தியை அதிக படுத்தவே உதவுகின்றது... ரப்பர் ஸ்டாம்ப் என்கிற பதவி எதற்கு நமது நாட்டிற்கு? மற்ற நாடுகளில் ஜனாதிபதிக்குதான் எல்லா அதிகாரமும் இருக்கும், நல்லதோ கெட்டதோ, ஏதாவத அவர் தனது நாட்டு மக்களுக்கு செய்வார். தலைமை சக்தி உள்ளவராக இருப்பார், நம்ம நாட்டுல??? எங்க அது இருக்குன்னே தெரியலை இல்லையா?


கீழே உள்ள லிங்கை பாருங்கள், அவை கடந்த இரண்டு மாதம் உள்ள செய்தி ஆகும், சும்மா படிச்ச் உடனே வயிறு எரிய ஆரம்பிக்கும்...

அட ரெண்டு மூனு மாசத்துக்கே இப்படி,  கடந்த 4.5 வருசத்துல நமது குடியரசுதலைவர் என்ன ஆட்டம் போட்டுருப்பார்??? அந்தம்மா சாகுற வரைக்கும் பெரிய வீடு கொடுத்து அரசாங்கம் கஞ்சி ஊத்தும், என்ன செய்ய விதியேன்னு போகவேண்டியதுதான்...


அப்துல் கலாம், மிகவும் நல்லவர்தான், என்ன செய்ய?? 5 வருசமா இருந்து என்ன செஞ்சுட்டாரு?? சொந்த ஊருக்கு ஏதாவது செஞ்சாரா? சொந்த மாவட்டதுக்கு ஏதாவது செஞ்சாரா? சொந்த மாநிலத்துக்கு ஏதாவது செஞ்சாரா?முடியாது,  முடியவே முடியாது; எங்க மாவட்டம் இன்னும் அப்படிதான் இருக்கும், அதே சாக்கடை, அதே கொசு, அதே தண்ணி பிரச்சனை... பவர் இல்லதா ஒன்னு, பாவம் அவர் கூட ஆசைப்பட்டுருப்பாரு நம்மல போல, என்ன செய்றது,  ஆனா 5 வருசமும் நல்லா அனுவிக்கலாம், ராஜா போல இருக்கலாம், ஆனா யாருக்கும் எதுவும் செய்ய முடியாது.

நாட்டுடைய முதல் குடிமகன், எந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் வந்தால் பிடிவாதமா முதல் குடிமகனைதான் சந்திக்க போறாங்களா? புதுசா ஏதாவது சட்டம் இயற்ற முடியுமா? பாராளுமன்றம் பரிந்துரைக்கும் அமல்களை மூன்று முறைக்குமேல் நிராகரிக்க முடியமா? தூக்கு தண்டனைய முதல் குடிமகன் நினைத்தால் நிப்படி விடலாம் என்பார்கள்? இதுவரை அப்படி ஏதாவது கேள்விபட்டதுன்டா???


இப்படி கேட்டுகிட்டே போகலாம், இப்படி பட்ட பதவி தேவையா? ஆட்டுக்கு எதுக்கு தாடி? சும்மா டம்மியா ஒருத்தர் இருப்பதுனால் என்ன பலன்?


இதெல்லாத்தைம் விட கொடுமையான ஒன்னு காங்கிரஸ் யாரை நிறுத்துனாலும் பிஜேபி ஆதரிக்குமாம், கொடுரமான கூட்டம் போட்டு இதை அறிவிச்சுருக்காங்க, என்ன காரணம்னா, துணை குடியரசுதலைவர் பிஜேபிக்கு கிடைக்குமாம்... என்ன ஒரு அண்டர்ஸ்டாடிங்...

Jan 13, 2011

இன்னுமா தந்தி கலைஞரே???

கருணாநீதிக்கு அப்படி என்னதான் தந்திமேல் மோகம் என்று தெரியவில்லை, தொடர்ந்து தந்தி மேல் தந்தி.... தபால் துறையை வாழ வைத்து கொண்டிருப்பதே திராவிட இயக்கங்கள்தான் போல. இமெயில், போன், இண்டெர்நெட் என்று எவ்வளவோ வந்தாலும் பிடிவாதமாக பிரதமருக்கு தந்தி மேல் தந்தியாக அதுவும் மற்றவர்களின் துன்பத்தின் போதுதான்... என்ன ஒரு பிடிவாதமோ?

சிங்கள கடற்படை வெறிச்செயல்-மீனவர் பலி

நேற்று ஒரு தமிழக மீனவரை இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார், அதற்காக இந்திய பிரதம மந்திரிக்கு தமிழக முதல் மந்திரி தந்தி அனுப்புசாராம். இலங்கைகாரன் தொடர்ந்து தமிழக மீனவர்களை கொண்டுகிட்டு இருக்கான், தினமும் ஒரு குறிக்கோள் வச்சுருப்பான் போல, எப்படியும் ஒரு தமிழனை கொல்லனும்னு... இது பல நாட்களா தொடர்ந்து கொண்டே இருக்கு, இதை கண்டிக்க வேண்டிய பிரதமரும், முதல் அமைச்சரும் தந்தி கொடுத்து விளையாண்டுகிட்டு இருக்காங்க. ராசாவுக்கு ஒரு பிரச்சனைன்ன என்றவுடன் தனது தூதுவரை உடனே டில்லிக்கு விமானம் புடுச்சு போக சொல்லி பேச சொன்னார்; ஆனா? ஒரு வேளை தினமும் இதை கேட்டு கேட்டு சலிச்சுருக்குமோ? என்னாப்பாது டெய்லிந்தான் கொல்றானுக, என்னதான் செய்றதுன்னு நினைச்சுருப்பாரோ????



தமிழக மீனவரை அடித்தால் இலங்கை மாணவரை அடிப்போம் தமிழக மக்களுக்கு ஆதரவாய் கருத்து சொன்ன சீமானை பிடித்து உள்ளே போட முடிந்த இந்த ஆட்சியாளர்களுக்கு, இலங்கை நடத்தும் துப்பாக்கி சூட்டை மட்டும் தடுக்க இயலவில்லையா? பல நாட்களாக இலங்கை அரவு தமிழக மக்கள் மீது அறிவிக்கபடாத போரை நிகழ்த்தி வருகிறது. இன்னும் தந்தியே அனுப்பிகிட்டு இருந்தா மீனவ இனத்தையோ ஒழிச்சுரும்...

Jan 12, 2011

சில நிஜங்கள்...

இந்திய நாட்டின் சில நிஜங்கள், இது சில நேரங்களில் உலக அளவில் கூட பொருந்தும் இல்லையா?

மாங்கு மாங்குன்னு இரவும் பகலும் கண்ணு முழுச்சு படிச்சு முதல் வகுப்புல தேறி டாக்டராவோ பொறியாளரோவோ ஆகுறாங்க.






மாங்கு மாங்கு படிக்காட்டாலும் ஓரளவுக்கு படிச்சு இரண்டாம் வகுப்புல தேறி MBA வா ஆகி, முதல்ல வந்த டாக்டரையும் இஞ்னியரையிம் கண்ட்ரோல் செய்றாங்க..






கடமைக்குன்னு படிச்சு மூன்றாம் வகுப்புல தேறி, அரசியல்ல நுழைச்சு முதல்ல வந்தவர்களையும் இரண்டாம் வந்தவர்களையும் ஆட்டி படைக்கிறாங்க...








இதுதான் லீஸ்ட், சுத்தமா படிப்பும் ஏறாமே, எல்லாத்துலையும் பெயில் ஆகியும் தாதாவ ஆகி படுச்சவர்களை பூரா ஆட்டிவைக்கிறாங்க.

என்னத்த படிச்சு என்ன செய்றது??? வேன்னா பெஸ்ட் நாத்திகவாதின்னு சொல்லிக்கலாம் :)

Aug 9, 2010

இந்தியா 2020

இந்திய குடிமக்கள் எல்லாருக்கு ஆசை இருக்கு போல, இந்தியா வல்லரசு ஆகனும் உலத்தை ஆட்டி படைக்கனும்னு... இது எந்த அளவுக்கு இருக்குன்னா, டீக்கடையில் விவாதிப்பது வரை வந்துள்ளது...



சமிபத்தில் டீ குடிப்பதற்காக சென்றிருந்த போது அங்கு இருந்த நான்கு பேர், எப்படியும் இந்தியா 2020ல் வல்லரசு ஆகிடும் என்கிற நிலையில் பேசிக் கொண்டிருந்தனர், நாமதான் சும்மா இருக்க மாட்டோமே, உடனே நான் ஆமா வல்லரசுன்னா என்ன என்றேன்? அங்கு இருந்த யாருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை, வல்லரசுன்னா வல்லருசுதான் அமெரிக்கா போல என்றார்கள்.. அதாவது மற்ற நாடுகளை கட்டுபடுத்த கூடிய அதிகாரமா? அல்லது எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கின்ற அதிகாரமா என்றேன்? அப்படி இல்லை, ஆனாலும் அப்படிதான் என்ற மலுப்பலுடன் பதில் சொன்னார்கள், உடனே இப்ப இந்தியன்தான் உலக அளவில் பணக்காரனாக இருக்கின்றான், இந்தியாவில்தான் அனைத்து செல்வாக்கும் இருக்கு, எந்த நாட்டின் மீது ராக்கெட் ஏவுகிற சக்தி நமக்கிருக்கும் இப்படி சொல்லி கொன்டே போனார்கள், உடனே நான் உலக அளவில் பணக்காரனாக இருக்கிற மும்பையில்தான் உலக அளவில் பிச்சைக்காரனாக இருப்பவனும் இருக்கின்றான் என்றேன்... என் மீது கோபம் போல் உடனே எழுந்து சென்று விட்டார்கள்.

எனக்கு தோன்றியதெல்லாம், வல்லரசு வல்லரசு என்கிறார்களே அப்படின்னா என்ன??? ரோட்டோரங்களின் படுத்து உறங்குபவர்கள் அதிகதிகம் உள்ள நாடு நமது நாடு. சமிப இரவில் நான் பார்க்க நேர்ந்தது, ஒரு ஏதோ ஒரு வண்டி (குப்பை அள்ளும்) அதன் உள்ளே இரு குழந்தைகள் உறங்கினார்கள் அந்த வண்டி கொசு வலையால் போர்த்த பட்டிருந்தது, வெளியில் அந்த குழந்தைகளின் அப்பவும் அம்மாவும் கொசு கடிக்க கடிக்க தூங்க முயற்சி செய்தார்கள்... உடனே நான் அவரிடம் ஏன் உங்களிக்கு வீடு இல்லையா ஏன் இங்கு தூங்கிறீர்கள் என்றேன்? அவர் எதுவும் பேசவில்லை, அவர் மனைவிக்கு யார் மீது கோபமே உடனே "
எங்களுக்கு இதான் வீடு, எங்க வேன்னா தூங்குவோம், யார் யாருக்கு வீடு கட்டி கொடுக்கிறாங்க எங்களுக்கும் ஒரு வீடு இந்த அரசாங்கம் தருதா, ஏன் நீ உங்க வீட்டுக்கு கூட்டிக்கு போயேன்" என்றார்கள்.

இவர்களை போல் பல பேர் வீதிகளில் வாழ்கின்றனர்... என்ன ஒரு கொடுமை அல்லவா? சில வயதானவர்களை பார்த்தால் மிகவும் மனது வலிக்கும், அதுவும் பசிக்காக கை ஏந்தும் மனிதர்களை கண்டாலோ, அப்படி ஒரு கஷ்டமா இருக்கும், அவர்களை கடக்கும் போதெல்லாம் அப்படியே மனது வலிக்கும், ஒரு குற்ற உணர்சியாவே இருக்கும், ஏதும் செய்ய முடியவில்லையே என்கிற வருத்தமான மனநிலையில் இருப்பேன்.

இந்த மக்களின் நிலமையை மாற்றிவிட்டு இந்தியா சொல்லி கொள்ளட்டும் வல்லரசு என்று... நமது நாட்டில்தான் ஏழை கடைசிவரை ஏழையாகவே இருக்கிறான், பணம் இருப்பவனிடம் பணம் சேர்ந்து கொண்டே போகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் முறை அல்லவா? கல்வியில் சமத்துவம் வேண்டும் என்பதற்காகத்தான் யூனிபார்ம் என்கிற முறையை கொண்டு வந்தார்கள், ஆனால் பணம் இருப்பவனுக்கு ஒரு சமத்துவம் மற்றவர்களுக்கு ஒரு சமத்துவம் என்று ஆகிவிட்டது நமது நாட்டில், இப்படி ஆரம்ப நிலையிலே பல்வேறு வேறுபாடுகள்... சில நாடுகளில்(வல்லரசு என்று சொல்லி கொள்ளும்) ஒரு மாணவனின் படிப்பு செலவு அனைத்தையும் அரசாங்கமே எடுத்து நடத்தும், ஆனால் இங்கு?

நீதி எல்லாருக்கும் பொது, சட்டம் கண்டிப்பா கடமையை செய்யும் என்பார்கள், ஆனால் அந்த சட்டம் பணம் இருந்தால் வாயை மூடி கொண்டுவிடும் உதாரணம் எல்லாம் தேவை இல்லை, நீதிபதியே கொள்ளை அடிக்கிற நாடு நம்நாடு, குஜராத் கலவரத்தில் காரணகர்த்தாவ இருக்கிற ஒருவரே இன்னும் முதலமைச்சராக இருக்கிறார், சிபிஐ அவர் மந்திரி சபையில் இருக்கும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து அதை இங்கு நடத்தலாமா வேறு மாநிலங்களுக்கு மாத்தலாமா என்று முதலமைச்சராக்காக நீதியை மாற்றுகிறார்கள்.

தமிழ்நாடு அரசாங்கம்
சில பேர்களுக்கு இலவச வீடு கட்டி தறுகிறது, கொடுமை என்னன்னா ஏற்கனவே அவர்களுக்கு வீடு இருக்கிறது, ஏன் இந்த ரோட்டு ஓரத்தில் இருப்பவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது ரோட்டு ஓரத்தில் இருப்பவர்கள் என்னத்த ஆடி பாடி மகிழ்விக்க போறாங்க என்கிற மனநிலையா? அதானே டான்ஸ் ஆடியும் புகழ்ந்து பேசினால்தானே இலவச வீடு கிடைக்கும்...

பல கிராமங்களில் இன்று வரை மின்சாரமே கிடையாது அப்படியே இருந்தாலும் அதிக பட்சம் மிக குறைந்த அளவே அங்கு இருக்கும், நகரத்திற்கு ஒரு முறையும் கிராமங்களுக்கும் ஒரு முறையும் பின்பற்றும் நாடுதானே நமது.

அன்னிய நாடு எது சொன்னாலும் தலை ஆட்டி அதன்படி செயல் படும் அரசியல் வாதிகளை கொண்ட நாடு நமது, போபால் விசவாய்வு தாக்கி இறந்தவர்களுக்கு இன்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை, இதெல்லான் வேண்டாம் என்று தனது தேவைக்காக போராடும் மக்களை மாவோயிஸ்ட்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டு கொல்லும் நாடுதானே நமது?


நமது நாடு முன்னேறினால் மிகவும் சந்தோசமே, ஆனால் எல்லாருக்கும் வாழ்வு சந்தோசமா இருக்கனும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து கிடைக்கனும், அத்யாவசிய தேவைகளான நீர், வீடு, மின்சாரம் இவைகளை கொடுத்து விட்டு சொல்லி கொள்ளட்டும் வல்லரசு என்று.


எல்லருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்

Jun 16, 2010

ரயில்வேயில் நடக்கும் கொள்ளை

சிறுவயதில் அனைவருக்கும் இருக்கும் கனவுதான், அதாவது ரயிலில் பயணம் செய்வது, ரயில் பயணம் செய்வது மட்டுமல்ல, அதை பார்ப்பது கூட மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாகவே உள்ளது. எனக்கு ரயில் பயணம் செய்வது அவ்வளவு சந்தோசம், அதனுடைய கூஊஊ என்று கூவிக்கொண்டு போகும் சப்தமும், பர்த் கிடைத்து படுக்கும் போது அதன் தாலாட்டு போல் அமைவது... சே, இவை எல்லாம் அனுபவித்தவர்களுக்குதான்...

நடுத்தரவர்க்கம் மட்டுமல்லாது அனைவரும் விரும்பி பயணம் செய்வதும், விரும்பவதும் ரயிலில்தான், ஏனென்றால் அதனின் வேகமும், அனைத்து வசதிகளும்... பயணம் செய்து கொண்டிருக்கும் இப்படி கிடைக்கும் வசதிகள்தான் அனைவரையும் ரயிலை மிகவும் விரும்ப வைக்கின்றன... மிக முக்கியமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலையில் உயராமல் இருக்கும் ரயில் கட்டணத்தின் விலைதான் நடுத்தரவர்க்கம் மற்றும் ஏழை மக்கள் மிக விரும்ப ஒரு காரணம் ஆகும்!



சமிபகாலமாக, ரயிலில் பயணம் செய்வது கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, அதுவும் மிகவும் கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, ஜெனரல் கம்பார்ட்மெண்ட் எனப்படும் பொதுப்பெட்டி ஒரு ரயிலில் 4 தான் அதிக பட்சமாக இருக்கிறது, அந்த 4 பெட்டிகளிலும் அதிகபட்சமாக 300 நபர்கள் முதல் 350 நபர்கள் வரை இருக்கலாம், ஆனால் இப்போது என்ன நடக்கிறது ஒரு பெட்டியிலே 400 நபர்கள் வரை இருக்கிறார்கள்... இதெல்லாம் சாதாரன நாட்களில்தான் ஏதாவது திருவிழா நேரம் என்றால் தொலைந்தோம்... படியில் தொங்குவதற்கு கூட இடம் இருக்காது, அவ்வளவு கூட்டமாக இருக்கும்.



இரண்டாம் படுக்கை வசதி என்பது 3 மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் மட்டுமே நன்றாய் படுத்து கொண்டு போகலாம், இல்லையென்றால் கொடுமைதான். புக்கிங் ஏஜெண்ட் எப்பொழுது நியமித்தார்களோ, அப்போது ரிசர்வரேசன் என்பது அதிக பணம் கொடுப்பவர்களுக்கு என்பதாகிவிட்டது... ஒரு வாரத்தில் எங்காவது பயணம் போகவேண்டியது இருந்து, ரயில் போய் ரிசர்வ் செய்து விடுங்கள் பார்ப்போம், கண்டிப்பா கிடைக்காது, அதே நேரத்தில் ஏதாவது ஒரு ரயில் புக்கிங் ஏஜெண்ட் பார்த்து கூட 200 அல்லது அதனின் கூடவோ கொடுத்தால் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்வது உறுதி. எப்படி அவர்களுக்கு இதனை கொடுக்க முடிகிறது, எல்லாம் ரயில்வேயில் தவறுகள்தான்... ரிசர்வ் செய்யும் ஒருவர், ஒரே நேரத்தில் 6 பேர்களை ரிசர்வ் செய்யலாம், ஆனால் ஒருவர் மட்டும் ஐடி கார்ட் காமித்தால் போதும், புக்கிங் ஏஜெண்ட் ஏதாவது பெயரிலும் வயசிலும் டிக்கட்டை புக் செய்து விட்டு மற்றவர்களுக்கு வழி இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

உங்களுக்கு மிகவும் அவசரமாய் போக வேண்டுமா???
தட்கல் கூட கிடைக்க வில்லையா???
புக்கிங் ஏஜெண்ட் கூட உதவ வில்லையா???

கவலை வேண்டாம், சாதாரன டிக்கட் எடுத்து கொண்டு ரிசர்வ் கம்பார்ட்மண்டில் ஏறி டிடியை (டிக்கட் பரிசோதிப்பர்வரை) கொஞ்சம் கவனித்தால் போதும்... எப்படிதான் இவர்களுக்கு மட்டும் சீட் இருக்குமோ? பணம் தின்னும் கழுகாக மாறி வருகிறார்கள். ஒரு சிலபேர் நல்லவர்களாய் இருக்கலாம், ஆனால் மிக அதிகமானோர் கவனிப்புக்கு மயங்குறவர்களே... பொதுவாக RAC 1 என்று இருந்த்தால் ஏதாவது ஒரு டிக்கட் கேன்சல் ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும், அதுதான் நியாயமும்.. ஆனால் TTE அப்ப்டி செய்வதில்லை, பணம் இருக்கா, கண்டிப்பா சீட் கிடைக்கும், இல்லையா சீட்ல இருக்கும் முனை கூட கிடைக்காது.

இப்படி பட்ட கொள்ளைகள் ரயில்வேயில் நடந்து வருகிறது... யாரும் இதற்கு எதிராக எந்த விதமான ஆக்சனும் எடுக்கவில்லை.


பல நாடுகளில் வேலையை செய்ய வேண்டாம் என்றால்தான் லஞ்சம்
ஆனால், இந்தியாவில்தான் வேலையை செய்ய லஞ்சம்.

இந்தியன் படத்தில் வரும் வசனம்

Jun 6, 2010

புகையில்லா சென்னை

சமிபகாலமாக சென்னைவாசிகள் எங்கு பார்த்தாலும் "SMOKE FREE CHENNAI" என்ற வாசகம் காணப்படுகிறது.... ஸ்மோக் ஃபிரி என்பது சரிதான், ஆனால் சிகரட்டில் மட்டும்தான புகை காணப்படுகிறதா???



மாநகரங்களில் வசிப்பவர்கள் இழக்கவேண்டிய ஒன்று ஆரோக்கியம், ஆமாம் சென்னையில் ஆரோக்கியத்தை இழந்துதான் பணத்தை(?) சேர்த்துக் கொண்டிருக்கிறோம். சிகரட் மட்டும் மட்டும் புகை விடுது என்பவர்கள்...














பஸ்கள், லாரிகள் வெளியுடும் கரும்புகை


















சென்னையில் ஓடும் கார், ஆட்டோக்களின் புகை




















இண்டஸ்ட்ரீஸ் வெளியிடும் புகை






















பண்டிகையின் போது வெளியும் புகை


இப்படி புகையோ புகை, கண்டிப்பா இவை எல்லாம் நமக்கு பகைதான், ஆனால் எதிர்ப்பவர்கள் ஒன்றை மட்டுமே ஏன் எதிர்க்க வேண்டும்? புகையில்லா சென்னை என்பது, எங்கும் புகை இல்லாமல் இருப்பதை குறிக்கும் அல்லவா? சிகரட்டில் வெளிப்படும் புகை ஒன்றும் ஓசன் படலத்தை ஓட்டை போடுவதில்லை, புகைப்பவர்களின் இதயத்தில் ஓட்டை போடுவதோடு சரி, ஆனால், மேற்கண்ட வழிகளில் வெளிப்படும் புகை ஓசன் படலத்தை அல்லவா ஓட்டை போடுகிறது, இதனால் என்ன பிரச்சனை என்பவர்கள் வருங்கால சந்ததிக்காக நாம் சேர்த்து வைப்பது கொடிய நோய் நொடிகள்தான், போராடுபவர்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் மிகவும் நன்றாய் இருக்கும்!

நமது நாட்டில் அரசாங்காத்தின் பல்வேறு தூண்கள் பேருக்காகவே இருக்கின்றன... அதில் ஒன்றுதான், "மாசு கட்டுபாட்டு வாரியம்"... இதன் செயல்பாடுகளை யாராவது எடுத்து சொன்னால் தேவலை, பேருதான் "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஆனால் செயல்பாடுகளோ "மாசு கட்டுபடுத்தா வாரியம், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டில் நமது நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா? 123வது இடம். அவ்வளவு சுகாதாரமாக நமது நாட்டை வைத்துள்ளோம். "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஒழுங்காகவே செயல்பட்டு இப்படி புகை வெளியும் பஸ், காரு, ஆட்டோ போன்றவற்றை தடை செய்து, கொடுரமாக புகை வெளியிடும் இண்டஸ்ட்ரீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.


கடைசியா இரண்டு தகவல்

  • சிக்ரட் குடிப்க்கும் ஆண்களுக்க் ஆண்மை குறைவு ஏற்படுமாம், பெண்களாய் இருந்தால் பெண் தன்மையே பரிபோகுமாம்.
  • சிக்ரட் குடிப்பவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் அது குழந்தையின் உயிரை கூட பரித்து விடுமாம்,சமிபத்தில் வந்த தந்தியில் இருந்த தகவல்.

Jan 25, 2010

தமிழன் இளிச்சவாயனா?

வர வர தமிழன் இங்க வேலையே செய்ய முடியாது போல இருக்குது, இப்பவே ஹிந்திக்காரன் சென்னையில எல்லா இடத்திலையும் வந்துட்டான், சென்னையில தமிழ்நாடு வகை சாப்பாடு போயி ஹிந்தி டைப்பு சாப்பாடு வந்துடுச்சு, தமிழ்படங்கள் அதிகமா வெளிட்டது போக நிறையவே ஹிந்திபடங்களா வர ஆரம்புச்சுடுச்சு... இங்க பிழைக்க வந்தவன் எல்லாம் இங்க உரிமை கொண்டாட ஆரம்புச்சுட்டான். இப்பவே பல பகுதிகளுக்கு தமிழன் வீடோ நிலமோ வாங்க முடியாத நிலமை, சென்னையில சில இடங்கள் இருக்கு மார்வாடியை தவிர யாரும் அங்கு குடி போக முடியாது, தமிழ்நாட்டுடைய மொழியா ஹிந்தியை ஆக்கிடுவாங்க போல இருக்கு... இப்ப வரைக்கும் லங்காவுல தமிழனை அடிக்கிறானுக, மலேசியாவுல அடிக்கிறானுக, அப்ப அப்ப மகராஷ்ட்ராவுலயும் கர்நாடகத்திலயும் அடிப்பானுக. நாம எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கனும் அது போதாதுன்னு இங்க வேற வந்து அடிக்கிறானுக... நாமதான் எல்லாதையும் பொருத்துகிட்டு போகிட்டு இருக்கிறோம்... இந்தியாவவது மயிராவது??? எல்லாம் வேஸ்ட்... இப்படி தமிழன் அடிவாங்கிறத செண்ட்ரல் கவர்மண்ட்ல இருந்து எவனாவது கேட்டுறானா??? ஹிந்து பேசுறவனுல்லாம் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, PM குரல் கொடுக்குறார்,    இங்க அரசியல் நடத்துறவனுக எல்லாம் தே... பசங்க, ஆரம்பிக்கம்போது அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம்னு சொல்வானுக ஆனா எல்லாரும் வேஸ்ட்... தமிழன் நல்லா இருக்கனும்னா தனிநாடு வேனும், இல்ல மகராஷ்ட்ராவுல ராஜ்தாக்ரே செய்யிறது போல நாமளும் செய்யனும்... 







இப்படி ரயிலில் ஒருவர் பொதுவாக பேசிக்கொண்டுவந்தார்...


அவர் சொல்ல வந்தது எனக்கு புரிந்ததுதான், கருத்தை கேட்க கேட்க மனது ஏதோ கொதிக்க ஆரம்பித்தது, அவர் நிறுத்தவே இல்லை, அதிகமாக பேசினார், நியாமாத்தான் இருந்தது... ஆனாலும் மனது கேட்கவேவில்லை, ஏனோ கருத்தை ஒப்பு கொள்ள மறுக்கிறது மனது...


நானே என்னுள் இரண்டாக மாறி சண்டையிட்டு கொள்கிறேன்...
ஆமா, அவர் சொல்வது சரிதான். தமிழன் ஏமாளிதான், எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கதான் செய்வான், கேட்பதற்கு நாதி இல்லாமல் போயிடுச்சுதான்... போற இடத்துல அடிவாங்குறாண்டா, சொந்த இடத்திலும் அப்படிதான்.இதுக்குலாம் ஒரு விடிவு வரனும்னா மத்தவன் நம்ம இடத்துல நுழைய விடாம தடுக்கனும், அப்பதான் முடியும்... ஒவ்வொரு மொழிக்காரனும் தமிழ்நாட்டை ஆக்கிறமச்சுகிட்டோ போறான், இப்படியே போச்சுன்னா தமிழ்நாட்டிலயும் தமிழனை அகதி ஆக்கிடுவாங்க போல, ஒரு வெறி ஆட்டம் ஆடினாத்தா நமக்கு உள்ள உரிமை நமக்கு கிடைக்கும்... 


இரண்டாவதாக...
இந்தியா என்பது அகண்ற நாடு யாரு வேண்டும் என்றாலும் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம், வாழலாம், சம்பாரிக்கலாம்... இப்படி இந்தியர் அனைவருக்கும் சம உரிமைகளை நாடு வழங்கி உள்ளது, இப்படி இருக்கும் போது நீ இங்கு வராதே.. நீ ஹிந்திக்காரன் இப்படி சொல்லுறது கொஞ்சம் ஓவரா படுது. ஏன் தமிழர் வேறு பகுதிகளுக்கு போயி வாழலையா? தமிழ்நாட தவிர பல இடத்துல தமிழர்கள் நல்லாதானே வசிக்கிறாங்க, யாருக்கு இப்ப என்ன ஆச்சு, சில இடத்துல சில சம்பவங்கள் நடக்கிறது என்பதற்காக நாமும் மிருமமா மாறிடலாமா??? என்ன உரிமை? அவனுக்கும் இந்தியாவுல உரிமை இருக்கதானே செய்யுது, தமிழ்நாடு ஒன்னும் தனிநாடு இல்லையே... 







இப்படியே என்னோட யோசனை போச்சு... அவ்வளவு சீக்கிறத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியுமா என்ன? இது ஒருவருடைய சிந்தனையா இல்லாமல் பலபேருடைய கருத்தாதான்  எண்ணவேண்டியதுள்ளது, அதிகமானோர் மனதில் பூட்டி வைத்துள்ளனர், இப்படி சிலபேர்தான் வெளிட்டு விடுகின்றனர்,,, இந்திவுக்குள்ளே நடக்கும் இந்த இனவெறியை எப்படி தடுப்பது??? ஒன்று பட்ட இந்தியாவை இந்த வெறி பாதிக்குமே... இப்போதுதானே இந்தியாவே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆகின்றது, இவர்கள் சிந்தனை இப்படி இருந்தது என்றால்... யாருடைய குற்றம், அவர் சொன்னதில் ஒன்று கூட தவறு இல்லை, ஆனால் தமிழரும் பல்வேரு இடங்களில் சென்று வசிக்கின்றனர் அவர்களை பற்றி இவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்... இப்பேர்பட்ட தீ அதிகமாகமல் தடுக்கவேண்டும், இந்தியர் அனைவரும் சகோதர்கள் என்ற சிந்தனைக்கு இவர்களை கொண்டு வரவேண்டும்... 

Dec 28, 2009

அதிகபட்ச தண்டனை

சமிபத்தில் நாளிதள்களில் வந்த செய்திகள்.


  • கள்ளநோட் மாற்றிய கும்பல் பிடிபட்டது
  • சீனாவில் இருந்து போலி மருந்து

முதலில் உள்ளது நமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க கூடியது. இரண்டாவது உள்ளது மக்களின் உடல் நலத்தை சிதைக்க கூடியது. இரண்டுமே மிகக்கொடியதுதான். 

கள்ளநோட்டு மாற்றுபவர்கள் அடிக்கடி பிடிபடுவதும், அவர்களை பற்றிய செய்திகள் நாளிதள்களில் வெளியிடப்படுவதும் நடந்து கொண்டே உள்ளன, பிடிபடுபவர்கள் என்ன் ஆகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு பதில் எப்போதும் போல் வெறுமையாகவே உள்ளது... பிடிபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும், மேலும் இதனின் வேர் எங்குள்ளது என்று கண்டுபிடித்து வேரோடு அழிக்கவேண்டும். ஒவ்வொரு தடவை பிடிபடுபவர்களை போட்டோ எடுத்து நாளிதளில் போடுவதும், வேறு ஒரு பரபரப்பான செய்தி வந்தவுடன் அதை மறப்பது என்று இல்லாமல் அதனின் ஃபாலேஅப் செய்தியை வெளியிட்டு, நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களை வேரோடு சாய்க்கவேண்டும். 




இதையிம் விட மிகவும் கொடியவர்கள் போலி மருந்து இறக்குமதி செய்பவர்கள். மனசாட்சியை பணத்திற்காக அடமான வைத்து செயல்படுவர்கள். சீனாவில் இறக்குமதி செய்யபடும் அதிகாகமான பொருட்கள் நமது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை, இதை மருத்துவர்களே ஒப்புகொண்டுள்ளுனர், நமது நாட்டில் விற்கபடும் மிக அதிகமான பொருட்களின் இடத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடும் பொருட்கள் பிடித்துள்ளன, எங்கு நோக்கினும் "Made in China" என்ற முத்திரையுடன் பொருட்கள் உள்ளன. 

இப்படி மக்களை அழிப்பது போதாது, இந்திய மக்கள் அதிகமானோர் நோயளிகள் அவர்கள் அதிகம் நாடுவது மருந்துகளைதான், அதை போலியாக தயாரித்து மொத்தமாக இந்திய மக்களை ஒழித்து விடலாம் என்று சீனா என்னுகிறது போல, ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், வளர்ந்துவிட்டால் ஏதாவது ஒன்றுதான் வல்லரசாக இருக்க முடியும், இப்போதே இந்திய மக்களை ஏதாவது விதத்தில் அழித்துவிட்டால் அல்லது நோய்வாய் படுத்திவிட்டால் சீனாவிற்கு எதிரிகளே இருக்கபோவதில்லை, ஆதலால் கூட இப்படி செய்யலாம். 

நமது நாட்டு அரசியல்வாதிகள் இதை கண்டும் எதை பற்றியும் கவலைபடாமல் இருப்பது, சீனாவை கண்டு அஞ்சுகிறார்களா அல்லது வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. 

எந்த பத்திரிக்கையிம் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவில்லை, அவர்களை சொல்லியும் குற்றமில்லை, சகீலா காதல்தான் அவர்களுக்கு முக்கியம். அல்லது செக்ஸ் புகார்ல எந்த சாமியாருடா சிக்குவான், அந்தரங்க படத்தை வெளியிடலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.

போலி மருந்துக்கு சீனாவும், போலி நோட்டுக்கு பாகிஸ்தானும்தான் காரணம் என்றாலும் நமது ஆட்களில் உள்ள ஆடுகளால்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றது, பிடிபடும் ஆட்களும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் அப்போதுதான்  மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். 

Dec 21, 2009

இடைத்தேர்தல், அரசாங்கதிற்கு ஏற்படும் சுமை

சமிபத்தில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, திமுக அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து இது 10 இடைத்தேர்தல் ஆகும்.




ஓட்டு போடுவது கட்டாய கடமை, கட்டாய கடமை என்று சொல்லி அதிககதிகமா ஓட்டு போடுவது நடந்து கொண்டுள்ளது. வரவேற்கதக்க அம்சம்தான். ஆனால் எதையிம் தொடர்ந்து செய்வதினால் ஒரு தொய்வு ஏற்படுவதை தடுக்க முடியாது. என்ன எழவுஓட்டுடா... எவனுக்கு போட்டாலும் எதுவும் ஆகபோறதில்லை, என்னதுக்கு அடிக்கடி ஓட்டு போடனும் என்று மக்களுக்கு தோன்றதவரைதான் தில்லுமுல்லு ஜெயிக்கும்.

இடைத்தேர்தல் நடப்பதினால் அரசாங்கதிற்கு பல்வேறு சுமைகள்.  இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் ஆண்டுகொண்டுருக்கும் அரசாங்கம் வெற்றி பெற்று ஆகவேண்டிய நிர்பந்தம், ஏவெனில் இடைத்தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்தால்தான் அந்த அரசாங்கதிற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக எண்ணம். இதற்காக எந்த எல்லை வரை செல்ல ஆண்டு கொண்டிருக்கும் தயங்குவதில்லை.

ஏற்கனவே நமது அரசாங்கம் வாங்கிய கடனுக்காக வட்டியே கோடிக்கணக்கில் கட்டி வருகிறது, இதில் இடைத்தேர்தல் நடப்பதினால் ஏற்படும் பணச்சுமை மிகப்பெரிய சுமை. இப்போது தேர்ந்து எடுக்க போகும் MLA ஒன்றும் ஆகபோவதில்லை, பாவம் பதவிகாலம் வெறும் 1 1/2 வருடம் தான். இந்த காலத்தில் அவர் மக்களுக்கு நல்லது செய்யபார்ப்பாரா அல்லது இழந்த பணத்தை மீட்க நினைப்பாரா?

ஒவ்வொரு இடைத்தேர்தலின் போதும் பணம்தான் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்கிறது.

இடைத்தேர்தலினால் அரசாங்கதிற்கு ஏற்படும் செலவு எவ்வளவு என்று தனியாக கணக்கு வைத்து கொள்ளவேண்டும். அவ்வளவு செலவழிகிறது.

இதற்கு மாற்று வழி கண்டுபிடித்தால் என்ன?

ஏன் இடைத்தேர்தல் நடத்தவேண்டும்?

ஒரு தொகுதில் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவர் ஆவர், அவரின் இறப்போ அல்லது பதவியிழப்போ அங்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுத்துவிடும். அவ்வாறு இல்லாமல் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவராகவும் இரண்டாம் நிலையில் வாங்கு வாங்குபவரையிம் மாற்றாளாக (substitute) வைத்து கொள்ளவேண்டும்.  அப்படி இருக்கும் பட்சத்தில் முதலில் இருப்பவர் பதவி இழப்பு ஏற்பட்டால் இரண்டாம் நிலையில் உள்ளவர் அப்பொறுப்பை எடுக்கலாம். இதன் மூலம் அரசாங்கதிற்கு ஏற்படும் சுமையிம் ஆண்டு கொண்டுப்பவர்கள் ஜெயித்தால்தான் ஆச்சு என்ற தன்மையும் மாறும்.

எவ்வளவு காலத்திற்கு பழையதை வைத்து அழுது கொண்டுருப்பது, ஒரு மாற்றம் தான் வரட்டுமே...

Dec 8, 2009

பிரிதல் நலமா?

பிரிவினை...

ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளும் பிரிவினை...

தூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம்! எதற்காக போராட்டம்? தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகமானோர் தெலுங்கான பகுதியை சேரதவர்களாம், எங்கள் ஏரியாவை சேராதர்கள் எப்படி எங்கள் இடத்தில் இருக்கவேண்டும், வேலை செய்யவேண்டும் என்று ஒளிவுமறைவான திட்டத்துடன்தான் தனிமாநிலம் கேட்டு போராடுகிறார்கள்.




மாநிலம் பிரிவதற்காக போராட்டம் நடத்தும் சந்திரசேகர ராவை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்கள் தெலுங்குதேசப் பகுதியை சேராதவர்களும் இருப்பார்கள். இவற்றை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? 30 மருத்துவர் குழு அவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது. 30 மருத்துவர்களும் தெலுங்கு தேச பகுதியை சேர்ந்தவர்கள்தானா?

இதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தேசிய(?) கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. தேசியம் பேசினாலே நாங்கள்தான் என்று மார்தட்டும் பிஜேபி எப்படி இதற்கு ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை.

சொந்த மொழி ஆட்கள் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரசேகர ராவ் கட்சியினர் மாநிலம் பிரிக்கபட்டால் அங்கு பல காலமாக வசிக்கும் தமிழர்கள் மற்றும் மற்றவர்கள் மீதும் வெறுப்பை கக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தெடர்ந்து பல நாட்களாக பந்த்... ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே பாதுக்கபட்டது, இவ்வளவு சிக்கலாக ஆக்கிகொண்டது மாநில அரசாங்கம்தான், அவர் ஆரம்பித்தவுடனே தடுத்திருக்கவேண்டும்.




ஏற்கனவே நமது நாட்டில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டதில் பிரிந்து போய் கிடக்கிறோம். இந்தியாவின் ஒரு சரிசரியான வளர்ச்சி எட்டாதற்கு மொழியால் பிரிந்து கிடப்பது ஒரு காரணம் ஆகும், யார் மறுத்தாலும் இது ஒரு கசப்பான  உண்மையே. இந்தியர்கள் என்று பெருமை பேசும் நாம், இந்தியர் என்பதால் ஒன்றுபடுகிறோம் எனும் நாம், மொழி என்று வரும்போது மட்டும் அனைத்து விசயங்களிலும் கோட்டைவிட்டு விடுகிறோம்,  எனது மொழி பெரிதா உனது பெரிதா எனும் சண்டையிலே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து கொண்டுயிருக்கிறோம்.

மொழியால் நமது நாடு பிரிந்து கிடப்பதினலே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, மொழிக்குள்ளும் பிரிவு ஏற்பட்டால்?

இப்படியே போனால் வீதிக்கு என்றும் ஜாதிக்கு என்றும் மாநில கோரிக்கை எழலாம்.




இந்தியா வல்லரசு ஆக அனைவரும் சேர்ந்து இருந்தலே நலம்.