Showing posts with label ஆந்திரா. Show all posts
Showing posts with label ஆந்திரா. Show all posts

Feb 11, 2010

இட ஒதுக்கீடும் இடமில்லா ஒதுக்கீடும்

சமிபத்தில் ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது... இதற்காக பெரும் பிரச்சனை ஆந்திராவில் நடந்து கொண்டுள்ளது... தேவையில்லாத ஒன்று, அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களால் நமது நாடு இன்னும் இப்படியே இருக்கிறது.

எனது எண்ணம் எல்லாம்... இட ஒதுக்கீடே தேவையா என்பதை பற்றிதான், இது மதம் சார்ந்து சொல்ல வில்லை... மொத்தமாக நமது நாட்டில் மற்றவர்களுக்கு கொடுக்கபடும் இட ஒதுக்கீடு பற்றிதான்...

ஆரம்ப கல்வியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஒதுக்கீடு இறுதி வரை தொடந்தே கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் ஏழையாக இருந்தவர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் கிடைக்கபெறாத மக்களுக்கு கொடுக்கபட்டது இட ஒதுக்கீடு, பெற்றவர்கள் மிகவும் நன்றாய் இருக்க, மற்றவர்கள் இன்றும் இடமில்லாமல் அவதியுருகிறார்கள்.



ஏழை என்பது எல்லா ஜாதி மதத்திலும்தான் உள்ளது, ஏன் ஒருசிலருக்கு மட்டும் பாகுபாடு??? ஆரம்பத்தில் கொடுக்கபட்டது ஏதோ சரின்னால்லும், இன்னும் அதை தொடர்ந்து கொண்டிருப்பது என்ன நியாயம்? 60 வருங்களுக்கு முன்பிருந்த நிலமையா இன்றும் இருக்கிறது? மேலும் இந்த சலுகைகளை பெற்றவர்களே மேலும் மேலும் சலுகைக்காக முயல்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லை...

தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு கொடுப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடை நான் மனதலவில் ஒதுக்கியவன். இங்கு கொடுப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீடை யார் யாரெல்லாம் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள், கண்டிப்பாக அவ்வசதியை பெற்றவர்களே மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள், ஏனெனில் இது மனித இயல்பு.  தமிழ்நாட்டில் பிறந்து பிரபலமாக இருக்கும் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு மூலம் அந்த பலனை அடைந்திருப்பார்களா என்றால் கண்டிப்பா இருக்காது. 

நன்கு படிப்பவன் ஒரு பள்ளியில் சீட் கிடைக்காமல், ஒன்னுமே தெரியாமல் ஜஸ்ட் இட ஒதுக்கீடு மூலம் உள் வருபவர்கள் கடைசியில் என்ன பெருசா சாதிச்சிட போறாங்க? ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து மற்றவர்களை எரிச்சலா பேசுவதை தவிர?

அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், ஒருவருக்கு சில சலுகைகளும் மற்றவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காமல் செய்வதுமா நீதீ? இடமில்லா ஒதுக்கீடும் செய்வது ஏனோ?  அனைவரும் சமம், யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்று கூறும் அரசாங்கமே இப்படி இன்னும் இட ஒதுக்கீட்டை விட்டு வைத்திருப்பது கொடுமைதான், இட ஒதுக்கீடு மூலம் என்ன சரியாக சாதிக்க முடிந்தது? ஏழைகள் எண்ணிக்கையை குறைக்க முடிந்ததா? சரி ஓரளவுக்கு நன்மை இருந்தாலும், இன்னும் இது தேவையா? நமது நாட்டில் இரவு உணவு இல்லாமல் உறங்குபவர்கள் எவ்வளவோ பேர் இருக்க... ரோட்டிலும் காட்டிலும் வசிப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.. உண்மையான ஒதுக்கீடு என்றால் இவர்களுக்கு செய்யவேண்டும்... மீண்டும் மீண்டும் கொடுத்தவர்களுக்கே கொடுப்போம் என்றால் என்ன தீர்வு?

யாருக்கும் எதிலும் இட ஒதுக்கீடே தேவையில்லை, ஜாதிக்கு மதத்திற்கு என்று அனைத்து இட ஒதுக்கீட்டையும் தடைசெய்யவேண்டும்.
நன்கு படிப்பவர்களுக்கு மட்டும் கல்வியும், நன்கு வேலை பார்க்க தெரிந்தவர்களுக்கு மட்டும் வேலையும் என்று மாறவேண்டும்.

Dec 8, 2009

பிரிதல் நலமா?

பிரிவினை...

ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளும் பிரிவினை...

தூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம்! எதற்காக போராட்டம்? தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகமானோர் தெலுங்கான பகுதியை சேரதவர்களாம், எங்கள் ஏரியாவை சேராதர்கள் எப்படி எங்கள் இடத்தில் இருக்கவேண்டும், வேலை செய்யவேண்டும் என்று ஒளிவுமறைவான திட்டத்துடன்தான் தனிமாநிலம் கேட்டு போராடுகிறார்கள்.




மாநிலம் பிரிவதற்காக போராட்டம் நடத்தும் சந்திரசேகர ராவை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்கள் தெலுங்குதேசப் பகுதியை சேராதவர்களும் இருப்பார்கள். இவற்றை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? 30 மருத்துவர் குழு அவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது. 30 மருத்துவர்களும் தெலுங்கு தேச பகுதியை சேர்ந்தவர்கள்தானா?

இதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தேசிய(?) கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. தேசியம் பேசினாலே நாங்கள்தான் என்று மார்தட்டும் பிஜேபி எப்படி இதற்கு ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை.

சொந்த மொழி ஆட்கள் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரசேகர ராவ் கட்சியினர் மாநிலம் பிரிக்கபட்டால் அங்கு பல காலமாக வசிக்கும் தமிழர்கள் மற்றும் மற்றவர்கள் மீதும் வெறுப்பை கக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தெடர்ந்து பல நாட்களாக பந்த்... ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே பாதுக்கபட்டது, இவ்வளவு சிக்கலாக ஆக்கிகொண்டது மாநில அரசாங்கம்தான், அவர் ஆரம்பித்தவுடனே தடுத்திருக்கவேண்டும்.




ஏற்கனவே நமது நாட்டில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டதில் பிரிந்து போய் கிடக்கிறோம். இந்தியாவின் ஒரு சரிசரியான வளர்ச்சி எட்டாதற்கு மொழியால் பிரிந்து கிடப்பது ஒரு காரணம் ஆகும், யார் மறுத்தாலும் இது ஒரு கசப்பான  உண்மையே. இந்தியர்கள் என்று பெருமை பேசும் நாம், இந்தியர் என்பதால் ஒன்றுபடுகிறோம் எனும் நாம், மொழி என்று வரும்போது மட்டும் அனைத்து விசயங்களிலும் கோட்டைவிட்டு விடுகிறோம்,  எனது மொழி பெரிதா உனது பெரிதா எனும் சண்டையிலே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து கொண்டுயிருக்கிறோம்.

மொழியால் நமது நாடு பிரிந்து கிடப்பதினலே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, மொழிக்குள்ளும் பிரிவு ஏற்பட்டால்?

இப்படியே போனால் வீதிக்கு என்றும் ஜாதிக்கு என்றும் மாநில கோரிக்கை எழலாம்.




இந்தியா வல்லரசு ஆக அனைவரும் சேர்ந்து இருந்தலே நலம்.