Showing posts with label பிலாக். Show all posts
Showing posts with label பிலாக். Show all posts

Jan 12, 2010

புதுசு - தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க நான் ஒரு ஹேக் முறையை கண்டுபிடித்து இருத்தேன். அதில் சில தவறுகள் இருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. இப்போது மாற்றபட்ட ஒன்றை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக எல்லா பிரவுசரிலும் வேலை செய்யும்...

முதல் பதிவை பார்க்கவும்

அதில் மாற்றவேண்டியது
function setval()

{
document.getElementById('tamilvote').parentNode.innerHTML=document.getElementById('tamilvote').parentNode.innerHTML.replace(/http:\/\/tamilmanam.net\/rpostrating.php\?s=N/gi, 'http://www.google.com/search?q=mastanoli.blogspot.com');
}
 
செய்து பார்த்துவிட்டு கூறவும்

வாழ்க ஹேக்கிங் :D

Jan 11, 2010

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க

சமிபத்தில் அதிக அதிகமாக நான் கேள்வி படுகிற விசயம், தமிழ்மணத்தில் நெகட்டிவ் வோட் விழுவதை பற்றி, சில பேர் வேண்டும் என்றும் வேண்டாம் என்று சொல்கின்றனர். யார் யார் நெகட்டிவ் வோட் போட்டார்கள் என்றே நமக்கு தெரியவில்லை... தெரிந்தால் ஏதாவது செய்யலாம் அல்லவா... :) சரி... நெகட்டிவ் வோட் முறை இருந்தால் தானே நெகட்டிவ் வோட்டு போடுவார்க்ள், ஏதாவது ஹேக் முறையில் அதை மாற்றிவிட்டால்... இப்படி யோசித்து நான் ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் மாற்றுவதற்கு வழி கண்டு பிடித்துள்ளேன்... 


நான் சொல்கிற வழியில் சென்றால் ஈஸியாக தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் தடுத்து விடலாம்.


முதலில் உங்கள் Blogger அக்கவுண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

Blogger -> Layout -> Edit HTML

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள், ஏதாவது தப்பா ஆகி அப்பறம் குய்யோ முய்யோன்னு குதிக்க கூடாது. :)

Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

tamilmaNam.NET toolbar code starts எனும் எழுத்தை வைத்து தேடவும், அதற்கு கீழ்
< script expr:src="http://services.thamizmanam.com/toolbar.php என்று ஆரம்பாகி இருக்கும், அந்த இடத்தில் < script id="tamilvote" expr:src="'http://services என்பதை சேருங்கள், அதாவது id="tamilvote" என்பதை இணைக்கவேண்டும்.

அடுத்து </head>
என்பதை வைத்து தேடுங்கள், கண்டு பிடித்த பிறகு
அதற்கு முன்பு இக்கோடிங்கை சேர்க்கவும்


<script>

function setval()

{

document.getElementById('tamilvote').parentNode.innerHTML=document.getElementById('tamilvote').parentNode.innerHTML.replace(/http:\/\/tamilmanam.net\/rpostrating.php\?s=N/gi, 'http://www.google.com/search?q=mastanoli.blogspot.com');

}

</script>

சேர்த்ததுக்கு பிறகு <body>
என்பதை தேடவும்
அங்கு <body OnLoad="setval()"> என்று மாத்தவும்... அதாவது பாடி டேக்கில் OnLoad="setval()" என்பதை சேர்க்க வேண்டும் அவ்வளவுதான்.

இனிமேல் உங்களுக்கு தமிழ்மணத்தில் ஒரு நெகட்டிவ் ஓட்டு கூட விழாது.

செய்து பார்த்துவிட்டு கூறவும்
வாழ்க ஹேக்கிங் :D

Nov 5, 2009

ஆஆஆஆ.... எனக்கு பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை...

பிடித்தவர் பிடிக்காதவர்...


யாருக்கு யாரை பிடிக்கும்... எப்ப பிடிக்கும்? ஏன் பிடிக்கும்?

யாருதான் இதை ஆரம்பித்தார்களோ.. உஸ்ஸ்ஸ்ஸ்... எந்த திரட்டிய பாத்தாலும் இதுதான் இருக்கு... இதில் இருந்து தெரியுது யாருக்கும் எழுதுறதுக்கு எதுவும் இல்லைனு... தப்பா நினைச்சுக்காதீங்க... எவ்வளவோ இருக்க எழுத... ஒருத்தரை பிடிக்காததை பற்றிதானா எழுதனும்?



எனக்கு பிடித்த எழுத்தாளர்களிடம் கூட இந்த பதிவு இருந்ததை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

நல்ல வேளை வினவு இப்படி பதிவு போடலை. :)

பிரபலமானவர்களை பிடிக்கலை என்று சொல்லி பிரபலமாகலாம் என்பது என்ன விதமான செயல்பாடு என்பது தெரியவில்லை.

பிடித்தவர்களை மட்டும் சொல்வது போல் அமைந்திருந்தால்... அது ஒகே.

ஏ ஆர் ரஹ்மானை பிடிக்காததற்கு அவர் விளம்பரபடத்தில் நடிப்பதை சொல்லிருந்தார்கள். AIDS நோயாளிகளுக்காகவும் லாபநோக்கமற்ற செய்திகளுக்காவும் அவர் விளம்பரபடத்தில் நடிக்கிறாரே... இளையராஜாவையும் விரும்புங்கள் அதே நேரத்தில் ஏ ஆர் ரஹ்மானை முதல் ஹாரிஸ் ஜெயராஜ் வரை வெறுக்காமல்.

நீங்க பிடிக்கலைன்னு ஒருத்தரை சொன்னா அது அவர் மேல் தெரிந்தே தெரியாமலோ கொஞ்சம் வெறுப்பு விதைப்பதற்கு சமம்.

பொதுவா, ஒருத்தருக்கு ஒருவர் பிடித்தவர் பிடிக்காதவர் என்று எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கின்றனர்? இன்று பிடிக்கும் ஒருவர் நாளைக்கே பிடிக்காமலும் போகலாம், பிடிக்காதவர் பிடிக்கவும் செய்யலாம்.... காலத்தில் அனைத்தும் மாற்றத்திற்கு உரியதுதான்... பிடிக்காதவர் என்று எழுத்துமூலமாக பதிவு செய்யும் போது, அது என்றென்றும் தங்கிவிடவும் அவரின் எண்ணமாகவும் இருக்கும்.

உலகத்தில் பிடித்தவர் பிடிக்காதவர், பிடித்தவை பிடிக்கதவை என்று எதுவுமே இல்லை. நாம் சார்திருப்பவர்களாலும் நம்மை சார்திருப்பவர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனக்கு ஒருத்தரை பிடிக்க காரணமே, அவரின் சில செயல்பாடுகள் என்னை கவர்ந்ததாலும் மேலும் அவரை பற்றிய மற்றவர்களின் எண்ணங்கள் அவரின் மேல் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாலும் அவரை எனக்கு பிடிக்க காரணமாய் அமைகின்றது.  இதே காரணம்தான் பிடிக்காததற்கும்...

மாற்றம் என்பது நம்மை சார்ந்து அனைத்தும் மாறிக்கொண்டிருப்பதுதான். மாறாமல் எதுவும் இல்லை, வாழ்கிற வாழ்க்கையில் அனைவரையிம் விரும்பி அனைவராலும் விரும்ப் படுகிறவர்களாக வாழ்வோம். 


Oct 26, 2009

இணையத்தில் உள்ள பரபரப்பு தகவல்களை உங்கள் வலையில் சேர்க்க

தமிழ்மணம், தமிழீஸ் போன்றவற்றின் பரபரப்பு அல்லது முக்கிய செய்திகளை எப்படி நமது வலைபக்கத்தில் சேர்ப்பது?  போன்ற கேள்விகளை சில பேர் எனக்கு மெயில் மூலம் கேட்டார்கள்.


தனித்தனியாக சொல்வதை விட மொத்தமாக ஒரு பதிவிட்டால் வலைபக்கம் வைத்துள்ள அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றுதான் இந்த பதிவு.


பல பேர்களுக்கு இது தெரிந்து இருக்கலாம், இது தெரியாதவர்களுக்காக...

மற்ற தளங்களின் பரபரப்பு செய்தியை வரவைப்பது மிகவும் சுலபம்.
நான் சொல்ல போகும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.


முதலில் RSS (நீங்க வேற நினைச்சுக்காதீங்க)  இதற்கு தமிழில் செய்தி ஒடை என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன், அதாவது ஒரு தளத்தின் செய்தி சுருக்கத்தை தருவது, அதாவது  தமிழ்மணத்தில் ஒரு பதிவு இணைகிறது என்றால் அந்த பதிவின் தலைப்பை தமிழ்மணம் செய்திஓடையாக வெளியிடும்.
ஒரளவுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.

இதை சில வழிகளில் நாம் வலையில் இனைக்கலாம்.
முதல் வழி

http://www.blogger.com/-> Dashboard -> Layout என்று செல்லவும்
Add a Gadget என்பதை கிளிக் செய்யவும்
பிறகு வரும் பாக்ஸில் Feed என்பதை செலக்ட் செய்யவும்
Feed URL என்பதை கேட்கும் அதில் நீங்கள் வேண்டிய RSS முகவரியை கொடுக்க வேண்டியதுதான்.

அவ்வளவுதான் :)


சில RSS முகவரிகள்

1.தமிழ்மணம் - http://www.tamilmanam.net/feed
2.தமிழீஸ் - http://www.tamilish.com/rss
3.தட்ஸ்தமிழ் - http://feedproxy.google.com/oneindia-thatstamil-all
4.தினமலர்(முக்கிய செய்திகள்) - http://rss.dinamalar.com/?cat=fpn (இது சரிவர இயங்குவதில்லை, மேலும் தினமலரின் செய்தி ஒடைக்கு)
5.தினமணி(முக்கிய செய்திகள்)  - http://www.dinamani.com/edition/rssSectionXml.aspx?SectionId=164 (மேலும் தகவல்களுக்கு)


வேறு வழி

http://www.google.com/uds/solutions/wizards/dynamicfeed.html என்ற தளத்திற்கு செல்லவும்,  இது பல செய்தி ஒடைகளை இனைத்து ஒன்றாய் தருகிறது.





Feeds Expression: என்பதில் உங்களுக்கு விருப்பமான சொல்லை தரலாம், அச்சொல் எந்த செய்திஓடையுடன் பொருந்துகிறதோ அதனை தறும், மேலும் "," என்று போட்டு எவ்வளவு வேண்டும் என்றாலும் இனைக்கலாம்.

Vertical, Vertical Stacked,Horizontal என்பது எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்பதை மாறி மாறி கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


Title: என்பதை கொடுக்கவும்.


எல்லாம் முடிந்தவுடன் Generate code எனும் பட்டனை கிளிக் செய்தால் ஸ்க்ரிப்ட் வடிவில் தயாரித்து கொடுக்கும் அதனை நமது வலையில் இனைக்க வேண்டியதுதான்.

பிளாக்ஸ்பாட்டில் இனைக்க
கோட் மொத்ததையும் காப்பி செய்யவும்
http://www.blogger.com/-> Dashboard -> Layout என்று செல்லவும்

Add a Gadget என்பதை கிளிக் செய்யவும்
பிறகு வரும் பாக்ஸில் HTML/JavaScript  என்பதை செலக்ட் செய்யவும்
தோன்றும் விண்டோவில் உங்களது கோட் பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்.

இவ்வளவுதான் முடிந்தது.


ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கே கேட்கவும்.

Oct 9, 2009

உங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிக்கபடும் எண்ணிக்கையை பதிவில் இணைக்க [Page view counter]

பிலாக் அல்லது வலைப்பக்கம் வைத்துள்ளீர்களா?



உங்கள் பிலாக்கின் அல்லது வலைப்பக்கத்தின் குறிப்பிட்ட பதிவை எவ்வளவு பேர் படித்தனர் என்ற விபரத்தை அப்பதிவில் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா?


எந்த பதிவை அதிக படியான பேர் படித்தனர் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளுதல் நல்லதுதானே, மேலும் அப்பதிவை வாசிப்பவருக்கும் அதை தெரிய படுத்தாலாம், அவரும் நமக்கு முன்பு இவ்வளவு பேர் படித்து சென்றுள்ளனர் என்று அறிந்து கொள்வார்கள்.


அதாவது, இங்கு எனது பதிவில் நீங்கள் பார்க்கலாம் "இப்பதிவை நீங்கள் xxxx வது நபராக வாசிக்கிறீர்கள்" என இருக்கிறது. இதே போல் உங்களது பிலாக்கிலும் செய்யலாம், மிகவும் எளிதான ஒன்று. நீங்கள் செய்ய வேண்டியது...

முதலில் வலை சொந்தமாக வைத்திருப்பது ஹிஹி.. :)


உங்கள் http://www.blogger.com செல்லவும்... பின்பு Layout --> Edit HTML என்று


வருசையாக கிளிக் செய்து செல்லவும்.


முதலில் Download Full Template என்பதை கிளிக் செய்து உங்களது பிலாக் டெம்ப்ளேடை சேமித்து கொள்ளவும்.





அங்கு Expand Widget Templates என்ற செக் பட்டனை கிளிக் செய்யவும்

<data:post.body/>  என்றதை கண்டுபிடித்து அதற்கு முன்பு


<b:if cond='data:blog.pageType == "item"'>
<div>
இதை நீங்கள்
<script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript'/>
வது நபராக வாசிக்கிறீர்கள்</div>
</b:if>


என்ற மேற்படி உள்ளதை சேர்க்கவும்


பின்பு சேமித்து விடவும். அவ்வளதுதான்... எவ்வளவு ஈசி பாத்தீங்களா?




In English


Hi, Are you running website or blog? Do you like to add page viewing counter in your site? Its so simple… here I’m explain how to configure in blogspot.


First goto www.blogger.com -> Dashboard -> Layout -> Edit HTML

Before start anything please click “Download Full Template” to save your existing code.
And enable “Expand Widget Templates”
Then find <data:post.body/>
Once find , add bellow code before that line

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div> You are
<script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript'/>
 person read this...
</div>
</b:if>

Then save it. That’s all.
If your having your own domain or site… just simple add my code under your </head>  tag that’s all.


இதை உபயோகப்படுத்துவர் கவனத்திற்க்கு...


<div> இதை நீங்கள் <script src='http://mastanoli.99k.org/blog/count.php' type='text/javascript' />  வது நபராக வாசிக்கிறீர்கள்</div>

இதை கீழ் உள்ளது போல் மாற்றலாம்.

<div> <script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript' /> already seen this </div>



நீங்கள் உங்கள் வசதி போல் மாற்றி கொள்ளலாம், எனது புரோக்ராம் படித்த நபர்களின் எண்ணை மட்டும் காட்டும் உங்களது இஷ்டம் போல் எதை வேண்டும் என்றாலும் இனைக்கலாம்.

மிக பெரிதாக காட்ட < h1 >  </h1> என்ற டேக்கில் எழுதவும்...

வேறு கலரில காமிக்க <div style="color:red"> என்று மாற்றலாம்.


இது மிகவும் எளிதான விசயம்.


மேலும் இதை பற்றி தெரிய
HTML Basic
More about DIV

Sep 15, 2009

உங்கள் பிலாக்கை பிரபலமாக்க

பிரபலமாக்கனுமா?

வழி #1 
முடிந்த அளவு அனைத்து தமிழ் திரட்டிகளிலும் உங்களின் பதிவு வெளியுடுமாறு செய்யவும், அதாவது தமிழ்மணம், தமிழ்ஸ்... இப்படி.

வழி #2 
நீங்கள் வெளியிடுவது அனைத்து மக்களுக்கு போய் சேர சர்ச் இஞ்சினின் உதவியும் வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது தேவை என்றால் கூகுள் வெப்சைட்டில் சென்று தேடுகிறோம், அதே போல்  உங்களது பதிவு கூகுள் சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், கூகுள் மட்டும் அல்ல பல சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், சில மாற்றம் செய்ய வேண்டும்.  பிலாக்ஸ்பாட் இயல்பாகவே இவ்வசதியை மறைத்து வைத்துள்ளது.

அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு
Dashboard -&gt; Layout -&gt; Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து. 









இப்படத்தில் இருக்கும் 'nofollow' என்பதை 'follow' என்று மாத்திவிடவும். பிறகு சேவ் செய்து விடவும்.


வழி #3
முதலில் கூகுள் அனலையிக்ஸ் என்ன என்று பார்த்து விடுவோம். நீங்கள் சொந்தமாக பிளாக் அல்லது வலை வைத்திள்ளீர்களா?   அவ்வலைக்கு வருகை தரும் பார்வையாளர்களின் சாரசரி பற்றி அறிய நினைக்கிறீர்களா?  நாம் இதற்காக மற்ற நிறுவனம் தயாரித்தவகைலையே உபயோகப்படுத்துகிறோம். இப்போது கூகுள் முற்றிலுமாக இலவசமாக இதை தருகிறது. 

இதை உபயோகப்படுத்துவதினால் 
1. கூகுள் SEO  நம்மை இனைத்து கொள்கிறது.
2. நமக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும்
3. வருகைதருபவர்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளளாம்
4. வருகைதருபவர்கள் எண்ணிக்கையும் பிறகு அவர்களால் படிக்கப்பட்ட பதிவும் எவை எவை என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
5. தேதி வாரியாக அறிந்து கொள்ளலாம்.
இன்னும் பலவேறு பலன்கள் உண்டு.

இதை நடைமுறை படுத்த

1. http://www.google.com/analytics/ உங்களை பற்றி பதிவு செய்யுங்கள்

கீழ்வரும் படங்களில் உள்ளது போல் தொடர்ந்து செய்யவும்












முதலில் பதிவு









உங்கள் தளத்னைப் பற்றிய தகவல்களை தரவும்.









உங்களை பற்றிய தகவல்களை தரவும்.



"Yes, Agree" என்ற டிக் மார்க்கை டிக் செய்து விட்டு "Create New Account" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

சரியான முறையில் உங்கள் கணக்கு பதிவாகிவிட்டால்







இப்படி ட்ராக்கிங் பேஜ் கமிக்கபடும்.

இதுதான் மிகவும் முக்கியம்.

இதில் உள்ள கோட் காப்பி செய்து

உங்களது பதிவில் போடவேண்டும்.





அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு

Dashboard -&gt; Layout -&gt; Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து.






என்று இருப்பதை தேடி அதற்கு முன்பு அக்கோட போடவேண்டும்.






 






பிறகு சேவ் செய்து விடுங்கள்.

உஸ் அப்பாட... அவ்வளவுதான் முடிந்தது.

பிறகு நீங்களும் சொல்லலாம் "நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்" :D

நீங்க விரைவில் மிகவும் பிரபலமடைய வாழ்த்துக்கள்.



கடைசியா ஒன்னு...:  பிலாக்கை பிரபலமாடைய வைக்க,  அடிக்கடி பதிவிடுதலும், பின்னூட்டத்துக்கு பதிலளித்தலும் முக்கியம். ரெம்ப பெரிய எழுத்து திறமைலாம் தேவையே இல்லை. அட, எந்த திறமையும் தேவையே இல்லை. பல பேரு இப்படிதானே இங்கே குப்பை கொட்டுறாங்க.


கட்ட கடைசியா இன்னும் ஒன்னு...: உங்களின் புரோபைலின் பெயர் பெண்பாலில் வைத்து இருந்தால்... ஹிட்டோ ஹிட்டுதான்.