Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

Aug 13, 2010

சாவு கண்டிப்பா உண்டு உங்க வீட்டில்

எனது நண்பருக்கு இப்படி ஒரு SMS வந்தது, வந்ததில் இருந்து பாவம் மனிதன் மிகவும் கவலையா இருக்கார். இப்படிமா SMS அனுப்புவாங்க? கொஞ்சமாவது அறிவு வேண்டாம், அந்த நம்பருக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. ஏதாவது ஒரு SMS அனுப்ப வேண்டியது அதை எல்லாருக்கும் பார்வோர்டு செய்ய சொல்லுவது இல்லையென்றால் ஏதாவது தீமை ஏற்படும் என்று பயமுறுத்துவது. இப்படி பட்ட ஆசாமிகளை என்ன செய்தால் தகும்?



Today is Friday and 13th, Say GOD SAVE ME & forward this to 10 people else death will definitely occur in your family. No stupid comedy please send back this sms.




வர வர மொபயிலில் SMS தொல்லை அதிகமாய் விட்டது, எல்லாத்துக்கும் SMS அனுப்ப ஆரம்புச்சுட்டாங்க. வீடு லோன் இப்ப அதிகமா வருது... எப்படி இதெல்லாம் தடை செய்றதுன்னு தெரியலை, மெயிலில் இருப்பதுபோல் ஸ்பாம் இருந்தால் நல்லாருக்கும் :)

சரி நார்மலான SMS வந்தா உடனே அழித்திடலாம், ஆனால் எனது நண்பருக்கு வந்தது போல் இருந்தால். எதுக்கு இப்படி கிருக்கு ஆட்கள் இருக்க வேண்டும்? "இதை செய் இல்லாட்டா சாவு கண்டிப்பா உண்டு" என்ன ஒரு பயமுறுத்தல், இவர்களை போலீஸில் ரிப்போர்ட் செய்ய யாராவது வழி சொல்லுங்களேன் பிளீஸ்.

விதி சரிதானா?

வேறு ஒரு தளத்தில் இதை பார்த்தேன், பிடித்திருந்தது... அதான் பகிறலாமே என்று...






முதலிலே சொல்லிவிடுகிறேன், கடவுள் மேல் எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது, ஓரிறை கொள்கை கொண்டுள்ளேன். என்னுடைய கடவுள் நம்பிக்கையவும் இதோடு தொடர்புபடுத்தாதீர்கள்.

சரி விதி ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

விதி சரிதானா?

மிகவும் குழப்பதிற்கூறியது.

அனைவராலும் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு காரணத்தினால் விதியின் மேல் பாரத்தை போட்டுள்ளுனர்.

அனைத்து மதத்தினரும் விதியை ஏற்றுக்கொண்டுள்ளனர்… அதாவது மத நூல்கள் கூறியதில் ஏதாவது ஆராய்ந்து கேள்வி கேட்டோம் ஏன்றால், உடனடியாக விதியைதான் காரணம் காட்டுவார்கள். இது மட்டுமல்ல, நம்மால் ஏற்றூக்கொள்ள முடியாத, புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று நடக்கும் போதும் விதிதான் பழியை ஏற்றுக்கொள்கிறது.

பாவம் விதி, பாவப்பட்டு பாரம் சுமக்கின்றது.

நமக்கு அறியாத நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு விசயங்கள் உலகத்தில் நடந்து கொண்டுள்ளன… அனைத்துக்கும் விதியை காரணம் காட்டமுடியுமா?

விதியின் படிதான் அனைத்தும் நடக்கின்றனவா?

விதி ஏற்றுக்கொள்ளும் அனைத்து மதவாதிகளும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், ஆதாவது, விதி கடவுள் நம்பிக்கையை தகர்த்துவிடும்.

விதியின் படி எது நடக்க இருந்த்தோ, அதுதான் நடந்த்து.

இப்போது நான் விதியை நம்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம், நான் எழுதும் இந்த பதிவும் முன்பே நான் இவ்வாறு எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்ட்தாருக்கும். ஆதாவது, விதியை நான் தூற்றி எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்டது.

உலகத்தில் நடக்கும் விசயங்கள், முன்பே தீர்மானிக்கப்பட்டது, நாம் செய்யும் நன்மையும் தீமையும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை. இதன் மூலம், நன்மை செய்பவர்களே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது அடிபட்டு போகின்றது இல்லயா? விதியை நம்பும் பொழுது, இவற்றையும் நம்ப வேண்டயதுள்ளது.
நன்மை செய்யும் ஒருவர் சொர்கத்திற்கு செல்வார் என்பதும், தீமை செய்யும் ஒருவர் நரகத்திற்கு செல்வார் என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபடுகிறது. கடவுள் ஒருவர் செய்த நன்மை தீமையை பொருத்து தீர்ப்பளிப்பார், ஆனால் விதியின் படி ஒருவர் எங்கு செல்ல போகிறார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன்படி கடவுளுக்கே தீர்ப்புக்கே ஒரு கேள்விக்குறி? கடவுள் ஏன் நரகத்திற்கு செல்பவர்களை படைக்க வேண்டும்? இன்னார்தான் சொர்கத்திற்கு செல்பவர்கள் என்று எவ்வாறு முடிவெடுக்க படுகிறது. விதியின் படி ஏன் நரகம் செல்பவர்கள் தீமைகளால் ஆழ்படுகின்றனர். விதியை நம்பினால் இவற்றையும் நம்ப வேண்டியதுள்ளது.


இதை படிக்கும் போது மிகவும் குழப்பமாக தோன்றலாம், ஆனால்.... உண்மையாகவே உள்ளது, பொதுவாக எல்லா மதத்திலும் எல்லாம் உன் விதிபடிதான் நடக்கும் என்பார்கள் அல்லது கோள்களின் படி நடக்கும் என்பார்கள் எப்படியோ நமது வாழ்க்கையை வேறு சில விசயங்கள்தான் தீர்மானிக்கின்றன, ஆனாலும் அதை நம்ப(லாம்???) கூடாது.

கஷ்டகாலம் படுச்சவுடனே தலை சுத்த ஆரம்புச்சுடுச்சு :(

மத நம்பிக்கையின் படி, நல்லது செய்தால் சொர்க்கமும்/முக்தியும்; கெட்டது செய்தால் நரகமும்/மீண்டும் பிறப்பு கிடைக்கும் இல்லையா? இப்போது ஒருவர் ஏதோ நல்லது செய்கிறார் என்றால் அவர் ஏற்கனவே நல்லது செய்வார் என்று தீர்மானிக்க பட்டுள்ளது இல்லையா, அதே போல் ஒருவர் ஒருவரை கொலை செய்து விட்டார் என்றால் அதாவது தப்பு செய்துவிட்டார் என்றால் ஏற்கனவே இது தீர்மானிக்க பட்டதாகத்த்னே அர்த்தம் அதாவது இன்னார் இன்னாரால் கொலை செய்யபடுவார் என்று, அப்படி கொலை செய்பவருக்கு தீமையிம் செய்யப்பட்டவர் வேறு ஒன்றையும் அடைவார்கள் விதி/கோள்கள் படி. சோ கொலை செய்தவர் தண்டனைக்கு உள்ளாகிறார் அதாவது நரகத்திற்கோ மீண்டும் மனித பிறப்போ எடுக்கிறார், அப்படி என்றால் இன்னார்தான் இப்படிதான் என்று ஏற்கனவே தீர்மானிக்கபட்டுள்ளது இல்லையா?

இதை நினைத்தாலே மிகவும் குழப்பமாக உள்ளது, தயவு செய்து இதை பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் மிகவும் நன்று.

Oct 12, 2009

விஞ்ஞானிகளும் முடநம்பிக்கைகளும்

படிச்சவனும் எல்லா முடநம்பிக்கையிம் இருக்கும் என்பது அடிக்கடி உறுதி செய்யபடுகிறது..  இப்போது நான் பார்த்து அதிர்ச்சி அடைந்தது விஞ்ஞானிகள் வேறு ஒரு விஞ்ஞானிகானியை நரபலி கொடுக்க முயன்றது.

குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரை இரு மூத்த விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.



மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Defence research and development establishment) விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா.
இவர் 4 நாட்களுக்கு முன் குவாலியர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.


அதில், தனது கணவருடன் பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகளான காமேஸ்வர ராவ், பாஸ்கர் ஆகியோர் அவரை கடத்திச் சென்று நரபலி கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.


ராணுவத்தின் ரக்ஷா விஹார் காலனியில் வசிக்கும் காமேஸ்வர ராவ், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி சுசில் குமாரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.அங்கு சுசில் சென்றபோது பாஸ்கர் ஏதோ பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது சுசில் குமாருக்கு குடிக்க பானம் கொடுத்துள்ளனர் இரு விஞ்ஞானிகளும்.அதை அருந்திய சுசில் குமார் மயங்கியுள்ளார். இந் நிலையில் கூர்மையான கத்தியுடன் இருவரும் அவரை நெருங்கியுள்ளனர். அப்போது பாஸ்கர் மந்திரங்களை ஜெபித்தபடி அருகே வந்ததால் அந்த சத்தத்தில் சுசில் குமார் முழித்துள்ளார். தன் கழுத்துக்கு அருகே கத்தியுடன் இரு விஞ்ஞானிகளும் நின்றிருந்ததைப் பார்த்து தப்பியோட அவர் முயன்றுள்ளார். அப்போது இருவரும் அவரை பிடித்து இழுக்கவே, உதவி கேட்டு குரல் எழுப்பினார் சுசில். இந்த சத்தம் கேட்டு வாட்ச்மேன் ஓடி வரவே அவரை விட்டுவிட்டனர் இரு விஞ்ஞானிகளும். ராவின் வீட்டிலிருந்து சுசில் குமார் தப்பியோடுவதை அண்டை வீட்டினரும் வாட்ச்மேனும் பார்த்துள்ளனர். தப்பியோடுகையில் வலது கையில் ஏற்பட்ட காயத்துடன் கண்டோண்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் சுசில்குமார்.


நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் இப்படிப்பட்ட விஞ்ஞானிகளும் இருப்பது வெட்கக்கேடு.
 
நன்றி தட்ஸ்தமிழ்
 
 
மிகவும் வருத்ததுகுறிய செய்தி.
 
சுசில் குமார் முழித்ததினால் தப்பித்தார் இல்லை என்றால்? நினைக்கவே கொடுறமாக இருக்கிறது.
 
அவர்கள் அப்படி செய்ய காரணம் என்ன?
 
தமிழகத்தை தவிர பலமாநிலங்களில் மூடநம்பிக்கை வேரூன்றி போய் உள்ளது... ஆனால் படித்தவர் மத்தியில் அதுவும் விஞ்ஞானியாக இருப்பவர்களிடம் இதுபோல் இருக்க காரணம் என்ன? நரபலி கொடுப்பதினால் என்ன நடந்து விட போய்கிறது? இதில் மதத்தை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.  ஒருவர் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அவர்கள் வளர்ந்த விதமும் சமுதாயமும் காரணமாய் அமைகின்றன...
 
இதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மிகச்சிறந்த நிறுவனங்களில்தான் கல்வி பயின்று இருப்பார்கள். அறிவியல் கல்வி கொடுக்கும் பல்கலைகழகம், ஒழுக்க கல்வியும் அனைத்து பகுத்தறிவும் முறையும் கற்பிக்கனும்.

இது மட்டும் அல்ல, நமது ISRO வில் கூட, ராக்கெட் ஏவும் போது நாள் பார்த்து,  இலுமிச்சை வெட்டிதான் அவற்றை ஏவுகிறார்களாம். 



பெரியார் போல அங்கு யாரும் இருக்காததுதான் காரணம் என்றால், முதலில் பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் அதிக அளவில் பரப்பவேண்டும்.  பெரியார் எதிர்த்த அளவிற்க்கு மூடநம்பிக்கைகளை யாரும் எதிர்திருப்பார்களா என்பது சந்தேகமே. பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு என்ற கருத்தை மட்டும் விளங்கொண்டுள்ளவர்களிடமும் பெரியாரின் கருத்துக்கள் போய் சேரவேண்டியது மிக அவசியம்,  பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிகொள்பவர்கள், அவரின் அனைத்து கருத்துகளையும் அனைவரிடமும் சென்றடையுமாறு செய்யவேண்டும் இதுதான் எனது எண்ணம். அப்போதுதான் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் படித்தவர்களிடம் இருந்து மறையும்.